Saturday, May 24, 2014

இப்பெல்லாம் சூர்பனைகள் பஸ்ல பிரயாணம் பண்ண ஆரம்பிசிட்டாளுகள்...



போனவாரம் கொழும்பில இருந்து மட்டக்களப்பு வரும் போது,சூர்பனகை,அவ சிஸ்டர்,அவ பிரண்டு மூணு பேரு பின் சீட்ல.டிரைவர் பஸ்ஸ மூவ் பண்ணாம,பொறுமையைச் சோதிச்சிட்டிருந்தார்.வியர்வை ஆளை நனைத்துக்கொண்டிருந்தது.பின்னால் இருந்த புண்ணியவதிகள்,தங்கள் ஜன்னலை முழுமையாகத் திறந்து முன்னாள் இருந்த என் ஜன்னலை முழுமையாகப் பூட்டி இருந்தனர்.

பிள்ளைகள் தவறுதலாய்ச் செய்துவிட்டனர் என்று நினைத்து என் ஜன்னலைக் கால் வாசி திறந்த அடுத்த நொடி,என் இதயம் திடுக்கிட அகோரமாய் அடித்து மூடப்பட்டது.

Saturday, February 15, 2014

பாலு மகேந்திரா....(என் நினைவில்)





சினிமாக் கலைஞர்களில் ஒரு சிலரின் மீது அதீத பாசம் வருவது இயல்பு.இளையராஜா,மற்றும் கமலஹாசன் மீது நான் கொண்ட காதலுக்குக் காரணம் அவர்களின் வியக்க வைக்கும் திறமை மற்றும் என் தனிப்பட்ட வாழ்வில் அவர்களின் படைப்பின் தாக்கம்.

அந்த வகையில் பாலுமகேந்திரா அவர்களை மிகவும் நேசிக்கக் காரணம் அவர் எங்கள் ஊர்காரர் என்பதுதான்.கொழும்பில் படிக்கும் நாட்களில் எங்கள் ஊர்ப்பெருமை என்பதில் பாலுமகேந்திரா,ஒரு முக்கிய கருப்பொருள்.

பின்நாட்களில் சிறந்த தமிழ்ப் படங்களைத் தேடித் பார்த்த போது சந்தியா ராகம்,வீடு,அழியாத கோலங்கள்,வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், மூன்றாம் பிறை போன்ற அவரின் இயக்கத்தில் வந்த படைப்புகள் மாற்று சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது.ஆனால் பின்னாளில் வந்த அவரின் படைப்புகள் எனக்குள் எவ்வித அதிர்வையும் ஏற்ப்படுத்த வில்லை என்பது உண்மையே.அந்தக் குறையும் நிவர்த்தி செய்யப்பட்டது அவர் கை பிடித்து தொழில் கற்ப்பித்த பாலா,அமீர்,வெற்றிமாறன்,சசிகுமார்,சீனுராமசாமி போன்ற அவர்களின் சிஷியர்களின் மூலமாக.

பாலு மகேந்திரா அவர்களின் வாழ்கையைப் படித்த போது எனக்குள் ஏற்ப்பட்ட மிகப்பெரிய வியப்பு,இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமிர்தகழி எனும் சிற்றூரில் இருந்து புறப்பட்டு தமிழ் கலையின் தாயகமான இந்தியாவிலே ஒளிப்பதிவு மேதை என்ற பெருமையைப் பெறுவதென்றால் அவரின் திறமை எத்தனை அசாதாரணம் என்பதுவே.

எப்பொழுதெல்லாம் உயர்ந்த மரங்களுக்கூடே கீற்றாய்த் தெறிக்கும் சூரியனைப் பார்க்கின்றேனோ,அப்பொழுதெல்லாம் பாலு மகேந்திரா அவர்களே என் மனதில் தோன்றுவார்.

We miss you Legend….:-(

   

Sunday, June 2, 2013

நானும் இசைஞானி இளையராஜாவின் இசையும்...பாகம் 1


இளையராஜா அவர்களின் எழுவதாவது பிறந்த நாளுக்கு என் வாழ்த்துக்கள்.அவரது இசை என்னை கரம் பிடித்து அழைத்துச் செல்வதாய் ஒரு உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.நான் கடந்து வந்த அவரின் இசையை தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.

நான் எப்பொழுது முதலில் சினிமாப்பாடல்களைக் கேட்க்கத்தொடங்கினேன் என்று மிகவும் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் நான் முதலில் ரசித்த பாடல் கண்டிப்பாக இளையராஜா பாடலாகத்தான் இருக்கும் என்று சர்வ நிச்சயமாக நம்புகின்றேன்.காரணம்  80 களின் இறுதியில் இளையராஜா பாடல் இல்லாமல் ஒரு தமிழ் வீட்டிலும் பொழுதுபுலரையும் மாட்டாது,அந்தி சாயையும் மாட்டாது.அந்தளவுக்கு தமிழனின் ஒவ்வொரு அசைவிலும் இளையராஜாவின் இசை இருந்தகாலகட்டம் அது.