Thursday, August 25, 2011

மார்பகப்புற்று நோய் .............தொடர் கதை-பாகம் 2

ஏதோ ஒரு வேகத்தில் தொடர் கதை எழுதத்தீர்மானித்தேன்.கண்டிப்பாய் இது பிரபல பதிவாகி அதிக வாசகரைச் சென்றடையும் என்ற நம்பிக்கையோடு.ஆனால் எனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை தானே.இத்தோடு நிறுத்துவோம் என்று நினைத்தாலும் மனம் தனிமையில் கதையை நீட்டிக்கொண்டு செல்கிறது.அதன் விளைவே அடுத்த பாகம்.
ஆபீசுக்குள் நுழைந்த தனு விரலை வைத்து நேரத்தைப் பதிவு செய்து விட்டு தனது மேசையை நோக்கி நடந்தான்.மேசையில் குவிந்திருந்த கோப்புக்கள் மலைப்பை ஏற்படுத்தின.இரண்டு நாட்கள் வரவில்லை,அதற்குள் இத்தனையா என்று வெறுத்துக் கொண்டே அமர்ந்தான்.பக்கத்தில் அமர்ந்திருக்கும் பூர்ணா,என்ன கள்ளப் பூனை போல வந்திருகின்றீங்கள்?என்ற வழமையான சீண்டலுடன் ஆரம்பித்தாள்.பூர்ணா,என்னுடைய முக்கிய கோப்புக்களை முடித்திருக்கலாமே?இப்ப மேனேஜர் என்னைப் படுத்தப்போகிறார்.என்றான் சோர்வாய்.ஐயோ தனு,என்னுடைய மேசையை ஒரு தடவை பார்த்து விட்டுப் பேசு.நேற்றும் ஆபிஸை விட்டுச் செல்லும் போது ஆறு மணி தாண்டிவிட்டதுஎன்றாள்.அப்பொழுது அவனது போன் சிணுங்கி மேனேஜரின் அழைப்பைக் காட்டியது.போனைக் காதில் வைத்த படி மேனேஜர் அறை நோக்கி நடந்தான்.
“Good Morning, Sir” என்றவாறு வலுக்காயப்படுத்தி வரவழைத்த சிரிப்புடன் மேனேஜர் முன் நின்றான். ம்ம்ம்ம்,உங்களுக்கு நான் திரும்பத்திரும்ப கம்பனியின் நடைமுறைகளைப் புரியவைக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.இன்றைக்கு அத்தனை கோப்புகளும் நிறைவு செய்யப்பட வேண்டும்.புரிகின்றதா???என்று காட்டமாய் முடித்தார்.தலையை மேலும் கீழுமாக ஆட்டி விட்டு நடந்த தனுவை,தனு,என்னுடைய நிலமையையும் புரிஞ்சுக்கோப்பா,நானும் பலருக்குப் பதில் சொல்லவேண்டும்.என்று கண்ணியமாய் முடித்தார்.மேனேஜரின் சாமர்த்தியம் தனுவிற்கு புதிதல்லவே,சிரித்தவாறே தனது மேசையை நோக்கி நடந்தான்.

வந்து அமர,என்ன மேனேஜர் திட்டினாரா??ஊஹும்,நீதான் ஜித்தன் ரமேஷ் போல மூஞ்சக் காட்டி,அந்த மனிசன்ற வாயக் கட்டிருப்பியேஎன்றாள் பூர்ணா.

வேலையில் மூழ்கியவன்,நேரத்தைப் பார்த்தான்,12.30 தாண்டிவிட்டது.இனி வீடு சென்று வர வாய்ப்பில்லை.லக்ஷ்மி ஹோட்டல் சப்ளை பையன் குமாருக்கு போன் பண்ணி,ஒரு மணிக்குள் வீட்டுக்கு ஒரு சாப்பாடு கொண்டுபோய்க் கொடு,நான் வேலை விட்டு வரும் போது பணத்தைத் தருகின்றேன்என்றான்.கடைக்குச் செல்லும் போது அவனுக்கு டிப்ஸ் கொடுத்துக் கவனிப்பதாலும்,அன்பாகப் பேசுவதாலும் குமார் தனுவிற்கு கண்ணியமாய் நடப்பான்.
காவ்யாவிற்கு போன் பண்ணிச் சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்துவிட்டான்.மாலை 4.30 மணிக்குள் அத்தனையையும் ஒருவாறு நிறைவு செய்துவிட்டான்.ஆனால் நூறு வீதத்திருப்தி இல்லை.யாராவது சரி பார்த்தால் நிறைவாய் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு பூர்ணாவின் பக்கம் திரும்பினான்.அவள் மெய் மறந்து face book சாட்டில் இருந்தாள்.இனி அவளிடம் உதவி கேட்டுப் பயனில்லை என்று தெரிந்தும்,பூர்ணா,எனது பைல்களை கொஞ்சம் சரி பார்க்க இயலுமா????என்று இழுத்தான்.ஐயோ,எனக்கும் மூட் ப்ரெஷ் இல்லை,நாளைக்கு காலையில் பார்க்கிறேன்என்றாள்.பிறகு என்ன நினைத்தாளோ,தா,தனுஎன்று பைலை வாங்கிக் கொண்டாள்.பூர்ணா,என்ன தான் குறும்பாய் பேசினாலும்,அவளது நல்ல நட்பு ஆபீஸில் தனுவிற்கு பெரிய பக்கபலம்.
“தனு,நீ வேணுமென்றால் வீட்ட போ,நீ போகாவிட்டால் காவி ஒழுங்காய் குளுசை போட்டிருக்கமாட்டாள்என்றாள்.தாங்க்ஸ் பூர்ணாஎன்று குழைந்து நின்ற தனுவைப் பார்த்து,உண்ட தேங்க்ஸ் யாருக்குத் தேவை,நாளைக்கு வரும் போது நீ சமைக்கின்ற சாப்பாட்டில் எனக்கும் சேர்த்து எடுத்து வா “என்றாள் நோண்டியாய்.

