Sunday, October 21, 2012

வயல்ப் பயணம்.....1
அது என்ன காரணமோ தெரியவில்லை,முன்னாடி போல் எழுதுவதற்கு பெரிதாக இஷ்டம் இல்லை.அப்படி எழுத உட்கார்ந்தாலும் முகப்புப்புத்தகத்தை பத்து நிமிடம் பார்த்து விட்டு எழுதுவோம்,என்று அதைத்திறந்தால் எழுதுவதற்கு ஒதுக்கிய நேரத்துக்கும் மிச்சமாக புடுங்கிவிட்டு எழும்புவதான் கதை.(டைப் பண்ண ஆரம்பிச்சிட்டல்ல, மேட்டர்க்குத் தாவிர்ரா கைப்புள்ள)

Sunday, October 7, 2012

எவ்வாறு VLC Media player இல் Mobile Tv பார்க்கலாம்???


நீண்ட காலமாக பதிவு எழுதாமல் விட்ட காரணமோ என்னமோ,மீண்டும் எழுதுவது என்று உட்கார்ந்தால் அது சோம்பலின் காரணமாகத்தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு சின்ன பிளாஷ்பேக்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மட்டக்குளியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தகாலத்தில் நண்பன் சங்கர் தன் கனவுக்காதலிக்கு (அப்படி நான் நினைக்கின்றேன்)மீராஜாஸ்மின் படத்தைப் போட்டுக்கொண்டு கவிதை பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்தான் ப்லோக்கில்.

சங்கர் ப்ளாக்கிற்கான இணைப்பு : மழைக்கால தவளைகள்
இப்பவெல்லாம் பாஸ்,நம்ம ரேஞ்சுக்குவந்திட்டார்,அதாவது எப்பவாவது எழுதுவார் என்று சொல்லவந்தன்.

Monday, August 27, 2012

மீண்டும் முகமூடி....
ஹாய் அன்பான வாசகர்களே .....
இப்படி ஆரம்பிப்பதற்க்குதான் ஆசை,ஆனால் ஆசை மட்டும் இருந்தால் பத்தாதே வாசிப்பதற்கு வாசகர்களும் வேண்டுமே???எது எப்படியோ,எனக்கும் இந்த சமூகத்துக்கும் (வாசிக்கும் நாலு பேர்)ஒரு தொடுப்பாக இந்த வலைப்பூ இருந்துட்டுப்போகட்டுமே....
முந்தி எல்லாம் தனிமை கிடைக்கும் போது அடுத்து என்ன எழுதலாமென்று யோசித்து மனதிலே லிஸ்ட் போட்டு வைத்திருப்பேன்.என் வலைப்பூவே ஹோம் பேஜ் ஆக இருந்தது எல்லாம் ஒரு காலம்.இப்போ வலைப்பூவின் பெயரை யோசிச்சு டைப்பண்ற அளவிற்குப்போயிற்று...
so sad….


இப்போது எனது ஒவ்வொரு மூவ்விற்கும் கடவுள் செக் வைப்பதால்,பிடிப்பு என்பது உணவில் கூட இல்லாமல் போய்விட்டது.என்னை நான் சந்தோசமாக வைத்திருக்க நான் செய்யும் முயற்சியில்,இந்தப் பதிவு எழுதுதல் ஒரு வழியாக இருக்கும் என்றநோக்கில் மீண்டும் தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.(கண் ஆபரேசனுக்குப்பிறகு எழுதுவாற சுஜாதா என்ற நினைப்பு,படுவா(
me))

12B ஷாம்க்கு இன்டர்வியூ மிஸ் பண்ணபடியால்தான் ஜோதிக்காவும் கிடைச்சது,ஜாலி வாழ்கையும் கிடைச்சது.ஆனா பலருக்கு இன்டர்வியூ மிஸ் பண்ணா இருக்கின்ற நிம்மதி போறதோட ,பிடிக்கிற தருவாயில இருகின்ற கிளியும் பறந்து பறந்து போய்டுமாம்.... (ஒரு உதாரணத்துக்குச் சொன்னன்,நோ சம்பந்தம் டு மீ)

