Friday, December 17, 2010

மோட்டார் சைக்கிள் கபாலிகள்




மோட்டார் சைக்கிள வச்சிட்டு நம்ம பசங்க பன்ற ரவுசு தாங்கல எண்டு நினைச்சிட்டு இருந்த எனக்கு இந்தப்புண்ணியவான்களைப் பார்த்ததற்க்குப் பிறகு, அட நம்ம பயல்கள் தேவல என்று தோணிச்சு.பாருங்கையையா பாருங்க !
இந்த கொக்கா மக்கா பாக்கிற வில்லங்கத்தை.

இவங்களுக்கு நம்ம ஸ்டைல சில கமெண்ட்ஸ் விட்டுப் பார்க்கலாம் எண்டுதான்.



என்ன தான் மண்டைக்கு ஹெல்மெட் போட்டாலும் பாடி டமேஜ் ஆயிட்டா பெர்சனாலிட்டி கம்மி ஆயிடும் இல்ல.அதுமட்டும் இல்ல மக்கா,புது ஸ்டைல் எண்டா பொண்ணுகளுக்கு ரொம்ப இஷ்டம்.
வட்டா...........................








சட்டை போடாம போகிறாரே அவர் பெயர் தான் சல்மான்கான்,பின்னாடி அவர் தொப்பை ஆடாம பிடிச்சிட்டு இருக்காங்களே அவ நம்ம அசினுதாங்க.அதான் இருவரும் சேர்ந்தா நமக்குப் பிடிக்காதே எண்டுதான் ஹெல்மெட்டைப் போட்டு முகத்த மறச்சிருக்காங்க.இரண்டு பேருக்கும் இடையில ஒரு பய புள்ள தெரிறானா?அதாங்க குறிசுக்காட்டிப்புட்டம்.யாரு பெத்த புள்ளையோ இம்புட்டுக் கஷ்டப்படுகிறான்.அவன் என்ன சொல்லியிருப்பான்

அட முள்ளமாரி உண்ட கப்புத்தாங்காம மூச்சே அடங்கிட்டையா ! என்ன உங்கட ஆட்டத்தில சேர்த்துக்காதீங்க,நான் எப்படியோ பிழைச்சிக்கிரன்.
வண்டியைக் கொஞ்சம் நிப்பாட்டுடா.புச்சி மண்டையா!










ஜாஸ்தி பேச விரும்பல்ல,இனம் இனத்தைச் சேரும் என்பதற்கு நல்ல சாம்பிள்.










பன்னிக்குட்டி போல பசங்களைப் பெத்துப்போட்டது தப்பில்லையா,
ஆனா அத்தனையையும் மாட்டு வண்டியில கொண்டு போற நினைப்பில ,மோட்டார் சைக்கிள்ல கொண்டுபோறியே பாரு !
அது தான் தப்பு.
மண்டைக்கு மேல கூடாரம் ஒரு கேடு.
ஊரு விளங்கிடும்....................









அடேய் சண்டாளா பாருடா,
பன்னிக்குட்டிகள் மூச்சிவிட முடியாம எப்படி மூஞ்ச நீட்டிட்டு இருக்குதுகள் எண்டு.
அடைச்சதும் அடைச்சா,ஒரு பெரிய கூட்டில அடைச்சா குறைஞ்சா போயிடுவா.

சார்,இவனை மிருக வதைச் சட்டத்தில பிடிச்சு ஒரு சின்ன செல்லில அடையுங்க.





நம்ம மூஞ்ச தொடந்து க்ளோஸப்பில பார்த்து நமக்கே இம்புட்டு கடுப்பாயிட்டே.
பாவம் ஜனங்க ,எத்தனை சிரமப்பட்டு இருப்பாங்க.










மாப்பு ! ஜஸ்ட்டு சறுகின,ஊருக்கே ஆம்லெட் போட்ட கதையாகிடும்.
அம்புட்டுதான் ,சொல்லிப்புட்டேன்.


























நக்கலு...............

Friday, December 10, 2010

கணனியில் தகவல் பாதுகாப்பு-பாகம் 1


கணணிப்பாவனையின் உயிர்நாடியான விடயமே தகவல் பாதுகாப்பு என்பதனை ஜூலியன் அசேஞ்சும் விகிலீக்சும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.ஜூலியன் அசேஞ் பற்றி விபரமாக அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தால் சுடுதண்ணி அவர்களின் வலைப்பூவைப் பார்க்கவும்.தொடர்ப்பாகங்களாக மிகவும் ரசனையாக எழுதியுள்ளார்.


