Tuesday, September 27, 2011

ஐயோ தாங்க முடியலையே.........

எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை,பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக பெண்கள் மிஸ் பண்ணாதீர்கள்.

Tuesday, September 20, 2011

என்ன வாழ்க்கைடா இது....ஸ்ஸ்ஸ் இதைப் பார்த்திட்டு சொல்லுங்க

சீ என்ன வாழ்கைடா இது,இதை ஒரு நாளைக்கு ஒருதடவையாவது சொல்லாவிட்டால் எனக்கு தலை வெடித்துப் பறந்துவிடும்.
இந்த மெயிலைப் பார்த்த பிறகு,அப்படிச் சொல்வதற்கு ஏதோ ஒன்று தடுக்கின்றது.எனது மன நிலையில் இருந்தால்,நீங்களும் பாருங்கள்.


இதை விடவா,போராட்டம்

இது அல்லவா,போக்குவரத்துச் சிக்கல்
நமக்கு,என்னதான் நெட் இருந்தாலும் அலுப்பாய் இருக்குமேஇதுவும் ஒரு வேலைதான்(நம்ம வேலை எவ்வளவோ தேவலை)

சின்ன வயசிலேயே நான் ரொம்பக் கஷ்டப்பட்டிட்டன் என்று நினைத்தால்,

ஒரு நல்ல நண்பன் கிடைக்க மாட்டான் என்று ஏங்கினால்,(ஆனால் உண்மைக்கு இவன் ரொம்ப அதிஷ்ட சாலி)

நான் அவனுக்கு எவ்வளவு உதவி செய்திருப்பேன்,நன்றி கெட்ட பயல்!!!!!
இப்படித் திட்டித் தீர்க்க முன்...........................இதைவிடவா நாம் உதவி செய்து விட்டோம்

தனிமை வலிக்குதா??????????????????????
இந்த முதுமையில் தனிமை!!!!!!!!!!!!!!!!!!!!

ஆபீஸில என்னுடைய சப்பாத்துதான்,ஆகவும் மலிவானது என்று நினைத்தால்....


 உனக்குக்கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு.
Boss நோட்த பாயிண்ட்.(என்னைச் சொன்னேன்)

Thursday, September 15, 2011

காலனாய் வந்த காமம்


விடலைப்பருவத்தில் விடைதேடிய உணர்ச்சிகளுக்கு
விடையானாள்,வினையானால் –பலநாள் செவியேறிய விலைமாது
விதியெனும் பாம்பு தீண்டியே விட்டது
விரல்களின் கோலத்தில் வரும் வீம்பை

அந்த நாள் சுவர்க்கமென திளைத்திருக்க
உச்சிப்பொறியில் உள்ளுணர்வு அலறியது
வீடு திரும்பியவனை மொத்தமாய் விழுங்கியது-குற்ற உணர்ச்சி
கண் நோக்கும் பார்வை காலிலே குத்தி நின்றது

பெற்ற தாய் முன்னே பேச நா நாணி நிக்க
பிசைந்த சோறு பீங்கானை கட்டி நின்றது
கையேந்திய தண்ணீர்க் கிண்ணம்
தரைக்கே சமர்ப்பணமானது

கொஞ்ச நேரம் சிற்றின்பம் பெரிதென மயங்கி
கொஞ்ச இருந்த மனையாள் உறவை மறந்து
தூரமாய் விலக நினைக்கும் துயர இடம் நாடி
தூண்டில் மீனாய்த் துடித்துக்கொண்டிருந்தான்

இரவிலே தூக்கம் தூரமாய் ஓட
பகலிலே ஏக்கம் – அதற்க்குத் தூது செல்ல
பல நாள்ப் பொழுதுகள்
பதறியே ஓய்ந்தன

