Saturday, May 29, 2010

பஸ் வண்டிக்காதல்

குளிர் நிறைந்த காலைப்பொழுதில்
பஸ் வண்டிக்காக தரிப்பிடத்தில் நான்
தொப்பை வயிறனாய் – ஆடி அசைந்து
வந்து சேர்ந்தது இல 155 பஸ்


ஜன்னல் ஓரத்தில் ஒரு காலி ஆசனம்
ஓடிச்சென்று அமர்ந்து கொண்டேன்
தலை முடியைக் குழப்பிய ஜன்னல் காற்றும்
காதில் ஒலித்த ரகுமான் இசையும்
காதல் மோகம் தூண்டியது

கண்ணை மூடி கற்பனையில் மிதந்த என்னை
கலங்கடித்துச் சென்றது மல்லிகைப்பூ வாசனை
கண்ணைத் திறந்து பூவைத் தேடிய என்னை
கண்ணால் கிறங்கடித்தாள்-அந்த வாசனைப் பெண்
தலை முடியை முக்காடிட்ட அவளை நான் நோக்க
அவள் என் கண்ணில் அவள் முகம் பார்த்தாள்
அவள் தைரியம் என்னை உசுப்பி விட்டது



முதல் பார்வையிலே மோனாலிசா ஓவியமாய்
உதடு பிரியாமல் அழகு காட்டிய அவள் முகம்
மூளையில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது
நேரில் நின்ற அவளைப் பார்த்தேனா – அல்லது
இதயத்தில் பதிந்த அவள் முகம் பார்க்கின்றேனா
என்று பிரித்து உணரமுடியாமல் திணறும் போது
கைக்குழந்தையுடன் ஒரு இளம் தாய்
ஆசனம் விட்டெழுந்து வண்டாக மலர் அருகே சென்றேன்

அவள் நோக்கித் திரும்ப - அவள் காதோர தங்க முடி
தோடின் மினுமினுப்பை மறைத்தது
அவள் என்னை நோக்கித் திரும்ப – அவள் அகன்ற கண்ணுடே
வேற்று கிரகம் நோக்கி பிரயாணம் ஆனேன்
அப்பொழுது காதில் ஒலித்த உயிரே பாடல்
நான் தமிழ் அவள் முஸ்லிம் என்பதை நினைவூட்டியது
ஆனால் நெஞ்சில் தோன்றிய உணர்வு
அவள் முகத்தைக்காட்டியது – மதத்தைக் காட்ட வில்லை.


பாதையின் திருப்பத்தில் வண்டி திருப்ப
அவள் கரம் என் கரம் மேல் பட்டது
தேவதை கரம் பற்றிய கணம்
இதய முள் செக்கன் முள் ஆனது
என் கையின் படபடப்பு
அவள் உடலை அதிர வைத்தது போலும்
கையை மீட்டவள் –இமைகளால் உணர்வு பேசினாள்
ஜன்னலை நோக்கியவள் – கதவை நோக்கி ஓடி
மணியை அடித்தாள்
அவள் இறங்கப் போவதை உணர்ந்த மனம்
இறப்பதாய் உணர்ந்தது.
தரிப்பிடம் அடைய விரைவாய் இறங்கியவள்
மீண்டும் தலையை உள்ளெடுத்து
இமைகளால் சிறகடித்து விட்டு மறைந்தாள்
மீண்டும் அதே வாசனை
வீசிக்கொண்டு இருப்பதோ என் இதயத்தில்.

Wednesday, May 26, 2010

திருமணமாகாதவள்


அன்று அழகாய் இருந்திருப்பாள்
இன்று அசிங்கமாய் போய்விட்டாள்
வயது முதுமையை நோக்கி நகர
உடலும் தள்ளாட்டம் காண
பார்வையிலே விடை காணா வினாக்கள் நிரம்ப
உள்ள வெறுப்புகள் உதட்டில் நச்சரிப்பாக
ஓயாத புறுபுறுப்பால் பலரைக் குழப்பும்
தன் பிழை உணராத அபலை அவள்

இருப்பது அவள் தங்கை வீட்டில்
தங்கை கணவன் வாய் பேசா ஜீவராசி
வாசியானது அவள் வாழ்க்கைக்கு
வார்த்தையால் பரிதாபப் படுவோர் பலர்
அதுவே அவளை மெல்லக் கொல்லும் விஷம்

வேலைகள் செய்ய மாட்டாள்
வெட்டியே அவள் வேலை
வீண் பேச்சே அவள் தொழில் – ஆனால்
தங்கை பிள்ளைகளை உயிராய் நேசிப்பாள்
தாங்க முடியாத அன்பு – தண்டனையே
புரியா வயதுப் பிள்ளை வார்த்தை
விம்மவைக்கும் அவளை
அவளை சந்தோஷப்படுத்திப் பார்க்க
படைத்தவனுக்கும் தெரியவில்லை போலும்

Sunday, May 23, 2010

இயற்கையை மீறிய பிறப்புகள்.....(நெகிழ்ந்த இதயம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.)


