Monday, May 9, 2011

படித்ததில் பிடித்தது




இப்பொழுதெல்லாம் வலைப்பூ பார்ப்பதற்கே நேரம் இல்லை.அப்படி இருக்கும் போது எழுதுவதற்கா நேரம் கிடைக்கப்போகிறது?காரணம் புதிதாக இணைந்த வேலையில் உளுக்கு எடுக்கின்றார்கள்.அதனால் எண்ணத்தில் உருவான பல பட்டாம் பூச்சிகளை,பறக்க விட்டு அழகுபார்க்க முடியாமல் இருக்கின்றது.


ஆனாலும் மனத்தைக் கவர்ந்த விடயத்தை பகிர்ந்து கொள்ளாவிட்டால்,வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லாத விக்ரமாதித்தன் கதைதான் எனக்கும்.

நான் இந்தக் குறுங்கதையை முகப்புப் புத்தகத்தில் படித்தேன்.படித்து நீண்ட நேரத்தின் பின்பும் அதன் தாக்கம் மனதை விட்டுச் செல்ல முரண்டுகொண்டு நின்றது.இது நிஜமோ,இல்லையோ தெரியாது.ஆனால் அதன் படிப்பினை பெறுமதியானது.


இது கொஞ்சம் டச்சிங்... ஒருத்தர் லீவு நாள்ள , புதுக் காரை துணி , தண்ணி வைச்சு கிளீன் பண்ணிக்கிட்டு இருக்காரு.. " பாத்து, மெள்ள --- காருக்கு வலிக்கப் போகுது " ,அந்த அளவுக்கு மென்மையாகத் துடைத்தார்.
அவரோட குழந்தை ... சின்ன பையன் ....செம க்யூட்.. 4 வயசுன்னு வைச்சுக்கோங்களேன்.. கையிலே அவன் எதோ ஆணி வச்சு இருப்பான்போலே .. காரு புதுசு இல்லே.. சின்னப் புள்ளைக்கு என்ன தெரியும்..? அவன் ஆணியை வைச்சு கார்லே எதோ கிறுக்கிட்டு இருந்து இருக்கான் .. திடீர்னு பார்த்தாரே மனுஷன்.. கையிலே கிடைச்சதை எடுத்து , ஓங்கி ஒரே போடு.. கையிலே பட்டு, ஒரு விரலு துண்டாப் போச்சு.. ...ரத்தம் .. தர தர னு ஊத்துது... பையனுக்கு ஒன்னும் புரியலை.. நடுங்கிறான்... ஆ... ஊ... னு அலறுறான்.. நம்ம ஆளு, அடிச்சுப் புடிச்சு ..ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறாரு.. டாக்டரு , மருந்து எல்லாம் போட்டு, விரலை ஒட்ட வைச்சு ஸ்டிச் பண்ணி... பையனை குணப்படுத்துறாங்க.. ... ஒரு நாள் ஆஸ்பத்திரிலே ரெஸ்ட் எடுக்கட்டும்.... நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் னு சொல்றாங்க... பையன், "அப்பா --- நம்ம வீட்டுக்குப் போகலாம்பா" னு சொல்றான்... நம்ம ஆளு பாவம்... அந்த பையனை விட.. அவருக்கு தான் கண்ணீர் அதிகம் வருது... (பாசம் பாஸூ.. ) " வலிக்குதா கண்ணு... ?.. டாடி .. சாரி டா .... நீ கொஞ்ச நேரம் தூங்கு.. டாடி போய்.. உனக்கு மருந்து வாங்கிட்டு வந்துடுறேன்.. ஈவனிங் நாம வீட்டுக்கு போவோம்.. என்ன? " பையன், பெயின் கில்லெர் லே , அப்படியே அசந்து தூங்குறான்.. நம்ம ஆளு, சோகமா .. நொந்து நூலாகி , வெளியே வர்றார்... ச்சே,.. என்ன மடத்தனம் பண்ணிட்டேன்.. ஆத்திரம் என்னோட கண்ணை எப்படி மறைச்சுடுச்சு.. நலல வேளை ... இதோட போச்சு.. . பிஞ்சு குழந்தை .. என்ன நெனைச்சு இருப்பான்.. என்னைப் பத்தி.. . எங்கேயாவது எசகு , பிசகா .. முகத்துலே, கண்ணுலே பட்டு இருந்தா... ? ச்சே.. நான்லாம் மனுஷனே இல்லை.. நடந்துக் கிட்டே.. கார் பார்க் பண்ண இடத்துக்கு வர்றார்... அப்பதான்.. கார்லே அவர் பையன் கிறுக்கினதை பார்க்கிறார்... என்ன தெரியுமா எழுதி (கிறுக்கி ) இருக்கு? Daddy I Love You எப்படி இருக்கும் அவருக்கு?


காதலுக்கு மட்டும் இல்லே.. பாசத்துக்கும் , கோபத்துக்கும் கூட கண் இல்லை.. கோபம் வரும்போது.. நம்மோட உணர்ச்சிகளை கட்டுப் படுத்துறதும் முக்கியம்.. அப்படி பண்ணிட்டா .. நம்மை மிஞ்ச யாருமே இல்லை... நீங்க ரொம்ப நேசிக்கிறவங்க கிட்டே தான் கோபம் ரொம்ப வரும்.. கோபத்தை குறைங்க... அதுக்கு பிறகு வாழ்க்கையே வசந்தமாகும்.. !! வாழ்த்துக்கள் !!



ரொம்ப பீலிங்கா இருந்தால் இதையும் பாருங்க.