Saturday, October 22, 2011

மனித உடல்ப் பாகங்களுக்கான தொழிற்சாலை(நெகிழ்ந்த மனம் படைத்தவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும்)

ரஷ்யாவில் சிறுநீரகங்கள், கண்விழிவெண்படலங்கள் மற்றும் ஏனைய மனித உடல்பாகங்ளை அகற்றி விற்பனை செய்யவென சட்டவிரோதமான ஒரு தொழிற்சாலை இருக்கின்றது.

என்ன கொடுமை சரவணா

Tuesday, September 27, 2011

ஐயோ தாங்க முடியலையே.........

எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை,பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக பெண்கள் மிஸ் பண்ணாதீர்கள்.

Tuesday, September 20, 2011

என்ன வாழ்க்கைடா இது....ஸ்ஸ்ஸ் இதைப் பார்த்திட்டு சொல்லுங்க

சீ என்ன வாழ்கைடா இது,இதை ஒரு நாளைக்கு ஒருதடவையாவது சொல்லாவிட்டால் எனக்கு தலை வெடித்துப் பறந்துவிடும்.
இந்த மெயிலைப் பார்த்த பிறகு,அப்படிச் சொல்வதற்கு ஏதோ ஒன்று தடுக்கின்றது.எனது மன நிலையில் இருந்தால்,நீங்களும் பாருங்கள்.


இதை விடவா,போராட்டம்

இது அல்லவா,போக்குவரத்துச் சிக்கல்
நமக்கு,என்னதான் நெட் இருந்தாலும் அலுப்பாய் இருக்குமே



இதுவும் ஒரு வேலைதான்(நம்ம வேலை எவ்வளவோ தேவலை)

சின்ன வயசிலேயே நான் ரொம்பக் கஷ்டப்பட்டிட்டன் என்று நினைத்தால்,

ஒரு நல்ல நண்பன் கிடைக்க மாட்டான் என்று ஏங்கினால்,(ஆனால் உண்மைக்கு இவன் ரொம்ப அதிஷ்ட சாலி)

நான் அவனுக்கு எவ்வளவு உதவி செய்திருப்பேன்,நன்றி கெட்ட பயல்!!!!!
இப்படித் திட்டித் தீர்க்க முன்...........................இதைவிடவா நாம் உதவி செய்து விட்டோம்

தனிமை வலிக்குதா??????????????????????
இந்த முதுமையில் தனிமை!!!!!!!!!!!!!!!!!!!!

ஆபீஸில என்னுடைய சப்பாத்துதான்,ஆகவும் மலிவானது என்று நினைத்தால்....


 உனக்குக்கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு.
Boss நோட்த பாயிண்ட்.(என்னைச் சொன்னேன்)

Thursday, September 15, 2011

காலனாய் வந்த காமம்


விடலைப்பருவத்தில் விடைதேடிய உணர்ச்சிகளுக்கு
விடையானாள்,வினையானால் –பலநாள் செவியேறிய விலைமாது
விதியெனும் பாம்பு தீண்டியே விட்டது
விரல்களின் கோலத்தில் வரும் வீம்பை

அந்த நாள் சுவர்க்கமென திளைத்திருக்க
உச்சிப்பொறியில் உள்ளுணர்வு அலறியது
வீடு திரும்பியவனை மொத்தமாய் விழுங்கியது-குற்ற உணர்ச்சி
கண் நோக்கும் பார்வை காலிலே குத்தி நின்றது

பெற்ற தாய் முன்னே பேச நா நாணி நிக்க
பிசைந்த சோறு பீங்கானை கட்டி நின்றது
கையேந்திய தண்ணீர்க் கிண்ணம்
தரைக்கே சமர்ப்பணமானது

கொஞ்ச நேரம் சிற்றின்பம் பெரிதென மயங்கி
கொஞ்ச இருந்த மனையாள் உறவை மறந்து
தூரமாய் விலக நினைக்கும் துயர இடம் நாடி
தூண்டில் மீனாய்த் துடித்துக்கொண்டிருந்தான்

இரவிலே தூக்கம் தூரமாய் ஓட
பகலிலே ஏக்கம் – அதற்க்குத் தூது செல்ல
பல நாள்ப் பொழுதுகள்
பதறியே ஓய்ந்தன

