.................ஆயுத எழுத்து.........................
Thursday, April 29, 2010
காதல் பிரிவு .....(கவிதை)
.................ஆயுத எழுத்து.........................
Tuesday, April 27, 2010
முகமாற்றம்
கீழே உள்ள படங்கள் உள்ளுணர்வுகள் முகத்தில் எப்படி பிரதி பலிகின்றன என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.
இந்தப்படத்தை மிக நுணுக்கமாக அவதானித்தாலே அவரது முக மாற்றங்களை அவதானிக்க முடியும்.ஏனெனின் அவர் இந்த முக பாவங்கள் யதார்த்தமாக வெளிப்படுபவையே.

இந்த இரண்டு தொகுப்புக்களும் யதார்த்தமானவை அல்ல.ஆனாலும் எத்தனை விதமான பாவனைகள்.
பூனை கூட எப்படியெல்லாம் போஸ் குடுக்குது பாருங்களேன்.
நடிகர் rowan atkinson (இப்படி சொன்ன புரியாதுங்க,அதாங்க நம்ம Mr.Been)அவர்களுடைய முகபாவங்கள் உலகப்பிரசித்தம்.எப்படி தூள் கிளப்பிருகார் பாருங்க.
எச்சரிக்கை :கண்ணாடி முன்னாடி இப்படி எல்லாம் பண்ணிப்பார்க்க கிளம்பாதிங்க.
Monday, April 26, 2010
புரியாத புதிர்
Wednesday, April 21, 2010
இளையராஜாவும் பின்னணி இசையும்
2.
3. ரெட்டைவால் குருவி திரைப்படத்தில் தலைப்பில் வரும் இந்த இசை மனதிற்குள் சந்தோசத்தை கண்டிப்பாக பரவவிடும்.
5.
6. BraveHeart
7. இசை மேதை பீத்தோவன் ,மொசார்ட் போன்றவர்களுக்கு ராஜா சார் எந்த வகையிலும் சளைத்தவர் இல்லை.இதைக்கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்.
Saturday, April 17, 2010
சார்லி சாப்ளின்
நேற்று சார்லி சாப்ளின் அவர்களின் பிறந்த தினம்.உலக சினிமா எனும் பாதையில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் பயணித்தார்கள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களில் சார்லி சாப்ளின் அவர்களின் பாதச்சுவடே இன்றும் தெளிவாகத் தெரிந்து கொண்டிருகின்றது என்பது அவரின் சாதனையின் வெளிப்பாடே.ஒரு கருத்திற்கு உலக சினிமாவை திரைப்படமாக எடுத்தால் அதில் நகைச்சுவை நடிகராக சார்லி சாப்ளின் அவர்களையே தெரிவு செய்யவேண்டும்.
1889 ம் ஆண்டு 16 ம் திகதி இரவு 8 மணிக்கு அந்த அழகிய புன்னகை ஹென்னா என்ற ஏழையின் வயிறில் இருந்து பூமியை வந்தடைந்தது.
குடிகாரத் தந்தை அவரது தாயை விட்டுபிரிந்து சென்றமை அவருக்கு குழந்தைப் பருவத்திலையே வறுமையின் வலியை கற்பிக்க ஆரம்பித்தது.மது விடுதியில் பாடுவதே அவரது தாயின் தொழில்.அதுவும் காலப்போக்கில் அவளை கைவிட்டது. சார்லி சாப்ளினின் அவர்களின் முதல் கலையுலக அறிமுகமும் அதே மது விடுதியில் தான்.தனது ஆறு வயதில் தாய் தொண்டை கட்டி பாடமுடியாமல் அவமானப்பட்டுக் கொண்டு நிற்கையில் யாருமே எதிர்பார்த்திராத வண்ணம் மேடை ஏறிய அந்த குழந்தையின் வினோத நடனம் போதையில் இருந்தவர்களையும் விசில் அடிக்க வைத்தது.