1. இரண்டு முகம் கொண்ட குழந்தை : Diprosopus


லலி என்ற இந்தக்குழந்தைக்கு  2 ஜோடி கண்கள்  , 2 மூக்கு , 2 வாய் மற்றும் ஒரு ஜோடி காது.இந்த சின்ன பெண்ணின் பெற்றோர் இவளை இறைவனின் கொடை என்று கொண்டாடுகிறார்கள்.இவ்வாறு பிறப்பவர்களை Diprosopus or Craniofacial Duplicatiopn என்பர்.அதாவது இரட்டைப் பிறப்பு பூர்த்தி செய்யப்படாத பிறப்பு.லலி நான்கு கண்களை ஒரே நேரத்தில் திறப்பதோடு ,இரண்டு வாயாலும் உணவை அருந்துகிறாள்.


2. ஒரு கண் குழந்தை: Cyclopia



இந்தக் குழந்தை பிறந்தது நைஜீரியாவில்.இந்தக் குறைபாடு  என்று Cyclopia அழைக்கப்படும்.இது நெற்றி ஒழுங்காகப் பிரிக்கப்பாடாததாலே இரண்டு கண்களுக்குப் பதிலாக ஒரு கண் உருவாகிறது.


3. இரண்டு தலைக்குழந்தை : Craniopagus parasiticus


இந்த  எகிப்திய குழந்தையின் பெயர் மனார் மாகத்.மாகதிற்கு மண்டையோடு ஒட்டியவாறு காணப்படுகின்றது.இவ்வாறாக இதுவரை என்பது குழந்தைகள் பிறந்ததாகப்பதிவாகியபோதும் மூன்று குழந்தைகளே நவீன வைத்தியம் மூலம் காப்பற்றப்பட்டுள்ளன.

4.வரிப்புலிக் குழந்தை  : Harlequin-type ichthyosis


இக்குழந்தை  பாகிஸ்தானில் மார்ச் 2010 பிறந்தது.இந்தக் குழந்தையின் உருவம் sci-fi ALIEN படத்தில் வரும் பாத்திரத்தின் அமைப்பை ஒத்து இருந்தது.இந்தக்குழந்தை உயிர் வாழ்வதற்கான சந்தர்ப்பம் 10 வீதமே உள்ளதாக வைத்தியர் தெருவித்துள்ளனர்.

5. வெளிப்புறத்தில் இதயம் கொண்ட குழந்தை : Ectopia Cordis
இதயத்தை உரிய இடத்தில் வைத்தால் இக்குழந்தை சாதாரண குழந்தையை ஒத்திருக்கும் என  வைத்தியர் தெருவித்துள் ளனர்.

6. தவளைக் குழந்தை : Anencephaly

 இக்குழந்தை பிறந்தது 2006 ல் சாரிக்கொட்இல் .இக்குழந்தைக்கு கழுத்து இல்லை.இக்குழந்தையின் முக அமைப்பு அச்சு அசலாக தவளையை ஒத்து இருந்தது.இவ்வாறான குழந்தைக்கு மூளை நரம்பு பாதிக்கப்பட்டு இருப்பதால் பிறந்து சில மணிகளிலே இறந்துவிடும்.

7. பல காலுள்ள குழந்தை :Polymelia


இந்தக் குழந்தையின் பெயர் லக்ஷ்மி.பிறந்தது இந்தியாவில்.
இக்குழந்தையால்  எழுந்து நிற்கவே முடியாது என்பது வருத்தமே.


8.  உலகிலே மிகச்சிறிய குழந்தை : 21 weeks and six days


ஆக்டோபர் 24, 2006 ல் பிறந்த அமிலா டைலர் ,21 கிழமை 6 நாட்களில் பிறந்துள்ளது.23 கிழமைக்குள் பிறந்த குழந்தைகள் உயிர் வாழ்ந்ததில்லை.ஆனால் 10 அவுன்ஸ் அமிலா சுவாசித்து ,அழுதது ஆச்சரியமே.
இக்குழந்தை தற்போதும் நலமாகவே உள்ளது.