இறுதியில் நடந்தான்-நோய் தீர்க்கும் இடம் நோக்கி
அந்த இடம் செல்ல –ஆரத்தழுவியவள் அங்கு நிக்க
அஞ்சியே ஒதுங்கியவனை-அதட்டினான் சிற்றூளியன்
வைத்தியன் முன்னே –வார்த்தைகளைப் பொறுக்கி
வசனமாய்க் கோர்த்துக் குழைந்து நிற்க
காலை நக்கும் நாயைக் கொடூரமாய்ப் பார்ப்பதாய் இருந்தது
அவன் பார்வை

கை படாமல் கால் படாமல்
மூச்சிக் காற்றுக்கு விலகி நின்ற தாதி
உறிஞ்சிச் சென்றாள் இரத்தத்தை
கசக்கிய காகிதமாய் –கலங்கிய இதயத்துடன்
தேவாலய வாயிலில் குப்பையாய் வந்து நின்றான்
ஓயாமல் வாய் செபிக்க
ஓராயிரம் நாளாய்க் கடந்தான்-அந்த நாளை

காலைக்காய் காத்து இருந்தவனாய்
கடுகதியாய்க் கடந்து சென்றான்-வைத்தியசாலையை
கழுத்திலே தொங்கிய குருஸ் பார்த்து பலர் சீண்ட
அழுதுகொண்டே கழட்டினான் தன் அடையாளத்தை
தொங்கிய பதாதைகள் –காலம் கடந்து
கண்ணில் பட்டு புத்தியை செருப்பால் அடித்தது
கால் கடுக்க நின்றவனைக் கடந்து சென்ற வைத்தியன்
சாதாரணாமாய்ச் சொன்னான் –போசிடிவ் என்று

கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தன
கனவாய்க் கண்ட வாழ்க்கையெல்லாம்
தீர்க்கமாய்ப் புறப்பட்டான்-வாழ்வின் முடிவை நோக்கி

Sunday, September 11, 2011

மார்பகப்புற்று நோய் -தொடர் கதை-பாகம் 3(காமம் கடந்த காதல்)


தொடர்கதை எழுதுவது எத்தனை சிரமம் என்பதை மூன்று பாகம் வரைத்தொடர்ந்தததன் மூலம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.இனியும் காலம் தாழ்த்தினால் எனக்கே கதாபாத்திரங்கள் மறந்துவிடும்.
தயவு செய்து படிப்பவர்கள் பாகம் 1,பாகம் 2,பாகம் 3 என்று முறையாகப் படியுங்கள்.
பாகம் 3 கீழே...
காற்சட்டைப் பாக்கெட்டில் இருந்த போன் அதிர்ந்த அதிர்வில்,கடந்த கால இனிமையில் தன்னை மறந்திருந்தவன்,நிகழ் காலத்திற்கு வந்தான்.போனைக் காதில் வைக்க, அப்பா,அம்மா எதுவும் பேசாம,அப்படியே இருக்கிறாங்க.எனக்குப் பயமாய் இருக்குது,சீக்கிரம் வா அப்பா ...,என்றாள் துவா அழுகையுடன்.
காற்சடையில் ஒட்டிய மண்ணையும் தட்ட மறந்தவனாய் வண்டியை நோக்கி விரைந்தவன்,சந்தியிலே இருந்த ஆட்டோவையும் அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.அவன் வாகனச் சத்தத்தைத் கேட்ட மகள் ஓவென்று அழுதவாறே ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.கட்டிலை நோக்கி ஓடியவன்,நாடியைப் பிடித்து ஆட்டியவாறே “காவி, காவி !!!என்று கத்திப்பார்தான்.ஊகும்...எந்தச் சலனமும் இல்லை.அவளை அப்படியே இரண்டு கரத்தால் தூக்கியவன்,ஆட்டோக்குள் கொண்டுபோய் வைத்தான்.மகளையும் அதற்குள் ஏற்றி விட்டு,ஓடிச் சென்று வீட்டைப் பூட்டி சாவியை பாக்கெடுக்குள் திணித்துக்கொண்டு,ஆட்டோவில் தாவி ஏறிக்கொண்டான்.

Wednesday, August 31, 2011

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.