அவமானங்கள் இல்லாமல் வெகுமானம் இல்லை என்பதற்கு சாபிளின் வாழ்கை நல்லதொரு எடுத்துக்காட்டு.சிறு வயதிலையே அளவுக்கு மீறிய வலிகள்,தாழ்வு எண்ணங்கள் பின்னாட்களில் அவர்களை மற்றவர் முன்னிலையில் தன்னை முக்கியம் உள்ளவனாக காண்பிக்க முயலும்.இதற்கு ஹிட்லர் மட்டும் அல்ல சாப்ளினும் சிறந்த உதாரணமே.
பசிக்கின்ற குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்கு முடியாத அந்த தாய் மேற்கொண்ட தந்திரம் கதை கூறி உறங்கவைப்பது.அந்த தாயின் மனவெழுச்சியில் வந்த கதைகளே பின்னாளில் உலகையே கட்டிப்போட்ட
“The kid”, ”Modern times”, ”City lights”, “circus” போன்ற சாப்ளினின் படங்களின் கரு.
வறுமையும் பசியும் வலி என்றால் தாயின் பிரிவு அதை விட மேலான வலி என்பது அனுபவித்த ஒவ்வொரு ஜீவனுக்கும் தெரியும்.அந்த வேதனையும் சாபிளினுக்கு கிடைத்தது.அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவனது அண்ணன் சிட்னி. சாப்ளின், சிட்னி இருவருக்கும் தாய் ஒன்றே தவிர தந்தையர் வேறானவர்கள்.ஆனாலும் அவன் சாப்ளினுக்கு இறுதி வரை தாயாகவே இருந்தான்.
பிள்ளைகளை பிரிந்த அந்த தாய் பைத்தியமாக மாறியமையும் அந்நியர் போல் தந்தை வீட்டில் நடத்தப்பட்டமையும் சாப்பிளினுக்கு பிறர் வலியை கற்றுக்கொள்வதை இலகு படுத்தியது.
வாழ்க்கைச் சக்கரம் துன்பத்தை மட்டும் கொண்டது அல்லவே.நாடகக் கம்பெனியில் இணைந்து கொண்டபின் அவர் முன்னேற்றத்தை நோக்கி நகரத்தொடங்கினார்(தொழில் ரீதியாக).
வாலிப வயதில் எண்ணங்களின் சுனாமியாக வரும் காதல் அவருக்கு விதிவலக்காக இருக்கவில்லை.அவர் காதல் கொண்டது ஹெட்டி எனும் பாலே நடன தாரகை மீது.ஆனால் அந்த காதல் தோல்வியிலே முடிந்தது.பின்னாளில் சாப்ளின் பலரை மணந்த போதும் யாரும் ஹெட்டியின் வெற்றிடத்தை நிரப்பவில்லை.
இழப்பதற்கு துணிச்சல் உடையவனே பெறுவதற்கு தகுதி உடையவன்.போராட்டம் கண்டு பின்வாங்காமல் முட்டி மோதியவனே வெற்றியாளன்.அத்தகைய வெற்றியாளனே சாப்ளின்.
சாப்ளின் படங்களில் என்னை கவர்ந்த விடயங்கள் பல.அவற்றில் ஒன்று இளைத்தவன் பலவானை புத்தியால் ஜெயிப்பது.இதை அவர் திரையில் காண்பிக்கும் அழகு அபரிதம்.அவரது படங்களில் நகைச்சுவை மாத்திரம் இராது.ஒரு ஆழமான செய்தி மின்னிக்கொண்டே இருக்கும்.அவர் திரையில் எப்படி தனது குள்ள உருவத்தோடு பலவான்களோடு போரிட்டாரோ அதே போன்று நிஜத்திலும் அமெரிக்கா அரசாங்கத்தின் முதலாளித்துவ கருத்தை திரை மூலம் சாடினார்.இதுவே அமெரிக்கா அரசாங்கம் அவரை நாடு கடத்த காரணமாய் இருந்தது.