ஆபீஸில் இருந்து விருக்கென்று புறப்பட்ட தனு,கடற்கரைச் சாலையைக் கண்டவுடன்,அங்கு சென்று சற்று இருந்து விட்டுச் சென்றால் ஆறுதலாய் இருக்கும் என்று எண்ணியவனாய்,வாகனத்தை நிறுத்தி விட்டு கடற்கரையை நோக்கி நடந்தான்.
காதலிக்கத்தொடங்கிய நாளில் இருந்து அவன் காவியா இல்லாமல் தனியாக கடற்க்கரை வந்தது இல்லை.அவளோடு வருவதற்குத் தான் தனுவிற்கு விருப்பம்.ஆனால்,முடி உதிர்ந்ததில் இருந்து அவள் வைத்தியசாலை தவிர்த்து பொதுஇடங்களுக்குச் செல்வதை அறவே நிறுத்தி விட்டாள்.
வந்து மணலிலே அமர்ந்தவன்,ஓயாமல்,சலிக்காமல் மணலை முத்தமிட்டுச் செல்லும் அலைகளின் மண் மீதான காதலை ரசிக்கத் தொடங்கினான்.அலைகளின் காதல்,அவன் கடந்த கால நினைவுகளிற்கு அவனை அழைத்துச் சென்றது.கல்லூரியில் படிக்கும் நாட்களில் காவியா கடற்கரைக்கு வர சரியாய்ப் பயப்படுவாள்.அவளை அழைத்துப்போக அவன் ஒரு உள்நாட்டுப் போரே செய்ய வேண்டியிருக்கும்.அப்படிக் கூட்டிக் கொண்டுவந்து உட்கார்ந்தால்,துப்பட்டாவை பர்தாவாய் தலையை மூடிக் கொண்டு சுற்றிவர கண்ணை உருட்ட ஆரம்பத்து விடுவாள்.
“அடியே காவி,யாரவது முஸ்லிம் சகோதரர் பார்த்தால் எனக்குத் தாண்டி ஆபத்து,தயவு செய்து உண்ட பர்தாவை எடுடி என்று கேஞ்சுக் கூத்தாடி பர்தாவை நீக்க வேண்டி இருக்கும் தனுவிற்கு.காவி,உன்னை எதுக்கு இங்கே கூட்டி வந்தேன் தெரியுமா?,எனக்கு நீண்ட நாளாய் ஒரு ஆசைடி.உன்னுடைய மடியில் நித்திரை கொள்ளவேண்டும் என்று.இன்றைக்குத் தான் என்னுடைய ஆசை நிறைவேறப் போகுதுஎன்றவாறு அவளது மடியை நோக்கித் தலையைக் கொண்டு போக,அடப்பாவிப் பயலே,என்னை வீட்டை விட்டுத் துரத்தத் தான் வழி பண்ணுகிறாய் என்ன?,என்றவாறு தலையைப் பிடித்துத் தள்ளி விட மணலில் விழுந்த தனுவிற்கு முகத்தில் மண் ஒட்டிக் கொண்டது.வேறு யாராவது என்றால்,இந்த நேரம் கன்னம் சிவக்க வைத்திருப்பான்.செய்தது,காவி யாச்சே,அப்பொழுதும் கோவத்துக்கு முன்னாடி காதல்தான் வந்து நின்றது.முகத்தில் உள்ள மண்ணைத்தட்டாமல் தலையைக்குனிந்து கொண்டு இருந்தான்.ஐயோ செல்லம்,மன்னிச்சு கொள்ளுடா,என்றவாறு அவளது பூப்போட்ட கைக் குட்டையினால் முகத்தைத் தட்ட நினைத்தவள்,தட்டினால் மண் முகத்தைக் கீறும் என்னடா?,என்றவாறு மண்ணைப் பொறுக்கத் தொடங்கினாள்.போடி இவளே,மண்ணைப் பொறுக்கி எப்படி முடிகிறது? என்றவாறே நாலு தட்டில் மண்ணைத் தட்டி விட்டான்.அவளது கண்ணைப் பார்த்த வாறே “என்னை நீ,அவமானப் படுத்திட்டா என்ன?என்று அவன் ஏக்கமாய்க்கேட்க அவள் அவனது தலையை மெதுவாய் தன் மடியில் வைத்துக் கொண்டாள் காவி.நெஞ்சு நிறைத்த சிரிப்புடன்,கண்ணை இறுக்க மூடிக்கொண்டான் தனு.

