Saturday, February 18, 2012

கண்ணுக்குத்தெரியாத என் தேவதை....பாகம் 2



உள்ளே சென்றுகொண்டிருக்கும் போது சக பணியாளர்கள் “ஏன் போஸ் சத்தம் போட்டீர்கள்? என்று கேட்டதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் விறுவிறு என்று நடந்து கான்டீனுக்குள் நுழைந்தான் தனு.
ஓம்லேட் பணிஸ் ஒன்றுக்கும் தேநீர் ஒன்றுக்கும் ஓடர் செய்துவிட்டு தலையில் கைவைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்த தனு,யாரோ வேண்டும் என்றே தேநீரை உறிஞ்சிக் குடிக்கும் சத்தம் கேட்டுக் கண்ணைத்திறக்க,தனது தேநீரை சத்துரி குடித்துக்கொண்டிருந்தாள்.கடுப்பாய்ப் பார்தவனை வாயைக் வலம் இடமாக ஆட்டி வெறுப்பேற்றி விட்டு அலட்சியமாய்க் குடித்து முடித்துவிட்டு கோப்பையை அவன் முன்னே வைத்தாள்.உள்ளுக்குள் வந்த சிரிப்பை முகத்தில் வெளிக்காட்டாமல் “வேற பொண்ணாய் இருந்தால்,இப்படிக் கோவப்பட்டதற்க்கு ஒரு வாரத்திற்கு முகத்தில் கூட முழிச்சிருக்க மாட்டாள்,என்ன பிறப்புடா!! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போது “டேய் ,என்னை ரோஷம் கெட்டவள் என்று நினைத்துக்கொண்டு இருந்தாய் என்னடா ??என்ற வாறே தலைக்கு முட்டுக் கொடுத்த கையைத் தட்டிவிட்டாள்.
வேகமாக எழுந்தவள் ஒரு தேநீரை வாங்கிவந்து அவன் முன்னே நீட்டி விட்டு,நடக்க முற்ப்பட்டாள்.


Saturday, February 4, 2012

கண்ணுக்குத்தெரியாத என் தேவதை(இன்னமும் காதலி கிடைக்காத ஆண் சிங்கங்களுக்குச் சமர்ப்பணம்)


மீண்டும் ஒரு குறுநாவலுடன் உங்களுடன் சேர்ந்து பயணிக்கப் போகின்றேன்.

அன்று எட்டு மணி தாண்டிப் பதைபதைப்புடன் அலுவலகத்துக்குள் நுழைந்த தனுவை கண்களை மூடித்திறந்ததன் மூலம் வணக்கம் கூறிவிட்டு காதலனுடன் தொடர்ந்து சிணுங்க ஆரம்பித்தாள் சத்துரி.அவள் அருகில் இருந்த ருவந்திக்கா இவனைக் கண்டுக்கவே இல்லை.அவள் அவளவனுக்கு குறும்செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தாள்.