9. உலகில் பெரிய குழந்தை :




ஆறு மாதத்திற்கு முன் ஈரானில் பிறந்த இக்குழந்தையின் தற்போதைய நிறை 20 கிலோ  ( 44பவுண்ட்ஸ் ).ஆனால் இக்குழந்தை பிறகும் போது சாதரணமாக 8 பவுண்ட்சில் இருந்ததாகவும் ஆனால் தொடந்து உணவு உண்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Saturday, May 22, 2010

சினிமாவில் என்னைக் கவர்ந்த ஜோடிகள்


தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜோடிகளைப் பார்த்தாகிவிட்டது.அனால் அதில் ஒரு சில ஜோடிகளே என்றும் நினைவில் பதிந்து இருக்கின்றன.
என்னைக்கவர்ந்த ஜோடிகள்.

1.       கமலஹாசன் – ஸ்ரீதேவி
சிறுவனாக இருந்த போதுதான் மூன்றாம் பிறை படம் பார்த்தேன்.அதில் வரும் கண்ணே கலைமானே பாடல் இன்று வரை மனதை விட்டு அகலவில்லை.அப்பொழுது அந்த காட்சி அமைப்பே அந்த அளவிற்கு மனதை கொள்ளை கொண்டது.அந்த புரியாத வயதிலும் ஏதோ கற்பனை உலகை காட்டியது.(அந்தப்பாடலிற்கு பல சிறப்புக்கள்;கண்ணதாசனின் கடைசிப் பாடல் என்பது கவலை தோய்ந்த சிறப்பு).
அதன் பின்பு கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் நான் ரசித்த படங்கள் ஏராளம்.
(மூன்று முடிச்சு,பதினாறு வயதினிலே ,வாழ்வே மாயம் ,குரு ,சிவப்பு ரோஜாக்கள் ,வறுமையின் நிறம் சிவப்பு,.....)
அன்பே சிவம் படத்தில் கமல் விபத்துக்குள்ளாகும் அந்த லாரியின் பெயர் என்ன தெரியுமா ?
................ஸ்ரீதேவி ...................
கமல் காரணம் இல்லாமல் எதையும் குறீயீடாக பயன் படுத்த மாட்டார் என்பது அவரது படங்களை கூர்ந்து அவதானித்தோருக்கு வெளிப்படை.



2.       கார்த்திக் – ரேவதி
மௌன ராகம் படத்தில் ஹீரோ யார் என்று என்னிடம் கேட்டால் நான் கண்டிப்பாக கார்திக்கைதான் சொல்வேன்அந்த அளவுக்கு அவரின் நடிப்பு அந்தப்படத்தில் என்னைக் கவர்ந்தது.




3.       விஜய் – ஷாலினி
இந்த ஜோடியை யோசிக்கும் போது எப்படி இருந்த விஜய் இப்படி ஆயிட்டாரே என்ற போல இருந்தது.காதலுக்கு மரியாதையில் இந்த ஜோடி அந்த அளவிற்கு ஜொலித்தது.மீண்டும் ஜோடி சேர்ந்த படம் கண்ணுக்குள் நிலவு.இப்ப விஜய் super man, spider man, bat man  வரிசையில் இணைந்தமையால் இனி அவருக்கு ஜோடி ஹொலிவூட்ல தான் கிடைப்பாங்க.



4.       வடிவேலு – கோவைசரளா

நகைசுவையில் இவர்கள் பண்ணிய லூட்டியை மறக்கவே முடியாது.






5.       T.R.ராஜேந்தர் –மும்தாஜ்

ஒரேவரியில் சொல்லப்போனால் Oscar Performance.



T.R  ஐயும் மும்தாஜையும் சேர்த்ததால ஓட்டுப் போடாமல் போயிடாதிங்க.

Monday, May 17, 2010

எண்ணச்சிதறல்கள்

ஊமை ஏதோ ஒன்றைப் புரிய வைக்க
சைகை  காட்டிகொண்டு இருக்கின்றான்
வாய்  பேசுபவனோ அவனைப் பார்த்து
வாய் விட்டுச்சிரிக்கின்றான்

பஸ் வண்டியில் பிச்சை எடுக்கத்தடை
அரசாங்க  அறிவிப்பு
வெளிவிவகார அமைச்சர்
உதவித்தொகை  கோரி ஐரோப்பியா பயணம்

கடற்கரையில் காதலன்
காதலியை துரத்த
வயது சென்ற தம்பதியர்
அதை வெறுப்புடன் நோக்குகின்றனர்.

