Thursday, May 6, 2010

நினைவு நாள்.........(கவிதை)


வாழ்க்கையிலே மறக்க நினைக்கும் நாள்
ஆனால் நினைவிலோ நீங்காத நாள்
தம்பி உயிர் நீர்த்த கோர நாள்


ஓராண்டு நினைவு நாளில் சவக்காலை நோக்கி நான்
இறந்த போது வந்த கண்ணீர் வரவில்லை
இளமை ஞாபகம் மின்னல் வெட்டியது
கடந்து சென்ற அவன் நண்பன்
ஆயுதம் இன்றி கோரமாய் தாக்கினான்
இவன் வாழ்வதற்கும் அவன் சாவதற்கும்
ஏது சம்பந்தம்
புரிய விளைகிறது என் மனசு
மயான பூமியில் கால் வைக்க
மீளாத்துயில் வாசகம் வரவேற்கிறது
கல்லறைகள் கடைசி தரிப்பிடம் என்கின்றன
தம்பியின் கல்லறை முன்னாள் அம்மா
கண்களாள் வெறித்து நோக்கிய வாறே
கண்கள் ஜீவன் அற்றுப்போய்ற்று போலும்
ஆனாலும் அவள் இதயத்தில் குருதி வடிவதை
என் இதயம் உணர்கிறது
கல்லறை மேற்புறத்தில் தம்பியின் நண்பன்
மல்லிகைப்பூக்கள் கொண்டு எழுதிய தம்பி பெயர்
என் மூளையிலே முள்ளால் தைக்கிறது
கொளுத்திய ஊதுபத்தி தம்பியின் வாசனையை
நினைவூட்டுகிறது
எங்கோ காற்றிலே கலந்து வந்த திருவாசக அடிகள்
சூழ்நிலைக்கு பொருத்தமாயே அமைகிறது
அம்மா மூட்டிய மெழுகுவர்த்தியை அணைக்க முயலும் காற்று
அவள் வாழ்க்கைப் போராட்டத்தை குறும் படமாக்கிறது

வாழும் போது போட்டியாளனாக நினைத்த தம்பி
எதிலும் முரண்டு நிண்ட நாட்கள்
எதிர் பேச்சு பேசிய பொழுதுகள்
கையோங்கிய தருணங்கள்
வாக்கு வாதப்பட்ட சமயங்கள்
அனைத்திலும் என்னையே குற்றவாளியாக்கியது
என் இதயம்
வாழும் போது வீரிட்ட வரட்டுக்கௌரவம்
வாழாவெட்டியாய் முடங்கியது
நான் அழுதால் அம்மா ஓவென்று அழுவாள்
உணர்வுகளைப் புதைத்துக் கொண்டே
அம்மாவை அழைக்கிறேன் தம்பியிடம் விடைபெறுவதற்கு
அவள் பிச்சையாய் கேட்கிறாள் ஒரு நிமிடம்
இந்த நடிகனின் நடிப்பு தோற்கிறது
நிலம் நோக்கி விழுகிறது உப்பு நீர்
அம்மா கரம் பற்றி விடை பெறுகிறேன்
ஆனால் இதயம் மிகையாய் துடிக்கிறது வெறுப்பில்

8 comments:

Chitra said...

வாழும் போது வீரிட்ட வரட்டுக்கௌரவம்
வாழாவெட்டியாய் முடங்கியது
நான் அழுதால் அம்மா ஓவென்று அழுவாள்
/////உணர்வுகளைப் புதைத்துக் கொண்டே
அம்மாவை அழைக்கிறேன் தம்பியிடம் விடைபெறுவதற்கு
அவள் பிச்சையாய் கேட்கிறாள் ஒரு நிமிடம்
இந்த நடிகனின் நடிப்பு தோற்கிறது
நிலம் நோக்கி விழுகிறது உப்பு நீர்
அம்மா கரம் பற்றி விடை பெறுகிறேன்
ஆனால் இதயம் மிகையாய் துடிக்கிறது வெறுப்பில்////


......மனம் கனக்க கனக்க, என் விழிகளில் நீர்.
I am speechless. May the Lord grant peace, strength and comfort to your family.

பட்டாபட்டி.. said...

மனசு கஸ்டமாயிருக்கு சார்..

சுந்தரா said...

வருத்தமாயிருக்கிறது...

இழப்பினைத் தாங்கும் வலிமையை இறைவன் கொடுக்கட்டும்.

malgudi said...

நிஜமாய் அனுபவித்த வலி.
வார்த்தைகளுக்கு நன்றி சித்ரா

malgudi said...

ஆதரவுக்கு நன்றி சகோதரர்களே

LK said...

என்ன சொல்றதுன்னு தெரியல. இழப்பில் இருந்து மீள்வது கடினம் .. அந்த இழப்பை தாங்கும் மனத்தை இறைவன் உங்களுக்கு தருவானாக ..

RIP

A.சிவசங்கர் said...

மச்சான் நானும் உன் சோகத்தில் உன் வலிகள் எனக்கும் தெரியும் .உன் தம்பியின் மீதான அன்பும் தெரியும் .என்ன பண்ணுறது எப்பிடி சொல்லுறது என்று புரிய வில்லை இதனுடாக சொல்லி விட கூடிய விஷயம் இல்லை .உன் சோகங்கள் விரைவில் மீளும்.மீண்டும் உன் அறை நண்பனாக ஒரு வாய்ப்பை கடவுள் தந்தால் (உன் பாசையில் அப்பிடி ஒருவர் இருந்தால் )அவருக்கு நன்றி .

malgudi said...

நன்றி சங்கர்.

Post a Comment