Sunday, September 11, 2011

மார்பகப்புற்று நோய் -தொடர் கதை-பாகம் 3(காமம் கடந்த காதல்)


தொடர்கதை எழுதுவது எத்தனை சிரமம் என்பதை மூன்று பாகம் வரைத்தொடர்ந்தததன் மூலம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.இனியும் காலம் தாழ்த்தினால் எனக்கே கதாபாத்திரங்கள் மறந்துவிடும்.
தயவு செய்து படிப்பவர்கள் பாகம் 1,பாகம் 2,பாகம் 3 என்று முறையாகப் படியுங்கள்.
பாகம் 3 கீழே...
காற்சட்டைப் பாக்கெட்டில் இருந்த போன் அதிர்ந்த அதிர்வில்,கடந்த கால இனிமையில் தன்னை மறந்திருந்தவன்,நிகழ் காலத்திற்கு வந்தான்.போனைக் காதில் வைக்க, அப்பா,அம்மா எதுவும் பேசாம,அப்படியே இருக்கிறாங்க.எனக்குப் பயமாய் இருக்குது,சீக்கிரம் வா அப்பா ...,என்றாள் துவா அழுகையுடன்.
காற்சடையில் ஒட்டிய மண்ணையும் தட்ட மறந்தவனாய் வண்டியை நோக்கி விரைந்தவன்,சந்தியிலே இருந்த ஆட்டோவையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.அவன் வாகனச் சத்தத்தைத் கேட்ட மகள் ஓவென்று அழுதவாறே ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.கட்டிலை நோக்கி ஓடியவன்,நாடியைப் பிடித்து ஆட்டியவாறே “காவி, காவி !!!என்று கத்திப்பார்தான்.ஊகும்...எந்தச் சலனமும் இல்லை.அவளை அப்படியே இரண்டு கரத்தால் தூக்கியவன்,ஆட்டோக்குள் கொண்டுபோய் வைத்தான்.மகளையும் அதற்குள் ஏற்றி விட்டு,ஓடிச் சென்று வீட்டைப் பூட்டி சாவியை பாக்கெடுக்குள் திணித்துக்கொண்டு,ஆட்டோவில் தாவி ஏறிக்கொண்டான்.