சரி,மேட்டருக்கு வாறன்,,கொஞ்ச நாளா மூடி இருந்த கடைய,தூசு தட்டிட்டு இருக்கேங்க ,அம்புட்டுதான்Monday, April 23, 2012

என் நாய்க்குச் சமர்ப்பணம்கடந்த மாதம் ஆரம்பித்த தொடர்கதையானது பாதியிலேநிற்கின்றது. தொழில்க் கடமைக்கு மத்தியில் பரீட்சைக்கு தயாராகவேண்டிய சூழ்நிலை.எழுதுவதற்கான ஆசை அதிகமாய் இருந்தாலும் அதைவிட அவசியமான கடமைகள் இருப்பதனால்,வலைப்பதிவில் இருந்து சற்று விலகியிருக்க தீர்மானித்திருந்தேன்.அதையும் தாண்டி பதிவு எழுதத்தூண்டியது,இன்று நடந்த சம்பவம்.


Sunday, March 25, 2012

கண்ணுக்குத்தெரியாத என் தேவதை....பாகம் 3

இந்தத் தொடர்கதையின் முன்னைய பாகங்களைப் படித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

(அப்படி என்ன கறுமத்தை எழுதித்துலைத்திருப்பான்,மன்னிப்பு என்று பெரிய வார்த்தை எல்லாம் கேட்கின்றான் என்று யோசிக்காதிங்க,உலகத்துக்கே உயிரூடுகின்ற காதலை மையமாக வைத்து ஒரு தொடர்கதையை ஆரம்பித்தேன்.அது ஆரம்பித்த நேரமோ தெரியவில்லை,ஆபீஸில் ஏகப்பட்ட வேலை.இன்று நீண்ட இடைவேளைக்குப் பின் ஆரம்பித்தால் ,எனக்கு முந்தி ஞாபகத்தில் வைத்திருந்த கதை மறந்துவிட்டது.கற்பனைக்கா பஞ்சம்,வேறு கோணத்தில் ஆரம்பித்து விட்டேன்.)

படிக்க ஆரம்பிப்பவர்கள் மீண்டும் முதல் பாகத்தில் இருந்து படிக்கவும்....
(பொறுமையாகப் படியுங்கள்,உங்கள் முதல் காதல் காட்சி சற்று லேசாகவே நிழலாடும்....அப்படி ஞாபகம் வராவிட்டால் நான் பொறுப்பில்லைங்கோ)

பாகம் 1

பாகம் 2“பார்த்தாயா??சார் போன் பண்ணியிருக்கார்,நல்ல காலம் ருவந்திக்கா போனத் தூக்கிட்டால்,இல்லாட்டி அந்தக் கொடுப்புலிர கோவத்துக்கு ஆளாகி இருக்கணும்....,என்று சத்துரி முடிப்பதுக்குள் “நீ பெரிய அழகி என்று நினைப்போ!எல்லாருக்கும் பட்டப்பெயர் வைச்சுக் கலாச்சிட்டு இருக்கா,என்று போலியாய் முறைக்க “ப்ளீஸ்டா,உண்ட காதல் கருமாந்திரத்த சீக்கிரம் சொல்லித் தொலைடா,சார் மீண்டும் கால் பண்ணுவதற்குள் நான் போகணும்என்று கைகூப்பினாள்.