சாதாரணமாக அலுவலகப் பாவனையில் தகவல்ப்பாதுகாபு சம்மந்தமாகத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.அதற்கு என் சோம்பல் எதிர்ப்புத் தெரிவியாமல் இருப்பது வாசகர்களின் கைகளிலே உள்ளது.
;-)

1.

இணைய உலாவிகளிலே(Internet Browsers) பாதுகாப்புக் கூடியது எனக்கருதப்படுவது Firefox ஆகும்.அதில் உள்ள ஒரு குறைபாடானது நாம் அதில் சேமிக்கும் கடவுச்சொற்களை இலகுவில் திருடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது.
பொதுவாக Tools -> Options -> Security Tab -> Saved Passwords ஐக் கிளிக் பண்ணினால் நான் எந்தெந்த சைட்(web site) களுக்கு என்னென்ன பயனர் பெயர் (user name)உபயோகிக்கின்றோம் என்பதைக் காட்டிவிடும்.பின் show passwords ஐக் கிளிக்கினால் அதன் கடவுச்சொல்லையும் காட்டிவிடும்.
இந்த தரவுகள் சேமிக்கப்பட்டுள்ள இடத்தை அறிய start -> run -> %appdata% என type ப் பண்ணி எண்டரைத் தட்டவும்.அது எம்மை C:\Documents and Settings\Your user name\Application Data
இக்கு அழைத்துச் செல்லும். தொடர்ந்து Mozilla -> Firefox ->Profiles ->c149sv6i.default சென்றால் key3.db எனும் database file ஐக் காணலாம்.இந்த file இலே user name & passwords விபரங்கள் சேமிக்கப் பட்டுள்ளன.இதை யாராவது copy பண்ணி தங்களது கணனியில் அதே location இல் paste பண்ணிவிட்டால் போதும் அத்தனை தகவல்களும் கைமாறிவிடும்.
இதனைத் தடுக்க ஒரு இலகுவான வழி உள்ளது. Tools -> Options -> Security Tab ->Master passwords என்பதைக் கிளிக்கி password ஐ உருவாக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் அந்த key3.db ஆனது encrypt செய்யப்பட்டுவிடும்,அதனை decrypt செய்வதற்கு Master password தேவை.
Master password உருவாக்கி விட்டால் எமது passwords களை யாரும் அறிய முடியாது என்று இல்லை.perl ,java script மூலம் அதனையும் தகர்த்து விடலாம்.திருடன் திறமைசாலியாக இருந்தால் தகவல் திருட்டைத் தவிர்க்கவே முடியாது.ஆனாலும் முயன்றவரைத் தடுப்பது எமது கடமை.


Wednesday, November 24, 2010

வெடிமுத்து பாகம் -2





பழைய வெடிமுத்துவைத் தரிசிக்க

நான் சிறுவயதில் மிகவும் ரசித்த ஒரு நபர் எமது பாடசாலை சமூகவியல் ஆசிரியர்.அவரை எனக்கு மிகவும் பிடிக்கக்காரணம் அவரது அழகான பொய்கள்.வரலாறே பொய்யும் புரட்டும் கற்பனைகளும் மலிந்து கிடக்கும் ஒரு பாடம்.அதில் இவர் வேற ஒரு புளுகு மன்னன்.நினைத்துப்பாருங்கள் அந்த வகுப்பின் நிலையை.ஆனாலும் அந்தப் பாடவேளையில் தான் நேரம் செட்டை கட்டிப்பறக்கும்.எனக்கு பிடித்த வேடிமுத்து என்ற பெயரையே ஆசிரியருக்கும் சூட்டுகின்றேன்.

அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் இவர் விடுவதெல்லாம் கரடி என்று.ஆனாலும் அவர் முகபாவத்திற்க்கும்,அவரது குரலின் ஏற்ற இறக்கத்திற்க்கும் அனைவரும் ரசிகர்கள்.அதிலும் அத்தனை பொய்களையும் உண்மை போலவே சொல்லும் அவரது பாங்கே தனிதான்.

