Monday, October 11, 2010

பிரபுதேவா விவாகரத்து





விடியாத இரவில் தூக்கத்தைத்தொலைத்துவிட்டு
வெறித்துக் கொண்டிருந்தான் பிரபு,அதன் வருகைக்கு
தலைமாட்டுக் கடிகாரம் படபடத்தது
அவன் இதயத் தாளத்திற்கு

நாளைய பொழுதை நினைக்க
நிலாக்குளிரிலும் நெற்றியில் பனிப்பூத்தது
நாளை அவனது விண்ணப்பத்திற்கு பதில்
அவனுக்குப் போட்டியாக,இல்லை
அவன் சார்பாகவே விண்ணப்பித்தது
அவன் மனைவி-இல்லை சரண்யா
திருமணத்தில் ஒத்த மனம்
பிரிவிலும் ஒத்தது ,எத்தனை ஜோடிப்பொருத்தம்

இமையும் கண்ணும் ஒத்த முனைகள் ஆயின
போர்த்துக்கொள்ள மறுத்த கண்கள்
கண்ணீரில் குளிர்த்துக் கொண்டிருந்தது
போதும் என்று மனம் கெஞ்சியும்
கண்களுக்கு அது புரியவில்லை

மணமேடையில் சரண்யா பார்த்த –ஓரக்கண் பார்வை
வெள்ளைச் சுவரில் ஓவியமாய் தெரிந்தது
நீண்ட நாளின் பின் அழகாய் தெரிந்தாள் –அவள்
பழைய நினைவு – படமாய் ஓட
உதடுகள் விரிந்தன


தலைமாட்டுச் சிணுங்கல் சத்தம் உரக்க
கண்விழித்தான் – மிரட்டியது நேரம்
பம்பரமாய்ச் சுழன்று ஆடைக்குள் புகுந்தான்
வாசலில் வண்டி புகைப்பிடிக்க ,
சிட்டாய்ப் பறந்தது.

நீதிமன்றக் கட்டடத்தைப் பார்க்க
இதயம் பனிக்கட்டியாய் – உறையத்தொடங்கியது
இதயம் இறுக்கமாவதை உணர்ந்தவன்
மெதுவாக ஏறினான் படிகளில்
உறைந்தது உருகுவது போல உணர்வு
நிமிர்ந்தான்-தலை குனிந்து கடந்து சென்றாள் சரண்யா

பெரிதாய் ஒலித்தன அவன்-அவள் பெயர்கள்
மெலிதாய் கேட்டது-அவர்கள் விண்ணப்பத்தின் பதில்
கேட்டது தான் கிடைத்தது
ஓய்ந்திருந்த மனம் புயலாய் மாறத்தொடங்கியது
பதறிக்கொண்டே வாசலை நோக்கினான்
பனியூடே அவள் பயணித்துக் கொண்டிருந்தாள்
கண்ணீர் வாயிலை மூடிப் பார்வையை மறைத்தது.
பழக்கப் பட்ட சுருதி குறைந்து கொண்டிருந்தது
அது ...........................................
விடை தேடிய மனம் ,உடனே சொன்னது
அது சரண்யாவின் கொலுசொலி




 பிற்குறிப்பு:நடிகர் பிரபுதேவா பற்றியது என்று நம்பிவந்தால்,அதற்க்கு கம்பனி பொறுப்பல்ல..................

4 comments:

Chitra said...

படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.... அதுவே நல்லா இருக்குது.... :-)

movithan said...

@Chitra

நன்றி அக்கா.

ILA (a) இளா said...

Some prob with attaching thamizmanam script, unable to read

movithan said...

@ILA(@)இளா

OK,I'll solve that.
thanks for information.

Post a Comment