Sunday, May 23, 2010

இயற்கையை மீறிய பிறப்புகள்.....(நெகிழ்ந்த இதயம் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.)


1. இரண்டு முகம் கொண்ட குழந்தை : Diprosopus


லலி என்ற இந்தக்குழந்தைக்கு  2 ஜோடி கண்கள்  , 2 மூக்கு , 2 வாய் மற்றும் ஒரு ஜோடி காது.இந்த சின்ன பெண்ணின் பெற்றோர் இவளை இறைவனின் கொடை என்று கொண்டாடுகிறார்கள்.இவ்வாறு பிறப்பவர்களை Diprosopus or Craniofacial Duplicatiopn என்பர்.அதாவது இரட்டைப் பிறப்பு பூர்த்தி செய்யப்படாத பிறப்பு.லலி நான்கு கண்களை ஒரே நேரத்தில் திறப்பதோடு ,இரண்டு வாயாலும் உணவை அருந்துகிறாள்.


2. ஒரு கண் குழந்தை: Cyclopiaஇந்தக் குழந்தை பிறந்தது நைஜீரியாவில்.இந்தக் குறைபாடு  என்று Cyclopia அழைக்கப்படும்.இது நெற்றி ஒழுங்காகப் பிரிக்கப்பாடாததாலே இரண்டு கண்களுக்குப் பதிலாக ஒரு கண் உருவாகிறது.


3. இரண்டு தலைக்குழந்தை : Craniopagus parasiticus


இந்த  எகிப்திய குழந்தையின் பெயர் மனார் மாகத்.மாகதிற்கு மண்டையோடு ஒட்டியவாறு காணப்படுகின்றது.இவ்வாறாக இதுவரை என்பது குழந்தைகள் பிறந்ததாகப்பதிவாகியபோதும் மூன்று குழந்தைகளே நவீன வைத்தியம் மூலம் காப்பற்றப்பட்டுள்ளன.

4.வரிப்புலிக் குழந்தை  : Harlequin-type ichthyosis


இக்குழந்தை  பாகிஸ்தானில் மார்ச் 2010 பிறந்தது.இந்தக் குழந்தையின் உருவம் sci-fi ALIEN படத்தில் வரும் பாத்திரத்தின் அமைப்பை ஒத்து இருந்தது.இந்தக்குழந்தை உயிர் வாழ்வதற்கான சந்தர்ப்பம் 10 வீதமே உள்ளதாக வைத்தியர் தெருவித்துள்ளனர்.

5. வெளிப்புறத்தில் இதயம் கொண்ட குழந்தை : Ectopia Cordis
இதயத்தை உரிய இடத்தில் வைத்தால் இக்குழந்தை சாதாரண குழந்தையை ஒத்திருக்கும் என  வைத்தியர் தெருவித்துள் ளனர்.

6. தவளைக் குழந்தை : Anencephaly

 இக்குழந்தை பிறந்தது 2006 ல் சாரிக்கொட்இல் .இக்குழந்தைக்கு கழுத்து இல்லை.இக்குழந்தையின் முக அமைப்பு அச்சு அசலாக தவளையை ஒத்து இருந்தது.இவ்வாறான குழந்தைக்கு மூளை நரம்பு பாதிக்கப்பட்டு இருப்பதால் பிறந்து சில மணிகளிலே இறந்துவிடும்.

7. பல காலுள்ள குழந்தை :Polymelia


இந்தக் குழந்தையின் பெயர் லக்ஷ்மி.பிறந்தது இந்தியாவில்.
இக்குழந்தையால்  எழுந்து நிற்கவே முடியாது என்பது வருத்தமே.


8.  உலகிலே மிகச்சிறிய குழந்தை : 21 weeks and six days


ஆக்டோபர் 24, 2006 ல் பிறந்த அமிலா டைலர் ,21 கிழமை 6 நாட்களில் பிறந்துள்ளது.23 கிழமைக்குள் பிறந்த குழந்தைகள் உயிர் வாழ்ந்ததில்லை.ஆனால் 10 அவுன்ஸ் அமிலா சுவாசித்து ,அழுதது ஆச்சரியமே.
இக்குழந்தை தற்போதும் நலமாகவே உள்ளது.

9. உலகில் பெரிய குழந்தை :
ஆறு மாதத்திற்கு முன் ஈரானில் பிறந்த இக்குழந்தையின் தற்போதைய நிறை 20 கிலோ  ( 44பவுண்ட்ஸ் ).ஆனால் இக்குழந்தை பிறகும் போது சாதரணமாக 8 பவுண்ட்சில் இருந்ததாகவும் ஆனால் தொடந்து உணவு உண்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

9 comments:

Chitra said...

You should have given a warning...... மனதை கலக்கி விட்டது.....

malgudi said...

ஆலோசனைக்கு நன்றி சித்ரா.

தமிழ் மீரான் said...

நம்பவே முடியல. ரொம்ப பயங்கரமா இருக்கு. வித்தியாசமன பதிவு!

soundar said...

கடவுளே...

insight said...

அரிது அரிது மானிடறாய் பிறப்பது அரிது அதிலும் கூன் குருடு செவிடில்லாமல் பிறப்பது அரிதுன்னு ஒவ்வையார் சொன்னது சரிதாங்க இந்த படங்களை பார்க்கும் போது நான் நல்லதன இருக்கேன் இவர்கள் உயிர் வாழும்போது என்னகென்ன குறை என்று தன்னம்பிக்கை தோனுகிறது . நன்றி நண்பா .

இவர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

malgudi said...

கருத்திற்கு நன்றி insight,
எனது பதிவில் கண்டிப்பாக சேர்த்து இருக்க வேண்டிய வரிகள்.

eliza said...

thank you

eliza said...

thank you

malgudi said...

@elizai received your's comment after long time from this publish.any way thanks your words.

Post a Comment