நமது வாழ்கை என்ற வண்டி எப்பவுமே சீராகப் போகாது.அது வண்டியில் உள்ள தவறோ,இல்ல பாதையில் உள்ள தவறோ தெரியவில்லை.சீரான பாதையில் பயணத்தை அனுபவித்துச் செல்லுதுதல் ஒரு சந்தோஷமான நிகழ்வு.அதே வேளை ஒரு கரடு முரடான பாதையில் பல அசௌகரியத்துக்கு மத்தியில் நிர்ப்பந்தத்தில் பயணத்தைத் தொடர்தல் ஒரு துன்பமான நிகழ்வு.ஆனால் வாழ்கையில் நாம் விரும்பியோ,வெறுத்தோ இரண்டையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.ஆனால் ஒரு சந்தோசத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு,ஒரு துக்கத்தை எதிர்கொள்ளும் போது இருப்பதில்லை.
ஒரு சிறு துக்கத்தில் இருந்து மீண்டுவருவதற்குள் நம் மனம் படும் பதைபதைப்பு சொல்லிமாழாது.ஆனால் சில ஊனமுள்ள மனிதர்கள் அத்தனை சோதனைக்கும் மத்தியில் தன்னம்பிக்கையுடன்,வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் தைரியத்தையும் பார்க்கும்போது,நமது மன ஊனம் நமக்கு புலப்படுகிறது.அவனால் முடியும் போது ஏன் உன்னால் முடியாது?என்ற கேள்வி நமது மனதில் எழுகிறது.
இந்தச் சைக்கிள் திருத்தினருக்கு,இரண்டு கையும் இல்லை.ஒரு காலும் நிறைவாய் இல்லை.ஆனால் அவன் யாரிடமும் கையேந்தாமல்,தன் சொந்த உழைப்பில் வாழ்பவன்.
7 comments:
Very nice post
@"என் ராஜபாட்டை"- ராஜா Thanks a lot.
இவர்களுக்காகத்தான் இந்த உலகம்................
@akulanரைட்டு........
ஊனத்தை வென்ற ஊக்கமுள்ளவருக்குப் பாராட்டுக்கள்.
@இராஜராஜேஸ்வரிவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
nice
Post a Comment