மன்னிப்பிலும் வலிய தண்டனை வேறேதும் இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து.ஒருவன் தன் குற்றவாளியை முழுமனதாய் மன்னிக்கும் போதே அக்குற்றவாளி ஆனவனுக்கு தன் குற்றத்தை உணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.மாற்றாக அவனைத் தண்டிக்கும் போது,குற்றவாளி முதலில் குற்றம் செய்கின்றான்,தண்டிப்பவன் இரண்டாவதாய்க் குற்றம் செய்கின்றான்.மொத்தத்தில் இருவருமே நீயாயவாதிகள் இல்லை.

தங்களை நீதிமான்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு,மற்றவர்களைத் தண்டிக்க முண்டியடித்துக் கொண்டிருப்பவர்களின் அக்கிரமங்கள்,இன்னும் வெளியுலகத்திற்குத் தெரியவில்லை.அவ்வளவுதான்.இவ்வுலகத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளுக்குள் இருப்பவர்களை விடக் கொடூரமான குற்றவாளிகள் அதிகாரம் என்ற போர்வையையும்,பண பலம் என்ற முகமூடியையும் அணிந்து கொண்டு வெளியில் இருந்து நியாயம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அது தான் இந்த உலகத்தில் நீதி.

Thursday, August 25, 2011

மார்பகப்புற்று நோய் .............தொடர் கதை-பாகம் 2

ஏதோ ஒரு வேகத்தில் தொடர் கதை எழுதத்தீர்மானித்தேன்.கண்டிப்பாய் இது பிரபல பதிவாகி அதிக வாசகரைச் சென்றடையும் என்ற நம்பிக்கையோடு.ஆனால் எனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை தானே.இத்தோடு நிறுத்துவோம் என்று நினைத்தாலும் மனம் தனிமையில் கதையை நீட்டிக்கொண்டு செல்கிறது.அதன் விளைவே அடுத்த பாகம்.




Saturday, July 16, 2011

சீனாக்காரன் நட்பு,ரொம்பவே சுவாரஸ்யம்

கடந்த மாதம் இரண்டு சீன மருத்துவப் பொறியலாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.ஐயோ போதும்,போதும் என்றாகி விட்டது.காரணம் அவர்களுக்கு ஆங்கிலத்தை இலக்கணத்தோடு கதைத்தால் புரியாது.அது கூடப் பரவாயில்லை,நான் தான் தவறுதாலாக் கதைத்ததாகக் கொண்டு இரண்டு கண்களையும் 90% மூடி(பூஞ்சிக்கண்ணன்கள்),பற்களை இடுக்கிக்கொண்டு உடம்பு குலுங்கச் சிரிப்பாங்களே,ஒரு சிரிப்பு;அந்தக் கொடுமையை எங்கே போய்ச்சொல்லுவது..

அவர்களோடு சாப்பிடுவதே ஒரு சுவாரஸ்யம்,ஒரு  submarine ஐ அலேக்காக முழுங்கிட்டு,வாயைக் கோணலாகப் பிடித்துக் கொண்டு,ஏதோ அதன் சுவை பிடிக்காதது போல பாவனை காட்டிக் கொண்டிருப்பான். அப்பொழுதுதான் நான் இரண்டு கடி கடித்திருப்பேன்.நான் சாப்பிட்டு முடிக்க விடிந்திடும் என்று நினைத்தானோ தெரியல்ல,டாய்லெட் போய் விட்டு வாறன் எண்டு ஒருவன்  போனான்.நான் நாலாவது கடி கடிக்க ஆரம்பிக்க வந்திட்டான்.நான் ஒன்றுக்கா போனாய் என்று கேட்க,தலையை ஆட்டிவிட்டு இரண்டுக்கு என்றான் பவ்வியமாக.உண்மையைச் சொல்லப் போனால் அந்த நேரத்திற்குள் என்னால் முழுமையாக ஒன்றுக்கே போய் இருக்க முடியாது.
உலக மகா வேகமையா.... 

Saturday, July 2, 2011

மூஞ்சில கை வைத்தால் யாருக்குத்தான் கோவம் வராது.