அன்று எமது 9 வகுப்பு முதல் நாள்.அன்றுதான் எமது ஹீரோ ஒபெனிங் சீன்.வகுப்பிற்கு வந்தவர் எமது வணக்கங்களுக்கு இலேசாக புன்னகைத்து விட்டு ஆசிரியர் மேசையிலே அமர்ந்தார்.இன்றைக்கு முதல் நாள் தானே,என்ற படியால் பாடம் நடத்த மாட்டேன்,என்றார் .நாங்க எல்லாம் அப்படியே ஷாக் ஆயிட்டம்.நேற்று ஒரு கிரிக்கெட் மேட்ச்,செம த்ரில்.புகுந்து கலக்கிட்டம் இல்ல,என்று அவர் முடிக்கும் முன்னே “என்ன சார் ஆச்சி என்றான் ரேங்கில் பின்னாடி இருந்து பார்த்தா முன்னாடி வரும் சுகுமார்.


“நேற்று எங்கட தெரு டீமிக்கும் பக்கத்து தெரு டீமிக்கும் கொய்யா வளவுக்குள்ள மேட்ச் நடந்திச்சு.எங்களைப் பொறுத்தவரை இந்தியா-பாகிஸ்தான் சார்ஜா மேட்ச்சிக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்ல.ஏன் எண்டா இது கவுரவப் பிரச்சனை.

“டாஸ்ல அவனுகள்தான் ஜெயிச்சு பாட் செய்தான்கள்.அந்தப் பிட்ச் முதலில துடுப்பெடுத்தாடும் அணிக்குத்தான் சாதகம்.அதோட எமது வேகப்பந்து வீச்சாளர் ஆப்ரிக்கா மண்டையன் வராததும் எமக்கு பாதகமாப் போச்சி.எமது அணிப்பந்து வீச்சுக்கு எட்டுத்திக்கிலும் அடிச்சு கலங்கடிச்சிட்டானுங்க.நான் தான் ஒன்ற விட்ட ஓவரப் போட்டு ஓட்டத்தைக் கட்டுப்படுத்தினன்என்று அவர் முடிக்க எனக்குப் பக்கத்தில் உள்ள நண்பன் “இது இவருக்கே ஓவராத் தெரியேல்ல! என்று என் காதருகே முணுமுணுத்தான்.கதையைக் கேட்கவே மனம் ஆசைப்பட்டதே தவிர லாஜிக் பிடிக்கத்தோணவில்லை.

ஆசிரியர் தொடந்தார்,இப்படியாக அவனுங்க 10 ஓவருக்கு 86 ஓட்டம் குவிச்சிட்டானுங்க.இனி நம்ம டீம் பாட்டிங்.என்ன ஓப்பனிங் போகச்சொல்லி பக்கத்துக்கு வீட்டுப் பங்கஜம் பாட்டியும் அவ பேத்தியும் ஒரே கூச்சல்.நம்ம பாட்டிங்கிற்கு அவங்க தீவிர ரசிகைங்க.நான் சைகை காட்டி அமைதி காக்கச் சொன்ன பின்னாடிதான் அவங்க அமைதியானங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............. என்ற சத்தம் வகுப்பறையின் பின்னாடி இருந்து மேதுவாகக்கேட்டது.

ஓப்பனிங் இறங்கின பயலுக பந்தை வேஸ்ட் பண்ணிட்டே ஒன்று,இரண்டு எண்டு ஓட்டத்தை எடுத்திட்டு இருந்தது.5 ஓவருக்கு 22 ஓட்டம் .பொறுமை எல்லை தாண்டிய பங்கஜம் பாட்டியும் பெட்டிக்கடை வேலுத்தாத்தாவும் துடுப்பெடுத்தாடும் பயலையும் அவன் தகப்பனையும் திட்டத் தொடங்கிவிட்டனர்.அதிலும் பாட்டி ஒரு படி மேலே போய் டின் மீன் தகர டப்பாவால் அவன் தலைக்கு குறி வைத்து எறிஞ்சாள்.அவன் புண்ணியம் குறி தப்பிவிட்டது.

“எனக்கும் ஆட்டத்தின் போக்கு பயத்தை உண்டுபண்ணிட்டு,ஆட்டம் இழந்தால் காரியம் இல்லை,அடித்தாடுங்கள் எண்டு கட்டளையிட்டேன்.உத்தரவுக்கு காத்திருந்த போல ஒருவர் பின் ஒருவராக ஒரு ஓவருக்குள்ளே மூன்று பேர் ஆட்டம் இழந்தனர்.