Saturday, May 15, 2010

தீர்ப்பு ....................(ஒரு பக்க கதை)

வீடு திரும்பிக்கொண்டு இருந்த மனேஜர் ராகவனுக்கு வார்த்தையால் விபரிக்க முடியாத ஒரு உணர்வு இதயத்தில் அலையாக மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டு இருந்தது.அதற்கு காரணம் அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவம்.புதிதாக இணைந்த கல்பனா மதிய உணவை உண்பதற்காக கான்டீன் சென்ற போது பியூன் ராம் அவளது கைப்பையினுள் எதையோ தேடிக்கொண்டு இருந்தானாம்.தண்ணீர் போத்தலை எடுக்க வந்த கல்பனா “ஐயோ கள்ளன்” என்று கத்த சக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவனை அடிக் கத்தொடங்கிவிட்டார்கள்.கூச்சல் சத்தம் கேட்டு வெளியே வந்த ராகவனுக்கு ராமின் வீங்கிய முகத்தில் வடிந்த இரத்தமும் கல்பனாவின் கலங்கிய கண்ணீரும் எதை புரிய வைத்ததோ தெரியவில்லை அவனை நோக்கி “Get out !” என்று கத்தி விட்டு தன் அறை நோக்கி சென்றுவிட்டார்.அவனும் பெரிதாக கெஞ்சி கூத்தாடாமல் தலையை தொங்கப்போட்டிட்டு வெளியே பொய் விட்டான்.ராமுக்கு ஒரு 18 வயது இருக்கும்.உடல் வளர்ச்சி பெரிதாக இல்லாத காரணத்தால் வயது குறைந்தவனைப்போல் காணப்படுவான்.யாரிடமும் சகஜமாகப் பழகுவதில்லை.அவனது உழைப்பை நம்பியே அவன் குடும்பம் என்று யாரோ சொல்லி ராகவனுக்கு ஞாபகம்.

கல்பனா பார்ப்பவர்களை மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகி.கலகலப்பே அவளது அடையாளம்.இன்று ராமிற்கு இவ்வளவு கொடூரமாக அடி விழுவதற்கு காரணம் அவளுக்கு முன் தங்களை வீரன் எனப் பலர் வெளிப்படுத்த முயன்றமையே.ராகவன் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கவும் அவளிடம் காணப்பட்ட ஈர்ப்பே காரணம்.
வீடு வந்த ராகவன் மனைவியிடம் நடந்த சம்பவத்த சொல்ல “இந்த ஏழை எளியதிற்கு திருட்டு இரத்தத்தில் ஊறியது,இப்பவாவது புரியுதா?”எண்டு அவள் கேட்க ராகவனும் தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டான்.

அன்று பௌர்ணமி.மனைவியை தனியா அழைத்துக்கொண்டு பூங்கா சென்று இருந்தான் ராகவன்.மனைவியிடம் மனம் விட்டுப்பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அருகில் இருந்து வந்த குரல்கள் நன்கு பரீட்சயமானதாய் இருந்தது.ஒன்று கல்பனா மற்றது அலுவலகத்தில் வேலை செய்யும் திலக்.
“திலக் போது இடங்கள்ள வச்சி இப்படி முத்தம் தார வேலை எல்லாம் வைக்காத,உன்னால தான் நான் டிராம போட்டு ராம வேலையை விட்டுத் தூக்க வச்சான்...................சீ .... போடா ..”

ராகவனுக்கு அவனது மனச்சாட்சி காறி உமிழ்ந்தது போல இருந்தது.உடனடியாக எழுந்தவன் “நான் ஒருவரை அவசரமாக சந்திக்கணும் வா “என்று மனைவியை அழைக்க அவள் எரித்து விடுவது போல் அவனைப் பார்த்தாள்.

Monday, May 10, 2010

amma - mother

MOTHER'S ARE THE SWEETEST.




Our mother is the sweetest and
Most delicate of all.
She knows more of paradise
Than angels can recall.

She's not only beautiful
But passionately young,
Playful as a kid, yet wise
As one who has lived long.

Her love is like the rush of life,
A bubbling, laughing spring
That runs through all like liquid light
And makes the mountains sing.

And makes the meadows turn to flower
And trees to choicest fruit.
She is at once the field and bower
In which our hearts take root.

She is at once the sea and shore,
Our freedom and our past.
With her we launch our daring ships
Yet keep the things that last.









