Sunday, October 31, 2010

பசங்க கலாட்டா


நாம் மனம் சோர்ந்து இருக்கும் போது குழந்தைகளுடன் எமது நேரத்தைச் செலவிடுவோமானால் எமது மனதின் இறுக்கம் தானாகவே தளர்வடைந்துவிடும்.காரணம் நாம் குழந்தைகளுடன் இருக்கும் வேளை ,அவர்கள் எம்மை தமது உலகத்திற்கு அழைத்துச்சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தின் மீது எந்தப்பயமும் இல்லை,இந்த நிமிடம் சந்தோசமாக இருக்க வேண்டும் அது மட்டும் தான் குறிக்கோள்.

நான் இணையத்தில் ரசித்த சிறுசுகள்.இவங்க என்ன பேசி இருப்பாங்க என்று எனது கர்ப்பனையில்.

1. தூக்கத்தில இருக்கிற என் முன்னாடி சரக்க வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க,குடிகாரப்பசங்க

2. அப்பா,நீ குடிக்கிறதுக்குக் காரணம் அம்மாதான்,நான் குடிக்கிறதுக்குக் காரணமும் அம்மாதான். தாய்ப்பால் கிடைக்காத ஏக்கத்தில் நான் குடிக்கன்,உனக்கு என்னப்பா பிரச்னை?


3. இன்றைக்கு சாப்பாடு சூப்பரா இருக்கோணும் சாமியோவ்.4. அப்பா,நீ புத்தகம் வாங்கித்தராட்டி,நான் இப்படிதான் பண்ணுவன்.5. ஒரு கட்டில் இல்ல,ஒரு தலையணை இல்ல.என்ன யாருமே கண்டுக்கிற இல்ல.என்னப் புரிஞ்ச ஒருத்தன் நீதாண்ட ஜிம்மி.6. என்னப் பார்த்து சிரிக்கிறிங்களா?
மாப்பு ,உனக்கும் இருக்குடா ஆப்பு.7.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.நம்ம சப்பாத்து சூப்பர் இல்ல.

8. பயந்திட்டீயா?சும்மா ,விளையாட்டுக்குத்தான் இப்படிப் பண்ணன்.
9. நான்தாங்க அமெரிக்காவின் அடுத்த Under Taker (Wrestling Player).பசங்களா ! கொஞ்சம் பைக்ல ஏத்திவிடுங்கப்பா.
10. எப்பூடி,நம்ம கோச்சிங்
Sunday, October 24, 2010

பஞ்ச் டயலாக்ஸ்

 நாங்களும் சொல்லுவம் இல்ல,கேட்டுக்கோ,
count down start,


************
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான் ( many Girl Friends) ஆனா
கை விட்டுடுவார் (சப்ப wife),
நல்லவங்கள
ஆண்டவன் நிறைய சோதிப்பான் (No Girl Friends) ஆனா கை விட மாட்டார் (Double Super wife)***************
கண்ணா... நல்ல கேட்டுக்கோ... உடம்புள்ள sugar இருக்குறவனும் மனசுல figure இருக்குறவனும் நல்லா தூங்குனதா சரித்திரமே இல்ல....

 

***************

பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
...
இதயத்தின்
வாசனையில்
நட்பு

 

***************  

வாழ நினைக்கும் பெண்ணுக்கு ,
வசந்தம் மட்டும் சொந்தம் .
தாகம் கொண்ட பெண்ணுக்கு
தண்ணீர் மட்டும் சொந்தம் .
மோகம் கொண்ட பெண்ணுக்கு ,
...
காமம் மட்டும் சொந்தம் .
காதல் கொண்ட பெண்ணுக்கு ,
நான் மட்டுமே சொந்தம் ...........Diz is 4 my sweet heart.............

  
***************

முதலில் கருவறை
அடுத்து வகுப்பறை
நாளை மணவறை
முடிவில் கல்லறை
அதற்குள் ஏன் சாதி மதம்?

 

  ***************

நன்றி:fb நண்பர்கள்.