ஆட்டோ சென்ட்ரல் வைத்தியசாலையை நோக்கி விரைந்தது.வைத்திய சாலையை அடைந்தவுடன்,ஆட்டோ சாரதி உள்ளே சென்று நோயாளியைக் கொண்டு செல்லும் சக்கர நாற்காலியை எடுத்துவந்தான்.அவளை உட்கார வைத்து உள்ளே தள்ளிக் கொண்டு ஓட, வழமையாக அவளைச் செக் அப் பண்ணும் டாக்டர் ராதிகா தான் அன்றைக்கும் அங்கே இருந்தார்.அவர் அவளை ICU இக்குள் கூட்டிச்சென்றார்.மகளின் கையைப் பிடித்துக் கொண்டு ICU இக்கு முன்னாளிருக்கும் வாங்கில் அமர்ந்தவனுக்கு,அப்பொழுது தான் ஞாபகம் வந்தது,ஆட்டோ சாரதிக்கு பணம் கொடுக்காதது.வாசலை நோக்கி விரைந்தான்.ஆனால் அவன் அங்கே இல்லை.
மீண்டும் வந்து வாங்கில் அமர்ந்தவனுக்கு,மகளைப் பார்க்க ஒரே வேதனையாக இருந்தது.தனக்காக அழுவதை விட தான் நேசித்தவருக்காய் அழுவதன் ரணம் அவனுக்கு நன்றாகத் தெரியும்.துவாவோ அழுதழுது கண்கள் சிவந்து சோர்ந்து போய் இருந்தாள்.அவளை மடியிலே படுக்க வைத்து,கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.நேரம் தன் போக்கிலே போய்க்கொண்டிருந்தது.நேரம் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் போய் இருக்கும்.தனுவிற்க்கோ பதைபதைப்பு கூடிக்கொண்டிருதது.அப்பொழுது தோளிலே யாரோ கை வைத்தது போலிருந்தது.டாக்டர் ராதிகாதான் நின்றார்.உள்ளே வாப்பா,என்ற வாறே அவரது அறையை நோக்கி நடந்தார்.கடவுளே,எல்லாம் நல்லதே சொல்லணும்,என்று செபித்துக்கொண்டே அறையை அடைந்தான்.
அங்கே காவியா கண்களை மூடிப் படுத்திருந்தாள்.அவளருகே சென்று அவளைத் தொடப்போனவனை தடுத்த டாக்டர்,அவளுக்கு இஞ்செக்ஷன் போட்டிருக்கன்.சோ குழப்பக்கூடாதுஎன்றார்.தனுவின் கண்ணை உற்றுப்பார்த்தவர்தனு தைரியமாய் இருங்க,அவள் ஒவ்வொரு நிமிடமும் சாவதற்க்குப் பதிலாக கடவுள் அவளை தன்னிடம் எடுக்க முடிவெடுத்திட்டார். அவளுக்கு இரத்தம் பூரா புற்றுநோய் பரவிவிட்டது.இனி எங்களால் செய்யக்கூடியது எதுவும் இல்லை.ஆனாலும் நீங்க உங்க தைரியத்தை இழக்காதீர்கள்.கடவுளாலே முடியாதது எதுவும் இல்லை “என்றவாறே தன் கண்களில் இருந்த கண்ணீரை ஒற்றிக்கொண்டு வெளியேறினார் டாக்டர்.
இடி விழுந்தது போலிருந்தது தனுவிற்கு,கதிரையைத் தாங்கிப் பிடித்து எழுந்து கட்டிலில் கிடந்த மனைவியை நெருங்கினான்.முடியற்ற தலையும்,மார்பற்ற நெஞ்சும்,உலர்ந்து போன தோலுமாய் சலனமற்று இருந்தாள்.அவளது கையைத் தூக்கி தன் கண்ணிலே ஒற்றிக் கொண்டு,காவி,கண்ணைத் திறந்து பாரும்மா???என்றான் விம்மிக்கொண்டே.அவன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் அவளது கரத்தைக் குளிர்வித்தது.உணர்வு பெற்றதாய் திரும்பிய அவள் கரம் அவனது முகத்தை வருடியதாய் உணர்ந்து கண்ணைத்திறந்து அவளை நோக்க,திறந்திருந்த அவளது கண்கள் ஆச்சரியம் ஊட்டின.அவளது முகத்தை நோக்கி அவன் காதைக் கொண்டு செல்ல “தனு,I LOVE YOU டா........................................என்ற வார்த்தை அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.”I LOVE YOU SO MUCH “என்றவாறே நிமிர்ந்து நோக்க திறந்திருந்த வாயும்,கண்ணும் உயிர் அற்று இருந்தது.உடலிலே எந்த அசைவுமே இல்லை.


“காவி,நீ என்னை விட்டுப் போய்ட்டியா...............என்று அவன் ஓங்கிக் கத்திய சத்தத்தில் அனைவரும் கூடிவிட்டனர்.அதன் பின் என்ன நடந்தது என்பது அவனுக்கு தெரியவில்லை.முகத்தில் இருந்த தண்ணீரைத் துடைத்துக்கொண்டு கண்ணைத் திறக்க “அப்பா,அம்மா எப்படிப்பா எங்களை விட்டிட்டுப் போவாங்க,எங்களுடைய இவ்வளவு அன்பையும் தாண்டி.என்ன ,இனி நாங்க அவங்களைப் பார்க்க முடியாது.ஆனா அவங்க எங்க கூடதான் இருப்பாங்கஎன்ற மகள் துவாவின் வார்த்தைகள் அவனது செவிக்குள் இறங்கி அவனது உயிரை உடலோடு பிடித்துக்கொண்டது.

--முற்றும்—

தயவுசெய்து குறையோ,நிறையோ உங்கள் கருத்தைப் பதியுங்கள்.அதுவே என்னைச் செம்மைப்படுத்த உதவும்.
                      

0 comments:

Post a Comment