Saturday, July 16, 2011

சீனாக்காரன் நட்பு,ரொம்பவே சுவாரஸ்யம்

கடந்த மாதம் இரண்டு சீன மருத்துவப் பொறியலாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.ஐயோ போதும்,போதும் என்றாகி விட்டது.காரணம் அவர்களுக்கு ஆங்கிலத்தை இலக்கணத்தோடு கதைத்தால் புரியாது.அது கூடப் பரவாயில்லை,நான் தான் தவறுதாலாக் கதைத்ததாகக் கொண்டு இரண்டு கண்களையும் 90% மூடி(பூஞ்சிக்கண்ணன்கள்),பற்களை இடுக்கிக்கொண்டு உடம்பு குலுங்கச் சிரிப்பாங்களே,ஒரு சிரிப்பு;அந்தக் கொடுமையை எங்கே போய்ச்சொல்லுவது..

அவர்களோடு சாப்பிடுவதே ஒரு சுவாரஸ்யம்,ஒரு  submarine ஐ அலேக்காக முழுங்கிட்டு,வாயைக் கோணலாகப் பிடித்துக் கொண்டு,ஏதோ அதன் சுவை பிடிக்காதது போல பாவனை காட்டிக் கொண்டிருப்பான். அப்பொழுதுதான் நான் இரண்டு கடி கடித்திருப்பேன்.நான் சாப்பிட்டு முடிக்க விடிந்திடும் என்று நினைத்தானோ தெரியல்ல,டாய்லெட் போய் விட்டு வாறன் எண்டு ஒருவன்  போனான்.நான் நாலாவது கடி கடிக்க ஆரம்பிக்க வந்திட்டான்.நான் ஒன்றுக்கா போனாய் என்று கேட்க,தலையை ஆட்டிவிட்டு இரண்டுக்கு என்றான் பவ்வியமாக.உண்மையைச் சொல்லப் போனால் அந்த நேரத்திற்குள் என்னால் முழுமையாக ஒன்றுக்கே போய் இருக்க முடியாது.
உலக மகா வேகமையா.... 

Saturday, July 2, 2011

மூஞ்சில கை வைத்தால் யாருக்குத்தான் கோவம் வராது.

இப்பொழுதெல்லாம் என் வாழ்கை வண்டி ரொம்ப வேகமாகப் போயிட்டு இருக்கு.பிடிப்பு,வெறுப்பு என்று எதுவுமே பார்ப்பது இல்லை.நான் திருத்தும் இயந்திரங்கள் போல இயங்க என் மனதும் பழக்கப் பட்டுவிட்டது.ஆனால் அதுவும் ஒரு வகையில் நல்லது தான்,ஏன் என்றால் எந்த சோகமும் பாதிக்காது அல்லவா?சரி மேட்டர்இக்குப் போவோம்.

இந்த ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் சதா அதைப் பற்றிதான் நினைப்பு.என் உணர்வுகளின் வடிகாலாகவே அதைக் கருதினேன்.பலர் பாரட்டும் படி எழுதிக்கிழிக்கா விட்டாலும் ஏதோ என் மனதில் என் எழுத்து ஓர் ஆத்ம திருப்தியை ஏற்ப்படுத்தித்தான் இருந்தது.
இப்பொழுது இருக்கும் வேலைப் பளுவில் தினமும் மெயில் செக் பண்ணுவதற்கே நேரம் கிடைப்பது அபூர்வமாகப் போய்விட்டது.இந்த நிலையில் ப்ளாக் எழுதுவதற்காகவா நேரம் கிடைக்கப் போகிறது?

ஆனாலும் என் வலைப்பூவில் 100 followers ஐப் பார்ப்பதற்கு ஒரு அங்கலாய்ப்பு இருந்து கொண்டிருந்தது.அதை இந்தப்பதிவு மூலம் அடைந்து விடவேண்டும் என்பதுதான் என் ஆசை.பார்ப்போம் யார் அந்தப் புண்ணியவான் என்று????


என்னடா ஏதோ தலைப்பை வைத்துவிட்டு அவன் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தால் இந்த லிங்கை கிளிக்கிப் பார்க்கவும்.