Saturday, February 15, 2014

பாலு மகேந்திரா....(என் நினைவில்)





சினிமாக் கலைஞர்களில் ஒரு சிலரின் மீது அதீத பாசம் வருவது இயல்பு.இளையராஜா,மற்றும் கமலஹாசன் மீது நான் கொண்ட காதலுக்குக் காரணம் அவர்களின் வியக்க வைக்கும் திறமை மற்றும் என் தனிப்பட்ட வாழ்வில் அவர்களின் படைப்பின் தாக்கம்.

அந்த வகையில் பாலுமகேந்திரா அவர்களை மிகவும் நேசிக்கக் காரணம் அவர் எங்கள் ஊர்காரர் என்பதுதான்.கொழும்பில் படிக்கும் நாட்களில் எங்கள் ஊர்ப்பெருமை என்பதில் பாலுமகேந்திரா,ஒரு முக்கிய கருப்பொருள்.

பின்நாட்களில் சிறந்த தமிழ்ப் படங்களைத் தேடித் பார்த்த போது சந்தியா ராகம்,வீடு,அழியாத கோலங்கள்,வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், மூன்றாம் பிறை போன்ற அவரின் இயக்கத்தில் வந்த படைப்புகள் மாற்று சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது.ஆனால் பின்னாளில் வந்த அவரின் படைப்புகள் எனக்குள் எவ்வித அதிர்வையும் ஏற்ப்படுத்த வில்லை என்பது உண்மையே.அந்தக் குறையும் நிவர்த்தி செய்யப்பட்டது அவர் கை பிடித்து தொழில் கற்ப்பித்த பாலா,அமீர்,வெற்றிமாறன்,சசிகுமார்,சீனுராமசாமி போன்ற அவர்களின் சிஷியர்களின் மூலமாக.

பாலு மகேந்திரா அவர்களின் வாழ்கையைப் படித்த போது எனக்குள் ஏற்ப்பட்ட மிகப்பெரிய வியப்பு,இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமிர்தகழி எனும் சிற்றூரில் இருந்து புறப்பட்டு தமிழ் கலையின் தாயகமான இந்தியாவிலே ஒளிப்பதிவு மேதை என்ற பெருமையைப் பெறுவதென்றால் அவரின் திறமை எத்தனை அசாதாரணம் என்பதுவே.

எப்பொழுதெல்லாம் உயர்ந்த மரங்களுக்கூடே கீற்றாய்த் தெறிக்கும் சூரியனைப் பார்க்கின்றேனோ,அப்பொழுதெல்லாம் பாலு மகேந்திரா அவர்களே என் மனதில் தோன்றுவார்.

We miss you Legend….:-(