சாபிளின் வாழ்கையில் விநோதங்களுக்கு பஞ்சமே இருக்கவில்லை.அவரது திருமனவாழ்க்கையை நோக்கினால் 28 வயதில் 16 வயது மில்ரெட் ஹரிஸ் , 34 வயதில் 15 வயது லிட்டா கிரே, 46 வயதில் 16 வயது பவுலட் கொடார்ட் என தொடர் திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றுக்கொண்டார்.கடைசியாக தனது 53 வயதில் திருமணம் செய்த ஊனா என்பவருடனே மரணம் வரை வாழ்ந்தார்.
பின்னாளில் பணம் போதும் போதும் என்றளவு சேர்ந்த போதும் மனதில் ஒரு ஏக்கம் நிரந்தரமாக அவரை பின்தொடந்த போதும் தான் உள்ளத்திற்குள் அழுதுகொண்டே உதட்டால் புன்னகைத்து உலகையே வயிறு குலுங்கவைத்தவர் சாப்ளின்.இந்த சாதனையை அவர் செய்தது தன் உடல் மொழியாலே.
உலகில் அவதரித்த விஞ்ஞானிகளிலே தலை சிறந்தவர் என போற்றப்படும் சார்.ஐன்ஸ்டீனே “என்னைப் போன்ற விஞ்ஞானிகளை விட சாப்ளினே உயந்தவர்” என பகீரங்கமாக பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.
சாப்ளின் முதல் முதலாக 1940ல் வெளிவந்த “The great defector “ ல் பேசி நடித்தார்.இப்படத்தின் இறுதிக்காட்சியில் அவர் பேசிய வசனமே ,இது வரை வெளிவந்த திரைப்படங்களில் பேசப்பட்ட வசனங்களில் உயர்வானதாக போற்றப்படுகிறது.
1972 ம் ஆண்டு தன் 82வது வயதில் தள்ளாடி வந்து ஆஸ்கார் விருது (வாழ்நாள் சாதனையாளர்) பெற்ற அந்த சாதனையாளர் 1977ல் ஒரு கிருஸ்துமஸ் தினத்தில் உலக மக்களின் கண்ணீராக பூமியில் கரைந்தார்.
Friday, April 16, 2010
கண்ணால் காண்பதும் பொய்யே....



Tuesday, April 13, 2010
நான் ரசித்த திரைப்படம்
Production: Karunakaran, Arun Pandian
Direction: Vasantha Balan
Star-casts: Magesh, Anjali, A. Venkatesh and others
Music: Vijay Anthony and G.V. Prakash
Monday, April 12, 2010
ரெமோ
Saturday, April 10, 2010
அன்பின் மாறுபட்ட பரிணாமம்
Friday, April 9, 2010
மனநோயாளி
கடையில் வேலைகளுகிடையில் அங்கே வேலைசெய்யும் மனவக்கிரகம் பிடித்த ஊழியர்களுக்கு விளையாட்டுப்பொருளும் இந்த பாபுவே.
Tuesday, April 6, 2010
தேவதையின் தரிசனம்
நீண்ட நாளைக்கு பின்பு அலுவலகத்தில் இருந்து நடந்து வீடு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஜீவாவிற்கு.காரணம் அன்றைக்கு அலுவலக வண்டி பழுது.அவனது நண்பன் குணா தன்னோட வரச்சொல்லி கேட்டபோதும் சுரேஷ்ர வீடுதான் தூரம் அவன ஏற்றிசெல்ரா மச்சான் எண்டு மறுத்து விட்டான்.
அலுவலக வாயிலை தாண்டிய பொது அவனது வெயர்வையை உறிஞ்சிசென்ற தென்றலும் மாலை மயங்கிய வண்ண வானமும் அவனுக்கு புத்துயிர் ஊட்டின. கைக்கடிகாரமோ நேரம் 6.30 ஐ காட்டியது.வீதியில் வெகு சிலரே சென்றுகொண்டிருந்தனர்.வீதியின் அமைதியில் அவனது மனம் மௌனராகம் பாடிக்கொண்டே வந்தது.