படித்ததில் பிடித்தது.
(என் சொந்த ஆக்கம் அல்ல )

Thursday, May 6, 2010

நினைவு நாள்.........(கவிதை)


வாழ்க்கையிலே மறக்க நினைக்கும் நாள்
ஆனால் நினைவிலோ நீங்காத நாள்
தம்பி உயிர் நீர்த்த கோர நாள்


ஓராண்டு நினைவு நாளில் சவக்காலை நோக்கி நான்
இறந்த போது வந்த கண்ணீர் வரவில்லை
இளமை ஞாபகம் மின்னல் வெட்டியது
கடந்து சென்ற அவன் நண்பன்
ஆயுதம் இன்றி கோரமாய் தாக்கினான்
இவன் வாழ்வதற்கும் அவன் சாவதற்கும்
ஏது சம்பந்தம்
புரிய விளைகிறது என் மனசு
மயான பூமியில் கால் வைக்க
மீளாத்துயில் வாசகம் வரவேற்கிறது
கல்லறைகள் கடைசி தரிப்பிடம் என்கின்றன
தம்பியின் கல்லறை முன்னாள் அம்மா
கண்களாள் வெறித்து நோக்கிய வாறே
கண்கள் ஜீவன் அற்றுப்போய்ற்று போலும்
ஆனாலும் அவள் இதயத்தில் குருதி வடிவதை
என் இதயம் உணர்கிறது
கல்லறை மேற்புறத்தில் தம்பியின் நண்பன்
மல்லிகைப்பூக்கள் கொண்டு எழுதிய தம்பி பெயர்
என் மூளையிலே முள்ளால் தைக்கிறது
கொளுத்திய ஊதுபத்தி தம்பியின் வாசனையை
நினைவூட்டுகிறது
எங்கோ காற்றிலே கலந்து வந்த திருவாசக அடிகள்
சூழ்நிலைக்கு பொருத்தமாயே அமைகிறது
அம்மா மூட்டிய மெழுகுவர்த்தியை அணைக்க முயலும் காற்று
அவள் வாழ்க்கைப் போராட்டத்தை குறும் படமாக்கிறது

வாழும் போது போட்டியாளனாக நினைத்த தம்பி
எதிலும் முரண்டு நிண்ட நாட்கள்
எதிர் பேச்சு பேசிய பொழுதுகள்
கையோங்கிய தருணங்கள்
வாக்கு வாதப்பட்ட சமயங்கள்
அனைத்திலும் என்னையே குற்றவாளியாக்கியது
என் இதயம்
வாழும் போது வீரிட்ட வரட்டுக்கௌரவம்
வாழாவெட்டியாய் முடங்கியது
நான் அழுதால் அம்மா ஓவென்று அழுவாள்
உணர்வுகளைப் புதைத்துக் கொண்டே
அம்மாவை அழைக்கிறேன் தம்பியிடம் விடைபெறுவதற்கு
அவள் பிச்சையாய் கேட்கிறாள் ஒரு நிமிடம்
இந்த நடிகனின் நடிப்பு தோற்கிறது
நிலம் நோக்கி விழுகிறது உப்பு நீர்
அம்மா கரம் பற்றி விடை பெறுகிறேன்
ஆனால் இதயம் மிகையாய் துடிக்கிறது வெறுப்பில்

Tuesday, May 4, 2010

என்னவள் ..........(கவிதை)

கடற்கரை நோக்கி நான்
என் கரம் பற்றி என்னவள்
கல்லூரி முடிந்த பின்
அவளைக் காண்பதென்றால்
பௌர்ணமி தரிசனமே

ஆயிரம் பொய் பேசி வந்திருப்பாள்
ஆனாலும் குற்றமாய் தெரியவில்லை
கல்லூரியில் சண்டையிலே வளர்ந்த காதல்
பிரிவிலே வைராக்கியம் ஆயிற்று





அவள் விழி நோக்கையில் விண்மீன்கள் மின்னுகின்றன
அவள் நாசிக்காற்றிலே கதிர் வீச்சு தாக்குகிறது
தோளிலே சாய்கையில் கதாநாயகனாக பூரிக்கிறது மனசு
தலை கோதும் அவள் விரல்கள் இதயத்தை வருடுகிறது
அந்திவானம் காட்டும் வர்ணஜாலம்-தொற்குது அவள் சிரிப்பில்
பொங்கிவரும் அலைகள் மௌனமாகிறது அவள் காலடியில்
பிரிவிலே வரம் பெற்றாளோ
பிரியவே முடியவில்லை – அவளை