“அடுத்ததாக நான் கொக்குப்புறா பேட்டைச் சுமந்து கொண்டு களத்தில் இறங்கினேன்.எமது தெருவினர் ஒரே கரகோஷம்.நான் கை காட்டி நிறுத்தச் சொன்னேன்.எனக்கு பப்ளிசிட்டி அவ்வளவாகப் பிடிக்காது.

“முடியல்லை.............. “,பக்கத்துக்கு நண்பன் முணுமுணுத்தான்.


“நான் அப்பப்ப 6 விளாசி ஓட்டத்தைக் கூட்டிட்டு இருந்தன்.கடைசியாக 2 போலுக்கு 12 ஓட்டம் தேவை.எல்லா மாணவர்களும் கதிரையின் நுனியில் அவரது நேரடி ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டுஇருந்தனர்.

“பந்த வீசின பரதேசி வேகமா ஓடிவந்து மெதுவாக வீசிவிட்டான்.பந்து மட்டையில படவில்லை.எமது தெரு ஜனங்கள் கலங்கிய கண்ணோடு இருக்க,பக்கத்துக்கு தெரு விளங்காத பயல டப்பான்கூத்து ஆடி வெறுப்பேத்தின.பாட்டி அழுது கொண்டே போய் விட்டாள்.

“ஆனாலும் எனக்கு நம்பிக்கை போகவில்லை,அடுத்த பத்துக்கு ஓங்கி அடிச்சன்,பந்து இரண்டு பாதியாக உடைந்து ஒன்று long-on திசையிலும் மற்றையது mid-on திசையிலும் ஆறு ஓட்டங்கள் ஆயின.நடுவர் இரண்டு தடவைகள் 6 காட்டினார்.

எனது தெருவினர் மைதானத்திற்குள் ஓடி வந்து என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு கூச்சல் போட்டனர்.எனக்கு ஒரே சந்தோஷம்,ஏனென்றால் எண்ட தெருவின்ட மானத்தைக் காப்பாத்திட்டேன் என்று “.


அப்பொழுது பெல் அடித்தது.சரி நாளையில இருந்து பாடத்தைப் பார்க்கலாம் என்று புறப்பட்டார்.அன்றிலிருந்து அவர் பாடம் என்றால் வடிவேல் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தது போலத்தான்.

வெடி தொடரும்........................

Sunday, October 31, 2010

பசங்க கலாட்டா


நாம் மனம் சோர்ந்து இருக்கும் போது குழந்தைகளுடன் எமது நேரத்தைச் செலவிடுவோமானால் எமது மனதின் இறுக்கம் தானாகவே தளர்வடைந்துவிடும்.காரணம் நாம் குழந்தைகளுடன் இருக்கும் வேளை ,அவர்கள் எம்மை தமது உலகத்திற்கு அழைத்துச்சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தின் மீது எந்தப்பயமும் இல்லை,இந்த நிமிடம் சந்தோசமாக இருக்க வேண்டும் அது மட்டும் தான் குறிக்கோள்.

நான் இணையத்தில் ரசித்த சிறுசுகள்.இவங்க என்ன பேசி இருப்பாங்க என்று எனது கர்ப்பனையில்.

1. தூக்கத்தில இருக்கிற என் முன்னாடி சரக்க வச்சி அசிங்கப்படுத்திட்டாங்க,குடிகாரப்பசங்க

2. அப்பா,நீ குடிக்கிறதுக்குக் காரணம் அம்மாதான்,நான் குடிக்கிறதுக்குக் காரணமும் அம்மாதான். தாய்ப்பால் கிடைக்காத ஏக்கத்தில் நான் குடிக்கன்,உனக்கு என்னப்பா பிரச்னை?


3. இன்றைக்கு சாப்பாடு சூப்பரா இருக்கோணும் சாமியோவ்.



4. அப்பா,நீ புத்தகம் வாங்கித்தராட்டி,நான் இப்படிதான் பண்ணுவன்.



5. ஒரு கட்டில் இல்ல,ஒரு தலையணை இல்ல.என்ன யாருமே கண்டுக்கிற இல்ல.என்னப் புரிஞ்ச ஒருத்தன் நீதாண்ட ஜிம்மி.