Sunday, October 17, 2010

ரோபோ குறும்படம்

திறமை பலரிடம் இருகின்றது,ஆனால் எல்லோருக்கும் அது வெளிப்படுவதில்லை.காரணம் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.ஒருவர் கன்னி முயற்சி செய்யும் போது,தட்டிக்கொடுத்து பாராட்டுவதால் எங்களுக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.ஆனால் பாராட்டுப் பெறுபவரின் மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவிருக்காது.அது அவரை அம்முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க உந்துசக்தியாக இருக்கும்.

இந்தகுறும்படத்தைப் பார்க்கும் போது ,இது அவர்களின் முதல் முயற்சி என்று கண்டிப்பாகக் கூறமுடியாது.அத்தனைநேர்த்தியாக காட்சிகள்ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.பின்னணிக் குரல் மிக அருமையாகஉள்ளது.அலைக்சின் நடிப்பு செம கச்சிதம்.

 இதன் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்கள்:
கீர்த்தனன்
ஆனந்த அலைக்ஸ்
ஷர்மிஇதில் நான் பெருமைப்படும் விடயம் ஈழத்தில் இருந்து பெங்களூருக்கு படிக்கச்சென்றவர்களின் கூட்டுமுயற்சி.

Friday, October 15, 2010

மைக்ரோசாப்ட் 2019

எதையெல்லாம் கற்பனையாக நினைத்தோமோ அவையெல்லாம் கண்முன்னே வந்து நிற்கின்றன.கற்பனைக்கும் நிஜத்துக்குமான தூரம் மிகவும் குறுகிவிட்டது.
காரணம் தொழில்நுட்பம்.
பத்துவருடத்துக்கு முன்னாடி என் நண்பன் சொன்னது இன்னமும் மனதிலே நிற்கிறது.அவனது மாமா வெளிநாட்டில இருந்து கம்ப்யூட்டர் கொண்டுவந்திருக்கிறாராம்.அதை வைப்பதற்காக AC ரூம் கட்டுகிறாராம்.மாமா அதில வேலைசெய்யும் போது சொல்லுகிறன் ,வந்து பாரு.என்றான்.
எனக்கு  இப்பவே பார்க்கணும் போல ஆசையா இருக்கின்றதுடா ,தயவு செய்து கூட்டிக்கொண்டுபோய் காட்டண்டா என்றேன் நான்.
இல்லைடா.அதுக்குள்ளே தூசி போனாப் பழுதாகிடுமாம்.அதனால AC ரூம் கட்டின பிறகுதான் பாவிக்க இயலும் எண்டு மாமா சொல்லிருக்காரு என்றான் அவன்.


இப்ப என்னிடமே மேசைக்கணணி ஒன்றும் மடிக்கணணி ஒன்றும் இருக்குது.(சுய தம்பட்டம் இல்லைங்கோ............).

கீழே உள்ளவீடியோவைப் பாருங்க,இன்னம் என்னவெல்லாம் ஆகப்போகுது என்று.

Monday, October 11, 2010

பிரபுதேவா விவாகரத்து

விடியாத இரவில் தூக்கத்தைத்தொலைத்துவிட்டு
வெறித்துக் கொண்டிருந்தான் பிரபு,அதன் வருகைக்கு
தலைமாட்டுக் கடிகாரம் படபடத்தது
அவன் இதயத் தாளத்திற்கு

நாளைய பொழுதை நினைக்க
நிலாக்குளிரிலும் நெற்றியில் பனிப்பூத்தது
நாளை அவனது விண்ணப்பத்திற்கு பதில்
அவனுக்குப் போட்டியாக,இல்லை
அவன் சார்பாகவே விண்ணப்பித்தது
அவன் மனைவி-இல்லை சரண்யா
திருமணத்தில் ஒத்த மனம்
பிரிவிலும் ஒத்தது ,எத்தனை ஜோடிப்பொருத்தம்

இமையும் கண்ணும் ஒத்த முனைகள் ஆயின
போர்த்துக்கொள்ள மறுத்த கண்கள்
கண்ணீரில் குளிர்த்துக் கொண்டிருந்தது
போதும் என்று மனம் கெஞ்சியும்
கண்களுக்கு அது புரியவில்லை

மணமேடையில் சரண்யா பார்த்த –ஓரக்கண் பார்வை
வெள்ளைச் சுவரில் ஓவியமாய் தெரிந்தது
நீண்ட நாளின் பின் அழகாய் தெரிந்தாள் –அவள்
பழைய நினைவு – படமாய் ஓட
உதடுகள் விரிந்தன


தலைமாட்டுச் சிணுங்கல் சத்தம் உரக்க
கண்விழித்தான் – மிரட்டியது நேரம்
பம்பரமாய்ச் சுழன்று ஆடைக்குள் புகுந்தான்
வாசலில் வண்டி புகைப்பிடிக்க ,
சிட்டாய்ப் பறந்தது.

