கடந்த மாதம் இரண்டு சீன மருத்துவப்
பொறியலாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.ஐயோ போதும்,போதும்
என்றாகி விட்டது.காரணம் அவர்களுக்கு ஆங்கிலத்தை இலக்கணத்தோடு கதைத்தால்
புரியாது.அது கூடப் பரவாயில்லை,நான் தான் தவறுதாலாக் கதைத்ததாகக் கொண்டு இரண்டு கண்களையும் 90% மூடி(பூஞ்சிக்கண்ணன்கள்),பற்களை
இடுக்கிக்கொண்டு உடம்பு குலுங்கச் சிரிப்பாங்களே,ஒரு சிரிப்பு;அந்தக்
கொடுமையை எங்கே போய்ச்சொல்லுவது..
அவர்களோடு சாப்பிடுவதே ஒரு சுவாரஸ்யம்,ஒரு submarine ஐ அலேக்காக
முழுங்கிட்டு,வாயைக் கோணலாகப் பிடித்துக் கொண்டு,ஏதோ அதன் சுவை பிடிக்காதது போல பாவனை
காட்டிக் கொண்டிருப்பான். அப்பொழுதுதான் நான் இரண்டு கடி கடித்திருப்பேன்.நான்
சாப்பிட்டு முடிக்க விடிந்திடும் என்று நினைத்தானோ தெரியல்ல,டாய்லெட் போய் விட்டு வாறன் எண்டு ஒருவன் போனான்.நான் நாலாவது கடி கடிக்க ஆரம்பிக்க வந்திட்டான்.நான் ஒன்றுக்கா போனாய்
என்று கேட்க,தலையை ஆட்டிவிட்டு இரண்டுக்கு என்றான் பவ்வியமாக.உண்மையைச் சொல்லப்
போனால் அந்த நேரத்திற்குள் என்னால் முழுமையாக ஒன்றுக்கே போய் இருக்க முடியாது.
ஒரு வாரத்திற்குள், அவர்களுடன் நல்ல புரிதல் வந்த பின்னும்,அவர்கள் ஏன் இங்கே உணவை பெரிதாக ரசித்து
உண்ணவில்லை என்பது புரியவில்லை.
ஆனால்,இன்று வந்த மெயிலைப் பார்த்தவுடன் ,தெளிவாகப் புரிந்துவிட்டது காரணம்.கீழே
படங்கள்....
மேலே உள்ளது அவர்கள் கிராம மார்கெட்.பாவம்,இங்கே வந்து ஒழுங்கான உணவு இல்லாம மிகவும் சிரமப் பட்டு இருப்பாங்கள். :-)
14 comments:
இந்த உணவு எல்லாம் நீங்க சாப்டுவிங்களா ?
@"என் ராஜபாட்டை"- ராஜா
இன்று என் வலையில் ....
மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது
இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.ஆனால் முயன்றுபார்ப்பதில் ஆட்சேபனை இல்லை.
ஹி ஹி
மட்டக்குளியல் சாப்பாட்டுக்க கரப்பான் கிடந்ததிர்கே இரண்டு நாள சாப்பாடு இல்லத்தானே !
@நான் மனிதன்
கொஞ்சம் Build Up பண்ண விடுங்களேன் அப்பு.
அவங்கட ஆங்கிலம் மிக கொடுமை.. எனக்கும் இரண்டு நண்பர்கள் இருகிறார்கள்... ஒருவன் எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவான்......... சில சீனர்கள் நல்லவர்கள் இல்லை...........
சீனாக்கு எப்ப அமெரிக்கா ஆப்பு அடிக்கும் எண்டு பார்த்துக்கொண்டு இருக்குறேன்....
(http://akulan1.blogspot.com/2011/07/blog-post.html)
மனிதரில் நல்லவர்கள்,கேட்டவர்கள் என்பது நாட்டையோ,மதத்தையோ,மொழியையோ பொறுத்தது அல்ல.அது அவர்கள் மனதைப் பொறுத்ததே.
//சீனாக்கு எப்ப அமெரிக்கா ஆப்பு அடிக்கும் எண்டு பார்த்துக்கொண்டு இருக்குறேன்....//
சாத்தியம் இல்லை தம்பி....
எனக்கும் சீனர்களோடு பழகிய சந்தர்ப்பம் உண்டு. பொதுவாக அவர்கள் அப்படித்தான் நண்பா.
@விஜயகுமார் ஐங்கரன் I know...I know...:<))
நல்ல பதிவு.
அங்கு மிருகக்காட்சி சாலையே அல்லவா இருக்கிறது. பிறகு நமது சாப்பாடு எப்படி பிடிக்கும்?
வாழ்த்துக்கள்.
@Rathnavel
நிச்சயமாக.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
"பாம்பு தின்கிற ஊருக்கு போனால் நடுக்கண்டம் எனக்கு" என்பது நமக்கு மட்டும் தான் போல் இருக்கு நண்பா
@veeduஹா ஹா ஹா
நண்பா,தொடர்ந்து வருகை தாருங்கள்.
Post a Comment