Saturday, February 18, 2012

கண்ணுக்குத்தெரியாத என் தேவதை....பாகம் 2உள்ளே சென்றுகொண்டிருக்கும் போது சக பணியாளர்கள் “ஏன் போஸ் சத்தம் போட்டீர்கள்? என்று கேட்டதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் விறுவிறு என்று நடந்து கான்டீனுக்குள் நுழைந்தான் தனு.
ஓம்லேட் பணிஸ் ஒன்றுக்கும் தேநீர் ஒன்றுக்கும் ஓடர் செய்துவிட்டு தலையில் கைவைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்த தனு,யாரோ வேண்டும் என்றே தேநீரை உறிஞ்சிக் குடிக்கும் சத்தம் கேட்டுக் கண்ணைத்திறக்க,தனது தேநீரை சத்துரி குடித்துக்கொண்டிருந்தாள்.கடுப்பாய்ப் பார்தவனை வாயைக் வலம் இடமாக ஆட்டி வெறுப்பேற்றி விட்டு அலட்சியமாய்க் குடித்து முடித்துவிட்டு கோப்பையை அவன் முன்னே வைத்தாள்.உள்ளுக்குள் வந்த சிரிப்பை முகத்தில் வெளிக்காட்டாமல் “வேற பொண்ணாய் இருந்தால்,இப்படிக் கோவப்பட்டதற்க்கு ஒரு வாரத்திற்கு முகத்தில் கூட முழிச்சிருக்க மாட்டாள்,என்ன பிறப்புடா!! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போது “டேய் ,என்னை ரோஷம் கெட்டவள் என்று நினைத்துக்கொண்டு இருந்தாய் என்னடா ??என்ற வாறே தலைக்கு முட்டுக் கொடுத்த கையைத் தட்டிவிட்டாள்.
வேகமாக எழுந்தவள் ஒரு தேநீரை வாங்கிவந்து அவன் முன்னே நீட்டி விட்டு,நடக்க முற்ப்பட்டாள்.


Saturday, February 4, 2012

கண்ணுக்குத்தெரியாத என் தேவதை(இன்னமும் காதலி கிடைக்காத ஆண் சிங்கங்களுக்குச் சமர்ப்பணம்)


மீண்டும் ஒரு குறுநாவலுடன் உங்களுடன் சேர்ந்து பயணிக்கப் போகின்றேன்.

அன்று எட்டு மணி தாண்டிப் பதைபதைப்புடன் அலுவலகத்துக்குள் நுழைந்த தனுவை கண்களை மூடித்திறந்ததன் மூலம் வணக்கம் கூறிவிட்டு காதலனுடன் தொடர்ந்து சிணுங்க ஆரம்பித்தாள் சத்துரி.அவள் அருகில் இருந்த ருவந்திக்கா இவனைக் கண்டுக்கவே இல்லை.அவள் அவளவனுக்கு குறும்செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தாள்.

Saturday, January 28, 2012

இங்கே தமிழனை விட மலையாளி பல படி மேல்


சில புகைப்படங்களைப் பார்க்கும் போது எம்மையறியாமல் மனதிற்குள் சந்தோசம் பொங்கும்.அதே போல் சில படங்களைப் பார்க்கும் போது வெறுப்பும் கோவமும் ஒருங்கே ஏற்படும்.இந்தப் படத்தைப் பார்த்த மானமுள்ள தமிழனுக்கு மேலே சொன்னதில் எந்த உணர்வு ஏற்ப்படிருக்கும் என்று நான் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை.

Wednesday, January 4, 2012

என்ன கொடும்...ம சரவணன்..............

வேலைப்பளு கூடிவிட்டதாலும் ,பரீட்சை நெருங்கிக் கொண்டிருப்பதாலும் என் வலைப்பூவின் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.ஆனாலும் வேலையில் ஆணி பிடுங்கும் போதும் ,பஸ்ஸில் குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கும் போது முடிந்த மட்டும் வலையுலகில் மேய்ந்து கொண்டிருப்பேன்.(தேசிய கடமையைச் செய்யாம..எப்படி பாஸ்......).

அப்பொழுது கண்ணில் பட்ட தலையங்கம் சுர்ர்ர்ர் என்றிருந்தது.
நான் கடந்த ஆண்டு பெப்ரவரி 9ம் திகதி எழுதிய அதே ஆக்கம்,எவ்வித மாற்றமும் இன்றி வேறு வலைத்தளத்தில் வெளியிடப் பட்டிருந்தது.