Saturday, May 24, 2014

இப்பெல்லாம் சூர்பனைகள் பஸ்ல பிரயாணம் பண்ண ஆரம்பிசிட்டாளுகள்...



போனவாரம் கொழும்பில இருந்து மட்டக்களப்பு வரும் போது,சூர்பனகை,அவ சிஸ்டர்,அவ பிரண்டு மூணு பேரு பின் சீட்ல.டிரைவர் பஸ்ஸ மூவ் பண்ணாம,பொறுமையைச் சோதிச்சிட்டிருந்தார்.வியர்வை ஆளை நனைத்துக்கொண்டிருந்தது.பின்னால் இருந்த புண்ணியவதிகள்,தங்கள் ஜன்னலை முழுமையாகத் திறந்து முன்னாள் இருந்த என் ஜன்னலை முழுமையாகப் பூட்டி இருந்தனர்.

பிள்ளைகள் தவறுதலாய்ச் செய்துவிட்டனர் என்று நினைத்து என் ஜன்னலைக் கால் வாசி திறந்த அடுத்த நொடி,என் இதயம் திடுக்கிட அகோரமாய் அடித்து மூடப்பட்டது.

செம காண்டாகி பின்னால் திரும்பி “பேய்ப்ப்......”என்று மூச்சை விழுங்கி,
“உங்க ஜன்னலில் பாதியை திறங்க,என் பாதி திறந்திருக்கும்”அப்படின்னு கஷ்டப்பட்டு மிமிகிரி வாய்ஸ்ல ஒப்பந்தத்தைச்சொல்லி விட்டு உட்கார்ந்தன்.ஒரு பத்து நிமிடம் கண்மூடி இருந்திருப்பன்,காற்று வாறது முற்றாக நின்றுவிட்டது,கண்ணைத் திறந்து பார்த்தால்,நம் ஜன்னல் புல் க்ளோஸ்.
அங்குலம் அங்குலமாய் நகர்த்தி மூடியிருப்பாள்கள் போல,சத்தமில்லாமல் காரியத்தைக் கச்சிதமாய் முடிச்சிருக்காளுகள்.நம்ம மூஞ்சைப் பார்த்தால்,கைப்புள்ள சங்கத்து ஆளுன்னு தெரிஞ்சிட்டுன்னு நினைச்சு,கட்டத்துரை போல பக்கத்தில் இருந்த நண்பனைப் பார்த்து,”பாரு மச்சான்,இவளுகள் செய்யுற அடாவடியை...வா என்னவென்று கேட்பம்” என்று கூட்டுக்கு அழைத்ததும்...அந்த வேங்காயப்பயல்...”சிஸ்டர் ...நீங்க பண்றது ரொம்பத் தப்பு..அப்படின்னு ஆரம்பிக்க....”சூர்பனகை சிஸ்டர்,வாயில கையை வைத்து கையை கீழ் நோக்கி அசைத்துவிட்டு (அந்த அசிங்கத்தை வேற மொழிபெயர்கனும்:மூடிட்டு உட்காருன்னு )திறந்த ஜன்னலால் காத்து வாங்கினாள்.


இனியும் பொறுத்தால் வேலைக்கு ஆகாதுன்னு முடிவு பண்ணி,”என்னங்கடி நீங்க பண்ற கூத்து...என் பக்க ஜன்னலில் கை வைத்தால் நடக்கிறது வேற...”ன்னு தொனியைக்கூடி பஸ்ல கண்ணை மூடிட்டு இருந்தவங்களைக் கண்ணைத் திறக்க வைத்துவிட்டு உட்கார்ந்தன்..

பனம் காட்டு நரி,சலசலப்புக்கு அஞ்சாது என்பது போல மூணு பெருச்சாளிகளும் தங்கள் கைவரியை ஜன்னலில் காட்டிக்கொண்டிருந்தன.
நான் தோல்வியை ஒப்புக்கொண்டு,தூங்கிட்டேன்.

அப்புறம் குளிர் தாங்க முடியாமல் கண்ணைத் திறந்தால்,தங்கள் ஜன்னலை முற்றாக மூடி,எங்கள் பக்கத்தை முற்றாகத் திறந்து விட்டிருக்காளுகள்.

அப்புறம்.....

உடுப்பு பாக்குக்குள் இருந்த பெட் சீட்டை எடுத்துப் போர்த்திட்டு,கழுத்தைச் சுற்றிற்று கண்ணை மூட,ஒரு கேவலமான சிரிப்பும்...கை தட்டுகிற சத்தமும்...
(புள்ளைப் பூச்சை தோற்க்கடிச்சிட்டாங்களாம். )

நானும் அவர்கள் ஜன்னலை அசைக்க முடியாத படி கையால புடிச்சிட்டே வந்திட்டன்.இரண்டு கிளாஸ் குளிர் தடுப்போடே பிரயாணிச்சிட்டே வந்தாங்க.

ஹி ஹி ஹி
கடைசில் நடத்துனர் கூட அரக்கிகளுக்கு வாய்த்தகராறு.ஏன்னா,அவங்க இறங்க வேண்டிய இடத்தை அந்தப் பய புள்ள அறிவிக்கவில்லையாம்...


சூர்பனகை அணி கடுப்பில எங்களைப் பார்க்க,நானும் நண்பனும் ஹாட்ரிக் எடுத்த சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டோம்.

-அண்ணாச்சி ....நானு ஹாப்பி அண்ணாச்சி.-


1 comments:

Post a Comment