நான் முன்னைய பதிவொன்றில் நண்பர்கள் தயாரித்த “ரோபோ” என்ற குறும்படத்தை அறிமுகப்படுத்தியிருந்தேன்.இப்போது அவர்கள் “வலி” என்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.கல்லூரிச் சுமைகளுக்கும் மத்தியில் அவர்களது விடாமுயற்சியால் வெளிவந்த இப்படமானது பலரைச் சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை.
அலெக்ஸ் என்னும் நண்பன் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.டைரக்ட் பண்ணி எடிட்டிங் பண்ண கீர்த்தனன்,தனது பனியை மிக நேர்த்தியாக செய்துள்ளார்.என்ன,குறும் படத்தின் நேரத்தை நீடித்து படம் போல் பண்ணிவிட்டார்கள்.என்றாலும்,தொய்வில்லாமல் கதை நகர்கிறது.இதைப் பார்த்து விட்டு நீங்கள் கூறும் கருத்துக்கள் அவர்களை மேலும் செம்மைப்படுத்தும் என்று நம்புகின்றேன்.