நீதிமன்றக் கட்டடத்தைப் பார்க்க
இதயம் பனிக்கட்டியாய் – உறையத்தொடங்கியது
இதயம் இறுக்கமாவதை உணர்ந்தவன்
மெதுவாக ஏறினான் படிகளில்
உறைந்தது உருகுவது போல உணர்வு
நிமிர்ந்தான்-தலை குனிந்து கடந்து சென்றாள் சரண்யா

பெரிதாய் ஒலித்தன அவன்-அவள் பெயர்கள்
மெலிதாய் கேட்டது-அவர்கள் விண்ணப்பத்தின் பதில்
கேட்டது தான் கிடைத்தது
ஓய்ந்திருந்த மனம் புயலாய் மாறத்தொடங்கியது
பதறிக்கொண்டே வாசலை நோக்கினான்
பனியூடே அவள் பயணித்துக் கொண்டிருந்தாள்
கண்ணீர் வாயிலை மூடிப் பார்வையை மறைத்தது.
பழக்கப் பட்ட சுருதி குறைந்து கொண்டிருந்தது
அது ...........................................
விடை தேடிய மனம் ,உடனே சொன்னது
அது சரண்யாவின் கொலுசொலி
 பிற்குறிப்பு:நடிகர் பிரபுதேவா பற்றியது என்று நம்பிவந்தால்,அதற்க்கு கம்பனி பொறுப்பல்ல..................

Saturday, October 9, 2010

வெடிமுத்து................(கலாட்டா)

கல்லூரிப் படிப்பு முடிந்துவிட்டது.ஆனால் அதன் நினைவுகளோ அடிக்கடி கண்முன்னே வந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.கல்லூரி வாழ்க்கைக்கு பொலிவு கொடுப்பது கூடப்படிக்கும் நண்பர்கள் தான்.தமிழ் சினிமாவிற்கு எப்படி ஒரு வடிவேலோ,அதே போல எங்களுக்கு நண்பன் வெடிமுத்து.என்ன பெயரே மார்க்கமாக இருக்கா?,இதுதாங்க நாங்க அவனுக்கு வச்ச பட்டம்.இந்தப் பெயர் வந்த வரலாறே தனி.


அன்று தான் கல்லூரியின் முதல் நாள்.பெரிதாக பேச்சுவாக்கு இல்லை,காரணம் அன்றுதான் அறிமுகம். வாட்டசாட்டமான ஒருத்தர்.நடை வேறு செம கம்பீரம்,வந்தவர் பான் கீ மூன் (அதாங்க நம்ம ஐ.நா. சபைத்தலைவர்) அளவிற்கு தலையைக் குலுக்கி கைகுலுக்கி விட்டு எனக்கடுத்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.அப்பொழுது ஒரு ஊழியர் கையில் ஒரு புத்தகக்கட்டுடன் வந்தார்.அனைவரும் ஒரு புத்தகம் வாங்க வேண்டும்.பணம் இல்லாதவர்கள் பெயரை இந்தக் கடதாசியில் எழுதி விட்டு நாளை தரமுடியும்என்று கூறிவிட்டு முன்னாள் இருந்த மாணவனிடம் புத்தகங்களையும் கடதாசியையும் கொடுத்து விட்டு மற்றைய வகுப்பிற்கு சென்று விட்டான்.புத்தகத்தின் விலையோ மிகக்குறைவு.பெரும்பாலானவர்கள் பணத்தை கொடுத்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்.நாலைந்து மாணவர்கள் கடதாசியில் தங்கள் பெயரை எழுதிவிட்டு புத்தகத்தை எடுத்தனர்.எனக்கு பக்கத்தில் உள்ளவர் திரு.வெடிமுத்து என்று விரைவாக கிறுக்கி விட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டார்.எனக்கு அவர் பெயரைப் பார்த்தவுடன் ஒரே சிரிப்பு.இந்தக்காலத்தில் இப்படி ஒரு பெயரா?என்று ஆச்சரியத்துடன் அவரிடம் மெதுவாக உங்க பெயரு என்று கேட்க ரூபன் என்றார்.அப்ப இது என்று கடதாசியக் காட்ட நாக்கை மடித்துக் கொண்டு கண்ணைச் சிமிட்டினார்.அப்பொழுது அந்த ஊழியர் வந்து மீதியாக இருந்த புத்தகங்களையும் பணத்தையும் எண்ணி விட்டு “யாரப்பா பணம் கொடுக்காதவங்க என்று கேட்க நாலு கை உயர்ந்தது.இல்லையே ஐந்து பேரு கொடுக்கலையே என்று கூறி கடதாசியைப் பார்த்து ?யாரப்பா திரு.வெடிமுத்து ? என்றானே பார்க்கலாம் என்னா  ஒரு சிரிப்பு................... வகுப்பே ஆடியது.