தனு,....தனு.....காவியா கூப்பிட்டுப் பார்த்தாள் எந்தப் பதிலும் இல்லை.தலை குனிந்தவள் அவனது காதை செல்லமாய் கவ்வினாள்.ஐயோ அம்மா,வலிக்குது ......என்றான் போலியாய்.ஐயோ,இன்றைக்கு நான் உன்னைச் சரியாய் வதைக்கிறேன் என்னடா???என்று அவன் வலியை நம்புவது போல் நடித்தாள்.
அவள் தோளின் முன்னாள் விட்டிருந்த பின்னலில் நுனியை தன் முகத்தில் தடவிக் கொண்டவன்,காவி,உன் முடி மயில் இறகு போல இருக்கிடி,நீ தரவேண்டிய சீதனத்தில் அரைவாசியை உன் கூந்தலுக்கு கழிச்சுக்கிறேன்என்றான் சீரியசாய்.ஓகோ ,இந்த உதவாக்கரை மாப்பிளைக்கு சீதனம் வேண்டுமாம்டி,என்னை விட்டால் உனக்கு பொண்ணே கிடைக்காதுடா,அநியாயத்துக்கு மிஸ் பண்ணிராதடா என்று கூறி விட்டு நெஞ்சு குலுங்கச் சிரித்தாள்.மேலே அண்ணாந்து பார்த்தவன்,பயமாய் இருக்கிறதடி,ப்ளீஸ் என்றான் குறும்பாய்.சற்று வலிக்க உச்சியிலே ஒரு கொட்டுக்கிடைத்து.முடிகள் குடியிருக்க விருப்பம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்த தலையில் அந்தக் கொட்டு சற்றே வலித்து விட்டது.அவன்,பல்லைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்த போதிலும்,கண்ணில் திரண்டு வந்த அந்தத் பனித்துளியைக் கண்டவள் பதறியே விட்டாள்.விசுக் விசுக்க்கென்று கேட்ட சத்தம் பின் விம்மலாய் வெளிக் கிளம்பியது அவளிடம் இருந்து.திடீர் எனத் தலை குனிந்தவள்,நச் என்ற முத்தத்தை அவன் நெற்றியில் பதித்தாள்.தூக்கிய அவன் தலையாய் தன் நெஞ்சோடு அணைத்த படி,அவன் உச்சித் தலையிலே சூடாக ஊதினாள்.அந்தச் சூடு,தலையைக் கடந்து இதயம் வரைக்காதல் தீயைப் பாய்ச்சியது.       

புற்றுநோய் தொடரும்.........
                         

10 comments:

சென்னை பித்தன் said...

முதல் பாகத்தையும் படித்து விட்டு வருகிறேன்!

malgudi said...

@சென்னை பித்தன்படித்துவிட்டுக் கருதுரையுங்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பயனுள்ள பதிவு,,
பாராட்டுகள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

:))

Chitra said...

right now, one of my friends, is going through this difficult time. I pray that she recovers from this soon.

malgudi said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!கருத்திற்கு நன்றி Boss.

malgudi said...

@முனைவர்.இரா.குணசீலன்
part1 -> :-(
part2 -> :-)
part3 -> ???

malgudi said...

@Chitraஎனது அயலவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிநாதமாகக் கொண்டே கதையை அமைத்துள்ளேன்.அந்த வலி கொடூரமானது.

ஆகுலன் said...

அண்ணே கதை அருமை ....சிறப்பா போகுது...
தொடர்ந்து கொஞ்சம் கெதியாய் எழுதுங்கள்.....

malgudi said...

@ஆகுலன்நன்றி.விரைவாகத் தொடர முயற்சிக்கின்றேன்.

Post a Comment