நீண்டநாட்களிற்குப் பின் வலைப்பூ
எழுதுகின்றேன்.அடிக்கடி யோசிப்பேன்,வலைப்பூவை அப்டேட் பண்ணணும் என்று,ஆனால்
சோம்பல் விடவில்லை.ஆனால் இன்று ஒரே மூச்சில் எழுதுவதற்குக் காரணம்,அழுத்தமான
மனநிலையில் இருந்து விடுதலை பெறவே.நான் வலைப்பூ எழுத ஆரம்பித்ததே,என் மனதின்
ரிலாக்ஸ்க்கே.
2௦௦9 ல் என் தம்பியின் துரதிஷ்டவசமான மரணத்தின்போது என் மனநிலை மிகவும் மோசமாகக் குழம்பி,மரணம்தான் நிம்மதி என்று விரக்தியுடன் வாழ்ந்த போது என் மனசுக்கு ஆறுதலாய் அமைந்தது எழுத்தும் வாசிப்புமே.அக்காலத்தில் என் வேதனைகளை மறப்பதற்கு நான் உருவாக்கிய கற்பனை உலகின் உணர்வுகளை கதை,கவிதை என்று என் வலைப்பூவில் எழுதி என் மனதை தறிகெட்டுப் போகாமல் காத்துக்கொண்டேன்.
படித்து முடிந்து வேலை என்று வந்த பின் முன்னாடி
போல் எழுதுவதற்கு சரியாக நேரம் அமையவில்லை,அது போக எழுத்தின் மீது கொண்ட மோகமும்
சற்றே குறைந்து விட்டது.
பழைய வேலையில் இருந்து விலகி புதிதாக ஒரு
வேலையில் இணைந்த பின் அந்த வேலை தொடங்கும் வரை வீட்டில் வெட்டியாக
உட்கார்ந்திருக்கும் சூழ்நிலை.கைவசம் இரண்டு டிகிரி சான்றிதழ்கள் இருந்த போதும் முன்னாடி
பார்த்த வேலை என் படிப்புக்குச் சம்பந்தமாகவோ மனசுக்குப் பிடித்ததாகவோ அமையவில்லை.மீண்டும்
மனதில் ஒரு வெறுமை.சந்தோசமும் இல்லை,துக்கமும் இல்லை,எதிலும் பிடிப்பும் இல்லாத
ஒரு வெறிச்சோடிய உணர்வு.
முன்னாடியெல்லாம் மனசு சரியில்லாவிட்டால்
நண்பர்களிடம் மனசு விட்டுப் பேசினால்,அடுத்த நொடியே கலகலப்பு மனநிலைக்கு
வந்துவிடுவேன்.இப்போ நெருங்கிப் பழகிய நண்பர்கள் பலர் வெளியூரில்
வசிக்கின்றார்கள்.இப்போ இருக்கின்ற நண்பர்களோ “நமக்கு மட்டும் ஏண்டா
இப்படி,சே...என்னா வாழ்கைடா??”என்று இருக்கும் மனநிலையை இன்னும் நாறடித்து
விடுகின்றார்கள்.
அப்போ தான்,பழைய ஆருயிர் நண்பன் என் வலைப்பூவின்
ஞாபகம் வந்தது.தொடர்ந்து எழுதவேண்டும்,எழுத்தின் ஊடே எனக்கென்று ஒரு ஒரு
அங்கீகாரம் கிடைக்கும் வரை எழுதவேண்டும்,என்ற வைராக்கியத்தை மனதில்
ஏற்றிக்கொண்டேன்.
இனி வரும் நாட்களில் தொடர்ந்து எழுதுவேன்,உங்கள்
ஊக்கத்தையும் தூண்டலையும் எதிர்பார்க்கும் மூவிதன்.
6 comments:
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
நம்பிக்கையுடன் தொடர வாழ்த்துக்கள்...
@Ramani S
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
என்னால் முடிந்த அளவு உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்வேன்.
@திண்டுக்கல் தனபாலன்
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி அண்ணா.
:-)
தொடரட்டும்..........
@T.Amarnath
கண்டிப்பாக.கருத்துக்கு நன்றி.
Post a Comment