6. என்னப் பார்த்து சிரிக்கிறிங்களா?
மாப்பு ,உனக்கும் இருக்குடா ஆப்பு.



7.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.நம்ம சப்பாத்து சூப்பர் இல்ல.





8. பயந்திட்டீயா?சும்மா ,விளையாட்டுக்குத்தான் இப்படிப் பண்ணன்.




9. நான்தாங்க அமெரிக்காவின் அடுத்த Under Taker (Wrestling Player).பசங்களா ! கொஞ்சம் பைக்ல ஏத்திவிடுங்கப்பா.




10. எப்பூடி,நம்ம கோச்சிங்




Sunday, October 24, 2010

பஞ்ச் டயலாக்ஸ்

 நாங்களும் சொல்லுவம் இல்ல,கேட்டுக்கோ,
count down start,


************
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான் ( many Girl Friends) ஆனா
கை விட்டுடுவார் (சப்ப wife),
நல்லவங்கள
ஆண்டவன் நிறைய சோதிப்பான் (No Girl Friends) ஆனா கை விட மாட்டார் (Double Super wife)



***************
கண்ணா... நல்ல கேட்டுக்கோ... உடம்புள்ள sugar இருக்குறவனும் மனசுல figure இருக்குறவனும் நல்லா தூங்குனதா சரித்திரமே இல்ல....

 

***************

பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
...
இதயத்தின்
வாசனையில்
நட்பு

 

***************  

வாழ நினைக்கும் பெண்ணுக்கு ,
வசந்தம் மட்டும் சொந்தம் .
தாகம் கொண்ட பெண்ணுக்கு
தண்ணீர் மட்டும் சொந்தம் .
மோகம் கொண்ட பெண்ணுக்கு ,
...
காமம் மட்டும் சொந்தம் .
காதல் கொண்ட பெண்ணுக்கு ,
நான் மட்டுமே சொந்தம் ...........Diz is 4 my sweet heart.............

  
***************

முதலில் கருவறை
அடுத்து வகுப்பறை
நாளை மணவறை
முடிவில் கல்லறை
அதற்குள் ஏன் சாதி மதம்?

 

  ***************

நன்றி:fb நண்பர்கள்.

Sunday, October 17, 2010

ரோபோ குறும்படம்

திறமை பலரிடம் இருகின்றது,ஆனால் எல்லோருக்கும் அது வெளிப்படுவதில்லை.காரணம் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.ஒருவர் கன்னி முயற்சி செய்யும் போது,தட்டிக்கொடுத்து பாராட்டுவதால் எங்களுக்கு ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.ஆனால் பாராட்டுப் பெறுபவரின் மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவிருக்காது.அது அவரை அம்முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க உந்துசக்தியாக இருக்கும்.

இந்தகுறும்படத்தைப் பார்க்கும் போது ,இது அவர்களின் முதல் முயற்சி என்று கண்டிப்பாகக் கூறமுடியாது.அத்தனைநேர்த்தியாக காட்சிகள்ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.பின்னணிக் குரல் மிக அருமையாகஉள்ளது.அலைக்சின் நடிப்பு செம கச்சிதம்.

 இதன் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்கள்:
கீர்த்தனன்
ஆனந்த அலைக்ஸ்
ஷர்மி



இதில் நான் பெருமைப்படும் விடயம் ஈழத்தில் இருந்து பெங்களூருக்கு படிக்கச்சென்றவர்களின் கூட்டுமுயற்சி.

Friday, October 15, 2010

மைக்ரோசாப்ட் 2019

எதையெல்லாம் கற்பனையாக நினைத்தோமோ அவையெல்லாம் கண்முன்னே வந்து நிற்கின்றன.கற்பனைக்கும் நிஜத்துக்குமான தூரம் மிகவும் குறுகிவிட்டது.
காரணம் தொழில்நுட்பம்.
பத்துவருடத்துக்கு முன்னாடி என் நண்பன் சொன்னது இன்னமும் மனதிலே நிற்கிறது.அவனது மாமா வெளிநாட்டில இருந்து கம்ப்யூட்டர் கொண்டுவந்திருக்கிறாராம்.அதை வைப்பதற்காக AC ரூம் கட்டுகிறாராம்.மாமா அதில வேலைசெய்யும் போது சொல்லுகிறன் ,வந்து பாரு.என்றான்.
எனக்கு  இப்பவே பார்க்கணும் போல ஆசையா இருக்கின்றதுடா ,தயவு செய்து கூட்டிக்கொண்டுபோய் காட்டண்டா என்றேன் நான்.
இல்லைடா.அதுக்குள்ளே தூசி போனாப் பழுதாகிடுமாம்.அதனால AC ரூம் கட்டின பிறகுதான் பாவிக்க இயலும் எண்டு மாமா சொல்லிருக்காரு என்றான் அவன்.