இப்பொழுதெல்லாம் என் வாழ்கை வண்டி ரொம்ப வேகமாகப் போயிட்டு இருக்கு.பிடிப்பு,வெறுப்பு என்று எதுவுமே பார்ப்பது இல்லை.நான் திருத்தும் இயந்திரங்கள் போல இயங்க என் மனதும் பழக்கப் பட்டுவிட்டது.ஆனால் அதுவும் ஒரு வகையில் நல்லது தான்,ஏன் என்றால் எந்த சோகமும் பாதிக்காது அல்லவா?சரி மேட்டர்இக்குப் போவோம்.

இந்த ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் சதா அதைப் பற்றிதான் நினைப்பு.என் உணர்வுகளின் வடிகாலாகவே அதைக் கருதினேன்.பலர் பாரட்டும் படி எழுதிக்கிழிக்கா விட்டாலும் ஏதோ என் மனதில் என் எழுத்து ஓர் ஆத்ம திருப்தியை ஏற்ப்படுத்தித்தான் இருந்தது.
இப்பொழுது இருக்கும் வேலைப் பளுவில் தினமும் மெயில் செக் பண்ணுவதற்கே நேரம் கிடைப்பது அபூர்வமாகப் போய்விட்டது.இந்த நிலையில் ப்ளாக் எழுதுவதற்காகவா நேரம் கிடைக்கப் போகிறது?

ஆனாலும் என் வலைப்பூவில் 100 followers ஐப் பார்ப்பதற்கு ஒரு அங்கலாய்ப்பு இருந்து கொண்டிருந்தது.அதை இந்தப்பதிவு மூலம் அடைந்து விடவேண்டும் என்பதுதான் என் ஆசை.பார்ப்போம் யார் அந்தப் புண்ணியவான் என்று????


என்னடா ஏதோ தலைப்பை வைத்துவிட்டு அவன் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தால் இந்த லிங்கை கிளிக்கிப் பார்க்கவும்.

Tuesday, June 21, 2011

நீங்கள் நினைப்பதைச் சொல்லிவிடும் மாயம்

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒரு தொடர் கதை எழுதலாம் என்று களத்தில் குதித்தேன்.ஆனால் என் நினைப்பை மீறி அது ஓசையற்று அடங்கிவிட்டது.அதைத்தொடர்ந்து எழுதி முடிக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கின்ற போதும்,நாம் எழுதுவதில் ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்று மனம் முரண்டுபிடிக்கிறது.
என் சோகம்,என்னோடே போகட்டும்.இனி மேட்டர்க்கும் போவோம்.

நான் மிகவும் ரசித்த இரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


1.நாம் ஒரு இரண்டு இலக்க எண்ணை மனதில் நினைக்க வேண்டும்.( eg : 43)
2.அந்த இரண்டு இலக்கங்களையும் ஒன்றாகக் கூட்டவேண்டும்.(4+3=7)
3.பின் நாம் நினைத்த எண்ணில் இருந்து கூட்டிய எண்ணைக் கழிக்க வேண்டும்.(43-7=36)
அந்த விடையின் குறியீடு திரையில் காட்டப்படும்.
இந்த லிங்கைக் கிளிக் பண்ணிப் பார்க்கவும்.
இந்த சூட்சுமம் தான் என்ன ???கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.....



Saturday, June 11, 2011

மார்பகப்புற்று நோய் .............தொடர் கதை


காலைச் சூரியனின் ஒளி கண்ணாடி ஜன்னலுக்கூடாக ஊடுருவி அறை முழுவதும் ஒளியைப் பரப்பிக்கொண்டு இருந்தது.ஒளி முகத்தில் படரத்தொடங்க அரைக்கண் முழித்த தனு மணியைப் பார்த்தான்.மணி தன் போக்கிலே 6 ஐக் கடந்து சென்றுகொண்டிருந்தது.பதறியடித்துக்கொண்டு எழுந்தவன்,மறுபக்கம் திரும்ப மனைவி காவ்யாவும் மகள் துவாவும் எந்தவித சலனமும் இன்றி உறங்கிக்கொண்டிருந்தனர்.
சமையல் அறையை நோக்கி விரைந்தவன்,காஸ் அடுப்பிலே சூட்டைக் குறைத்து தண்ணியை வைத்துவிட்டு டாய்லெட் சென்றவன் வாயில் ப்ரஷ்யுடன் திரும்ப தண்ணியோ கொதித்து வழிந்துகொண்டிருந்தது.மூன்று கோப்பை காபியைப் போட்டுக்கொண்டு படுக்கையறை செல்ல காவ்யாவும்,துவாவும் இன்னும் எழுந்தபாடில்லை.