இறுதியில் நடந்தான்-நோய் தீர்க்கும் இடம் நோக்கி
அந்த இடம் செல்ல –ஆரத்தழுவியவள் அங்கு நிக்க
அஞ்சியே ஒதுங்கியவனை-அதட்டினான் சிற்றூளியன்
வைத்தியன் முன்னே –வார்த்தைகளைப் பொறுக்கி
வசனமாய்க் கோர்த்துக் குழைந்து நிற்க
காலை நக்கும் நாயைக் கொடூரமாய்ப் பார்ப்பதாய் இருந்தது
அவன் பார்வை

கை படாமல் கால் படாமல்
மூச்சிக் காற்றுக்கு விலகி நின்ற தாதி
உறிஞ்சிச் சென்றாள் இரத்தத்தை
கசக்கிய காகிதமாய் –கலங்கிய இதயத்துடன்
தேவாலய வாயிலில் குப்பையாய் வந்து நின்றான்
ஓயாமல் வாய் செபிக்க
ஓராயிரம் நாளாய்க் கடந்தான்-அந்த நாளை

காலைக்காய் காத்து இருந்தவனாய்
கடுகதியாய்க் கடந்து சென்றான்-வைத்தியசாலையை
கழுத்திலே தொங்கிய குருஸ் பார்த்து பலர் சீண்ட
அழுதுகொண்டே கழட்டினான் தன் அடையாளத்தை
தொங்கிய பதாதைகள் –காலம் கடந்து
கண்ணில் பட்டு புத்தியை செருப்பால் அடித்தது
கால் கடுக்க நின்றவனைக் கடந்து சென்ற வைத்தியன்
சாதாரணாமாய்ச் சொன்னான் –போசிடிவ் என்று

கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தன
கனவாய்க் கண்ட வாழ்க்கையெல்லாம்
தீர்க்கமாய்ப் புறப்பட்டான்-வாழ்வின் முடிவை நோக்கி

Sunday, September 11, 2011

மார்பகப்புற்று நோய் -தொடர் கதை-பாகம் 3(காமம் கடந்த காதல்)


தொடர்கதை எழுதுவது எத்தனை சிரமம் என்பதை மூன்று பாகம் வரைத்தொடர்ந்தததன் மூலம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.இனியும் காலம் தாழ்த்தினால் எனக்கே கதாபாத்திரங்கள் மறந்துவிடும்.
தயவு செய்து படிப்பவர்கள் பாகம் 1,பாகம் 2,பாகம் 3 என்று முறையாகப் படியுங்கள்.
பாகம் 3 கீழே...
காற்சட்டைப் பாக்கெட்டில் இருந்த போன் அதிர்ந்த அதிர்வில்,கடந்த கால இனிமையில் தன்னை மறந்திருந்தவன்,நிகழ் காலத்திற்கு வந்தான்.போனைக் காதில் வைக்க, அப்பா,அம்மா எதுவும் பேசாம,அப்படியே இருக்கிறாங்க.எனக்குப் பயமாய் இருக்குது,சீக்கிரம் வா அப்பா ...,என்றாள் துவா அழுகையுடன்.
காற்சடையில் ஒட்டிய மண்ணையும் தட்ட மறந்தவனாய் வண்டியை நோக்கி விரைந்தவன்,சந்தியிலே இருந்த ஆட்டோவையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.அவன் வாகனச் சத்தத்தைத் கேட்ட மகள் ஓவென்று அழுதவாறே ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.கட்டிலை நோக்கி ஓடியவன்,நாடியைப் பிடித்து ஆட்டியவாறே “காவி, காவி !!!என்று கத்திப்பார்தான்.ஊகும்...எந்தச் சலனமும் இல்லை.அவளை அப்படியே இரண்டு கரத்தால் தூக்கியவன்,ஆட்டோக்குள் கொண்டுபோய் வைத்தான்.மகளையும் அதற்குள் ஏற்றி விட்டு,ஓடிச் சென்று வீட்டைப் பூட்டி சாவியை பாக்கெடுக்குள் திணித்துக்கொண்டு,ஆட்டோவில் தாவி ஏறிக்கொண்டான்.