இப்ப என்னிடமே மேசைக்கணணி ஒன்றும் மடிக்கணணி ஒன்றும் இருக்குது.(சுய தம்பட்டம் இல்லைங்கோ............).

கீழே உள்ளவீடியோவைப் பாருங்க,இன்னம் என்னவெல்லாம் ஆகப்போகுது என்று.

Monday, October 11, 2010

பிரபுதேவா விவாகரத்து





விடியாத இரவில் தூக்கத்தைத்தொலைத்துவிட்டு
வெறித்துக் கொண்டிருந்தான் பிரபு,அதன் வருகைக்கு
தலைமாட்டுக் கடிகாரம் படபடத்தது
அவன் இதயத் தாளத்திற்கு

நாளைய பொழுதை நினைக்க
நிலாக்குளிரிலும் நெற்றியில் பனிப்பூத்தது
நாளை அவனது விண்ணப்பத்திற்கு பதில்
அவனுக்குப் போட்டியாக,இல்லை
அவன் சார்பாகவே விண்ணப்பித்தது
அவன் மனைவி-இல்லை சரண்யா
திருமணத்தில் ஒத்த மனம்
பிரிவிலும் ஒத்தது ,எத்தனை ஜோடிப்பொருத்தம்

இமையும் கண்ணும் ஒத்த முனைகள் ஆயின
போர்த்துக்கொள்ள மறுத்த கண்கள்
கண்ணீரில் குளிர்த்துக் கொண்டிருந்தது
போதும் என்று மனம் கெஞ்சியும்
கண்களுக்கு அது புரியவில்லை

மணமேடையில் சரண்யா பார்த்த –ஓரக்கண் பார்வை
வெள்ளைச் சுவரில் ஓவியமாய் தெரிந்தது
நீண்ட நாளின் பின் அழகாய் தெரிந்தாள் –அவள்
பழைய நினைவு – படமாய் ஓட
உதடுகள் விரிந்தன


தலைமாட்டுச் சிணுங்கல் சத்தம் உரக்க
கண்விழித்தான் – மிரட்டியது நேரம்
பம்பரமாய்ச் சுழன்று ஆடைக்குள் புகுந்தான்
வாசலில் வண்டி புகைப்பிடிக்க ,
சிட்டாய்ப் பறந்தது.

நீதிமன்றக் கட்டடத்தைப் பார்க்க
இதயம் பனிக்கட்டியாய் – உறையத்தொடங்கியது
இதயம் இறுக்கமாவதை உணர்ந்தவன்
மெதுவாக ஏறினான் படிகளில்
உறைந்தது உருகுவது போல உணர்வு
நிமிர்ந்தான்-தலை குனிந்து கடந்து சென்றாள் சரண்யா

பெரிதாய் ஒலித்தன அவன்-அவள் பெயர்கள்
மெலிதாய் கேட்டது-அவர்கள் விண்ணப்பத்தின் பதில்
கேட்டது தான் கிடைத்தது
ஓய்ந்திருந்த மனம் புயலாய் மாறத்தொடங்கியது
பதறிக்கொண்டே வாசலை நோக்கினான்
பனியூடே அவள் பயணித்துக் கொண்டிருந்தாள்
கண்ணீர் வாயிலை மூடிப் பார்வையை மறைத்தது.
பழக்கப் பட்ட சுருதி குறைந்து கொண்டிருந்தது
அது ...........................................
விடை தேடிய மனம் ,உடனே சொன்னது
அது சரண்யாவின் கொலுசொலி




 பிற்குறிப்பு:நடிகர் பிரபுதேவா பற்றியது என்று நம்பிவந்தால்,அதற்க்கு கம்பனி பொறுப்பல்ல..................