Saturday, June 4, 2011

யார் ஊனமுள்ளவன்?நீயா?அவனா?


நமது வாழ்கை என்ற வண்டி எப்பவுமே சீராகப் போகாது.அது வண்டியில் உள்ள தவறோ,இல்ல பாதையில் உள்ள தவறோ தெரியவில்லை.சீரான பாதையில் பயணத்தை அனுபவித்துச் செல்லுதுதல் ஒரு சந்தோஷமான நிகழ்வு.அதே வேளை ஒரு கரடு முரடான பாதையில் பல அசௌகரியத்துக்கு மத்தியில் நிர்ப்பந்தத்தில் பயணத்தைத் தொடர்தல் ஒரு துன்பமான நிகழ்வு.ஆனால் வாழ்கையில் நாம் விரும்பியோ,வெறுத்தோ இரண்டையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.ஆனால் ஒரு சந்தோசத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு,ஒரு துக்கத்தை எதிர்கொள்ளும் போது இருப்பதில்லை.
ஒரு சிறு துக்கத்தில் இருந்து மீண்டுவருவதற்குள் நம் மனம் படும் பதைபதைப்பு சொல்லிமாழாது.ஆனால் சில ஊனமுள்ள மனிதர்கள் அத்தனை சோதனைக்கும் மத்தியில் தன்னம்பிக்கையுடன்,வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் தைரியத்தையும் பார்க்கும்போது,நமது மன ஊனம் நமக்கு புலப்படுகிறது.அவனால் முடியும் போது ஏன் உன்னால் முடியாது?என்ற கேள்வி நமது மனதில் எழுகிறது.

Monday, May 9, 2011

படித்ததில் பிடித்தது




இப்பொழுதெல்லாம் வலைப்பூ பார்ப்பதற்கே நேரம் இல்லை.அப்படி இருக்கும் போது எழுதுவதற்கா நேரம் கிடைக்கப்போகிறது?காரணம் புதிதாக இணைந்த வேலையில் உளுக்கு எடுக்கின்றார்கள்.அதனால் எண்ணத்தில் உருவான பல பட்டாம் பூச்சிகளை,பறக்க விட்டு அழகுபார்க்க முடியாமல் இருக்கின்றது.


ஆனாலும் மனத்தைக் கவர்ந்த விடயத்தை பகிர்ந்து கொள்ளாவிட்டால்,வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லாத விக்ரமாதித்தன் கதைதான் எனக்கும்.

நான் இந்தக் குறுங்கதையை முகப்புப் புத்தகத்தில் படித்தேன்.படித்து நீண்ட நேரத்தின் பின்பும் அதன் தாக்கம் மனதை விட்டுச் செல்ல முரண்டுகொண்டு நின்றது.இது நிஜமோ,இல்லையோ தெரியாது.ஆனால் அதன் படிப்பினை பெறுமதியானது.