அன்றையில் இருந்து ரூபன் வெடிமுத்து ஆகிவிட்டார்.
அன்றையில் இருந்து அவன் ரகளைக்கு பஞ்சம் வைக்கவில்லை.

அன்று ஒரு நாள் ATM இல் பணம் எடுக்கப் போன வெடிமுத்து பெருமிதச் சிரிப்புடன் வந்து கொண்டிருந்தார்.என்ன சிரிப்பு பலமா இருக்கு எண்டு கேட்க,நான் பணத்தை எடுத்திட்டு கீழே பார்க்க ஒரு 50 ரூபா இருந்திச்சுடா,உடனே எடுத்து பாக்கெட்ல செருகிட்டன்.அப்பதான் நினைச்சன் வேற எவனாச்சும் மோசடி பண்ணிட்டுப் போய் அதில விழுந்தது தானோ இந்த ரூபா நோட்டு.அநியாயத்திற்கு நம்ம மூஞ்சி வேற வெப்காம்ல மாட்டி இருக்குமே.அதான் ஒரு காரியம் பண்ணன் ,நேரா வெப்காம் முன்னாடி நின்னு நான் 50 ரூபா மட்டும் தாங்க எடுத்தன் எண்டு சொல்லி அந்த 50 ரூபாய காட்டிட்டே வந்திட்டன் என்றான்.அன்றைல இருந்து எப்ப ATM க்கு போனாலும் வெடிமுத்துட முகம்தாங்க ஞாபகம் வருது.


ஒரு காலகட்டத்தில் வலைப்பதிவு எழுதுதல் எமது கல்லூரியில் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருந்தது.நண்பர்கள் பலரும் அதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுருந்தனர்.அன்று வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டுயிருந்தது.வெடிமுத்துவோ பேனா மூடியைக் கடித்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் ஏதோ எழுதிட்டு இருந்தான்.நான் எட்டிப் பார்க்க கையால் மறைத்துக் கொண்டு “இப்ப பார்த்தால் பதிவு படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்காது என்றான்.முடியல்ல.............,என்று தலையில் அடித்துக்கொண்டு நான் திரும்பினேன்.பாடம் முடிய அவசரமாக வெளியே போய்விட்டான்.என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.அப்படி என்ன தான் எழுதி இருப்பான்.படித்துத்தான் பார்ப்போமே என்று திறந்தால்,


லண்டன் மாநகர வேலைப்பளுவுடனும் இடைவிடாத பட்டப்படிப்புச் சுமைக்கும் மத்தியிலும் வம்பன் உங்களுக்கு சங்கமிக்கின்றான்.....................................................

அடங் கொய்யால ,ரவுசு பண்ணறதுக்கும் ஒரு அளவு இல்லையா?தலை சுற்றுவது போல இருந்ததால் மூடி வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
இனி நேரம் கிடைக்கும் போது வெடிமுத்து வந்து பயம் காட்டுவார்..............