அலைச்சலுடன் புகைவண்டி ஜன்னல் இருக்கையில்-நான்
என்னை மோதிச் சென்ற காற்று – கவிதை சொன்னது
கடந்து சென்ற கட்டடங்கள்-காலத்தை மீட்டன
குருதியை உறிஞ்சிய கொசுக்கள்-என்னில் பசி போக்கின
இதயம் வராத காதலிக்காய் வசை பாடியது.
தேடிக்களைத்த இதயம் தனிமையாய் துடித்தது
தொலைந்த பார்வை-ஒண்டியாய் நிலாவைக் கண்டது
காதலர்கள் ரசிக்கும் நிலாவுக்கு காதலி இல்லை
அது ஏதோ எனக்கு ஆறுதல் சொன்னது.
மீசை அரும்பும் போது இருந்த தேடல் இன்றில்லை
காலத்தின் கோலத்தின் காதல் எண்ணமும் கலைந்து விட்டது
கண்ணீர் முட்டுகையில் தோள் சாயத்துடித்த தலையும்
உன் கண்ணில் முகம் பார்க்கத் துணிந்த கண்ணும்
செல்லத்தில் நுள்ளத்துடித்த விரல்களும்
பலத்தைத் காட்ட முனைந்த புஜமும்
உன் நெற்றியை முத்தமிட எண்ணம் கொண்ட உதடும்
உன் கரம் மூட நினைத்த என் கரமும்
கிடையாத காதலிக்காய்-கிடையாய் கிடக்கின்றன
தொம் என்று அமர்ந்த அதிர்வில் நான் குலுங்க
என் மீது விழுந்த துப்பட்டாவை நோகாமல் தூக்கின அவள் விரல்கள்
கண்கள் நம்ப மறுத்தன-அவை விரல்கள் என்று
பொன்னிற விரல்களிலே-பூக்களாய் பூத்திருந்தன சோளம் முடிகள்
கரம் பார்த்த கண்கள்-முகம் பார்க்கத் துடித்தது
தடுக்க நினைத்த மனதை தாண்டிக் குதித்து என் பார்வை.
நான் அவள் பக்கம் திரும்ப-அவள் மறுபக்கம் திரும்ப
சூரிய வதனம் தேடிய எனக்கு அஸ்தமனப் பேறே கிட்டியது
குமுறவில்லை மனசு-செழித்த சோலையாய்க் கூந்தலைப் பார்த்தால்
கணங்கள் ரணமாய்க் கடக்க........
என் ஒவ்வாத(-)முனைகள் ஈர்த்தன
அவள் ஒத்த(+)முனைக்காந்தக்கண்களை
தேவதை ...அவள் ஒரு தேவதை...
துடிக்க மறந்தது என் இதயம்
அவள் நாசியில் இருந்து மீண்ட அவள் சுவாசம்
என் இதய அறையை நிரப்ப
புதிதாய்த்துடித்தது “லவ் டப்” என்று.
7 comments:
Nice., Super...
@வேடந்தாங்கல் - கருன் ரொம்ப நன்றி.
நல்லா இருக்குது................
@akulan
நன்றி தம்பி.
நண்பா மனம் திறந்த வாழ்த்துக்கள் காதல் இங்கே வற்றி கிடக்கிறது சொன்ன உங்களுக்கா இந்த நிலை ..........மீண்டும் அந்த தேவதையை 155 பஸ் வண்டியில் சந்திக்க வாழ்த்துக்கள்
@A.சிவசங்கர்
public....public
@ranganathanpillai மன்னிக்கவும்,நீங்கள் எழுதியது புரியவில்லை.
Post a Comment