இது கொஞ்சம் டச்சிங்... ஒருத்தர் லீவு நாள்ள , புதுக் காரை துணி , தண்ணி வைச்சு கிளீன் பண்ணிக்கிட்டு இருக்காரு.. " பாத்து, மெள்ள --- காருக்கு வலிக்கப் போகுது " ,அந்த அளவுக்கு மென்மையாகத் துடைத்தார்.
அவரோட குழந்தை ... சின்ன பையன் ....செம க்யூட்.. 4 வயசுன்னு வைச்சுக்கோங்களேன்.. கையிலே அவன் எதோ ஆணி வச்சு இருப்பான்போலே .. காரு புதுசு இல்லே.. சின்னப் புள்ளைக்கு என்ன தெரியும்..? அவன் ஆணியை வைச்சு கார்லே எதோ கிறுக்கிட்டு இருந்து இருக்கான் .. திடீர்னு பார்த்தாரே மனுஷன்.. கையிலே கிடைச்சதை எடுத்து , ஓங்கி ஒரே போடு.. கையிலே பட்டு, ஒரு விரலு துண்டாப் போச்சு.. ...ரத்தம் .. தர தர னு ஊத்துது... பையனுக்கு ஒன்னும் புரியலை.. நடுங்கிறான்... ஆ... ஊ... னு அலறுறான்.. நம்ம ஆளு, அடிச்சுப் புடிச்சு ..ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறாரு.. டாக்டரு , மருந்து எல்லாம் போட்டு, விரலை ஒட்ட வைச்சு ஸ்டிச் பண்ணி... பையனை குணப்படுத்துறாங்க.. ... ஒரு நாள் ஆஸ்பத்திரிலே ரெஸ்ட் எடுக்கட்டும்.... நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் னு சொல்றாங்க... பையன், "அப்பா --- நம்ம வீட்டுக்குப் போகலாம்பா" னு சொல்றான்... நம்ம ஆளு பாவம்... அந்த பையனை விட.. அவருக்கு தான் கண்ணீர் அதிகம் வருது... (பாசம் பாஸூ.. ) " வலிக்குதா கண்ணு... ?.. டாடி .. சாரி டா .... நீ கொஞ்ச நேரம் தூங்கு.. டாடி போய்.. உனக்கு மருந்து வாங்கிட்டு வந்துடுறேன்.. ஈவனிங் நாம வீட்டுக்கு போவோம்.. என்ன? " பையன், பெயின் கில்லெர் லே , அப்படியே அசந்து தூங்குறான்.. நம்ம ஆளு, சோகமா .. நொந்து நூலாகி , வெளியே வர்றார்... ச்சே,.. என்ன மடத்தனம் பண்ணிட்டேன்.. ஆத்திரம் என்னோட கண்ணை எப்படி மறைச்சுடுச்சு.. நலல வேளை ... இதோட போச்சு.. . பிஞ்சு குழந்தை .. என்ன நெனைச்சு இருப்பான்.. என்னைப் பத்தி.. . எங்கேயாவது எசகு , பிசகா .. முகத்துலே, கண்ணுலே பட்டு இருந்தா... ? ச்சே.. நான்லாம் மனுஷனே இல்லை.. நடந்துக் கிட்டே.. கார் பார்க் பண்ண இடத்துக்கு வர்றார்... அப்பதான்.. கார்லே அவர் பையன் கிறுக்கினதை பார்க்கிறார்... என்ன தெரியுமா எழுதி (கிறுக்கி ) இருக்கு? Daddy I Love You எப்படி இருக்கும் அவருக்கு?


காதலுக்கு மட்டும் இல்லே.. பாசத்துக்கும் , கோபத்துக்கும் கூட கண் இல்லை.. கோபம் வரும்போது.. நம்மோட உணர்ச்சிகளை கட்டுப் படுத்துறதும் முக்கியம்.. அப்படி பண்ணிட்டா .. நம்மை மிஞ்ச யாருமே இல்லை... நீங்க ரொம்ப நேசிக்கிறவங்க கிட்டே தான் கோபம் ரொம்ப வரும்.. கோபத்தை குறைங்க... அதுக்கு பிறகு வாழ்க்கையே வசந்தமாகும்.. !! வாழ்த்துக்கள் !!



ரொம்ப பீலிங்கா இருந்தால் இதையும் பாருங்க.


Saturday, April 9, 2011

கண் தானம்

வாழும் போதுதான் சுயநலவாதியாய் வாழ்கின்றோம்,சாகும் போதும் அப்படித்தான் சாகவேண்டுமா?நாம் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணை மற்றவருக்கு கொடுத்து விட்டு நம்மை குருடர்களாக இருக்கும் படி யாரும் கூறவில்லை.நாம் இறக்கும் போது எமது கண்ணை  ஒரு பார்வை அற்றவருக்குக்  கொடுத்து அந்த ஆத்துமாவும்,இந்தப் பூமியைப் பார்க்க வழி செய்யும் படியே கேட்கின்றார்கள்.இதனால் நமக்கு  இதனால் எந்த நட்டமும் வந்துவிடப்போவதில்லை.ஆனால் அந்தப் பார்வையற்றவருக்கு..........................





உணருங்கள் .....................உதவுங்கள்................................

