Saturday, January 5, 2013

வலியையும் வேதனையையும் உணராவிட்டாலும் பரவாயில்லை,அதை வைத்து ஆதாயம் தேடாதே


சனிக்கிழமை என்பதால் அரை  நாள் வேலையை முடித்துக்கொண்டு ,ஏதோ விடுதலை உணர்வை சற்றே உணர்ந்தவனாய் அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான் அவன்.
பிரதான பாதையை அண்மித்தவனுக்கு சற்றுத்தொலைவில் சுட்டெரிக்கும் வெயிலில் அழுக்காய் ஒரு பெண் தென்பட்டாள்.அவளை நோக்கி நடந்துகொண்டிருந்தவனுக்கு அவளது அழுகையுடன் கூடிய முனகல் தெளிவாய்க்கேட்டது.அந்த ஓசை மனசை சற்றே உலுக்க அவளை நோக்கி பார்வையைக் கூர்மைப்படுத்தினான்.



Sunday, October 21, 2012

வயல்ப் பயணம்.....1




அது என்ன காரணமோ தெரியவில்லை,முன்னாடி போல் எழுதுவதற்கு பெரிதாக இஷ்டம் இல்லை.அப்படி எழுத உட்கார்ந்தாலும் முகப்புப்புத்தகத்தை பத்து நிமிடம் பார்த்து விட்டு எழுதுவோம்,என்று அதைத்திறந்தால் எழுதுவதற்கு ஒதுக்கிய நேரத்துக்கும் மிச்சமாக புடுங்கிவிட்டு எழும்புவதான் கதை.(டைப் பண்ண ஆரம்பிச்சிட்டல்ல, மேட்டர்க்குத் தாவிர்ரா கைப்புள்ள)

Sunday, October 7, 2012

எவ்வாறு VLC Media player இல் Mobile Tv பார்க்கலாம்???


நீண்ட காலமாக பதிவு எழுதாமல் விட்ட காரணமோ என்னமோ,மீண்டும் எழுதுவது என்று உட்கார்ந்தால் அது சோம்பலின் காரணமாகத்தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு சின்ன பிளாஷ்பேக்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மட்டக்குளியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தகாலத்தில் நண்பன் சங்கர் தன் கனவுக்காதலிக்கு (அப்படி நான் நினைக்கின்றேன்)மீராஜாஸ்மின் படத்தைப் போட்டுக்கொண்டு கவிதை பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்தான் ப்லோக்கில்.

சங்கர் ப்ளாக்கிற்கான இணைப்பு : மழைக்கால தவளைகள்
இப்பவெல்லாம் பாஸ்,நம்ம ரேஞ்சுக்குவந்திட்டார்,அதாவது எப்பவாவது எழுதுவார் என்று சொல்லவந்தன்.