வீதியோரத்தில் நிண்ட ஆலமரத்தை கண்டபோது அதில் சாய்ந்து விட்டு
செல்ல அவனது மனம் ஆசைப்பட்டது .அதற்கு காரணமும் உண்டு. அவனது பால்ய காலத்தை சொல்லப்போனால் இந்த மரத்தின் கதாபாத்திரத்தையும் உள்வாங்கியே ஆகணும். அத்தனைக்கு அவனது இளமை கொண்டாட்டத்துக்கு நண்பர்களோடு நண்பனாக தோள்கொடுத்த ஒன்று.அப்பொழுது அம்மரத்தில் குடும்பம் நடத்தும் பறவைகள்வந்த வண்ணம் இருந்தன
நடக்கத் தொடங்கியவனுக்கு பின்னால் கேட்ட
அவளது நேர்த்தியான உடை அலங்காரமும் அம்சமான அழகும் அவனை ஒரு நொடியில் கலக்கிவிட்டது.அவளோ ஒரு மாறுதலும் காட்டாமல் ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தாள்.
ரேணிகுண்டா படத்தை பார்த்து விட்டு அதில் வருகின்ற ஹீரோயினை வாய்வலிக்க தன் நண்பர்களுக்கு வர்ணித்தவனுக்கு அச்சுஅசலாக அதே முகச்சாயல் கொண்ட பெண்ணை அதுவும் இத்தனை இனிமையான குரலோடு கண்டதனால் ஜீவா ஒரு நிமிடம் பிரமை பிடித்து நின்றுவிட்டான்.
எது நடந்தாலும் பரவாயில்லை அவளிடம் பேசுவது என்று மனதுக்குள் முடிவு பண்ணிவிட்டு அவளுக்கு சமாந்தரமாக வந்த பொது உதடுகள் பிரியவில்லை, வார்த்தைகள் எச்சிலோடு கரைந்து விட்டன.இதய துடிப்போ எகிறி குதிக்க ஆரம்பித்துவிட்டது.
ஒரு நிமிடம் கண்களை மூடி உதடுகளை அசைத்தவன் ,தன் வறண்ட தொண்டையில் இருந்து “ஹெலோ ....” என்றான்.”ஹலோ அங்கிள் ..” என்று பதில் வந்தது கூட வந்த வண்டுப்பயலிடம் இருந்து.ஓங்கி அவன்ட தலைல கொட்டணும் போல இருந்தது ஜீவாக்கு.ஆனால் அவள் பையனின் தோளில் செல்லமா தட்டினாள்.ஆனால் அவள் வாய் திறக்கவில்லை.
அடுத்து அவளிடம் என்ன பேசலாம் என மூளையை குடைந்து கொண்டு வந்தவனுக்கு தனது வீடு தெரிய யாரவது வீட்டில் இருந்து பார்க்கிறார்களா?
என நோட்டம் விட்டு விட்டு அவளை நோக்கி திரும்பினான். அவளோ தனது வீட்டுக்கு பக்கத்தில் புதிதாக கட்டிய வீட்டு படலையை திறந்து உள்ளே சென்று கொண்டிருந்தாள்.அழுவாத சிரிப்பதா என்று தெரியவில்லை அவனுக்கு.
ஆனாலும் அவளை இனி அடிக்கடி தரிசிக்கலாம் என்ற சந்தோஷத்தில் தன்னை மறந்த ஜீவா தனது அலுவலக சூட்கேசினை ,கிட்டார் மாதிரியில் பிடித்து “ ஓமனப் பெண்ணே .....” என்று சற்று சத்தமாவே பாடிவிட்டான்.
மறதியில் மூடாமல் விட்ட படலையை மூட வந்த அவள் ஜீவாவை பார்த்து சிரித்த சிரிப்பில் தேவதையை தரிசித்து மீண்ட ஜீவா “மோனாலிசா தோற்று விட்டாள் என்று கத்திக்கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினான்.
இன்று முதல் அந்த வீதியிலும் ஒரு “ரோமியோ – ஜூலியட்”






