Saturday, March 19, 2011

விஜயின் சூப்பர் ஜோடி


எவ்வளவுதான் உருகி உருகி கவிதை எழுதினாலும்(அப்படி என்றால் நீ எழுதினது கவிதையா?,ஸ்ஸ்ஸ்....அப்படி எல்லாம் கேட்கப்படாது.),மண்டையை நோண்டி கதை எழுதினாலும்(கதை தேறிட்டோ ,இல்லையோ ;நிறைய முடி உதிர்ந்திச்சு!) ஒரு குறுகிய வட்டம் வந்து பார்த்துவிட்டுச் செல்லும்.ஆனா சினிமா ஸ்டார்கள் பற்றி ஏதாவது கிசு கிசுத்தால் போதும் பார்வையாளர்கள் எண்ணிக்கை எகிறிக்குதிக்கும்.அதனால இடைக்கிடையே நானும் அவர்களின் பெயர்களை என் ப்ளாக்கின் பிரபலத்திற்காக உபயோகின்றேன்.
என்ன பப்ளிக்ல உண்மைய ஒத்துக்கிட்டான்,என்று பார்க்கின்றீர்களா?எல்லாம் ஒரு காரணமாகத்தான்.என் நண்பன் ஒருவன் ஒரு மிகுந்த எதிர்பார்ப்போடு ஒரு கதையை எழுதிப் பதிவிட்டான்.பின் அதை அனைத்து திரட்டியிலும் இணைத்தான்.
அப்புறம்,மொத்தம் 20 பேர் பார்த்தாங்கையா!(நண்பா,ஊரைக்கூட்டி நாறடிக்கான் நாதாரி என்று நினைக்காத.உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கட்டும் என்று தான் இதெல்லாம்.எப்பூடி..............;-))

பதிவில் எப்படி வாசகர்களை சுண்டி இழுப்பது என்பதை அவனுக்கு ப்ராக்டிகலாக புரியவைக்கதான் இந்தப் பதிவு.என் ரசிக மகா ஜனங்களே (அப்படி யாராவது இருக்கிறீங்களா?)என் தலையில் துண்டைப் போடவைத்துவிடாதீர்கள்.

அப்ப தலைப்பு,ஆமாகொஞ்சம் கீழ பாரு கண்ணா......
ஹா ஹா ஹா.....................
என்னாலே தாங்க முடியல்ல ,விஜய் ரசிகர்கள் எப்படித்தான் தாங்கப் போகிறார்கள் தெரியவில்லையே..............................
.
..
...
....
இப்ப உலகக்கோப்பை கிரிக்கெட்,ரொம்ப சூடா போய்ட்டு இருக்கில்ல.அப்ப இதையும் பார்த்திடுங்க மக்கா
சூப்பரா இருக்குதில்ல?

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.:-)

Wednesday, March 16, 2011

அத்தி பூத்தாப்போல





அலைச்சலுடன் புகைவண்டி ஜன்னல் இருக்கையில்-நான்

என்னை மோதிச் சென்ற காற்று – கவிதை சொன்னது

கடந்து சென்ற கட்டடங்கள்-காலத்தை மீட்டன

குருதியை உறிஞ்சிய கொசுக்கள்-என்னில் பசி போக்கின

இதயம் வராத காதலிக்காய் வசை பாடியது.


தேடிக்களைத்த இதயம் தனிமையாய் துடித்தது

தொலைந்த பார்வை-ஒண்டியாய் நிலாவைக் கண்டது

காதலர்கள் ரசிக்கும் நிலாவுக்கு காதலி இல்லை

அது ஏதோ எனக்கு ஆறுதல் சொன்னது.

மீசை அரும்பும் போது இருந்த தேடல் இன்றில்லை

காலத்தின் கோலத்தின் காதல் எண்ணமும் கலைந்து விட்டது

கண்ணீர் முட்டுகையில் தோள் சாயத்துடித்த தலையும்

உன் கண்ணில் முகம் பார்க்கத் துணிந்த கண்ணும்

செல்லத்தில் நுள்ளத்துடித்த விரல்களும்

பலத்தைத் காட்ட முனைந்த புஜமும்

உன் நெற்றியை முத்தமிட எண்ணம் கொண்ட உதடும்

உன் கரம் மூட நினைத்த என் கரமும்

கிடையாத காதலிக்காய்-கிடையாய் கிடக்கின்றன


தொம் என்று அமர்ந்த அதிர்வில் நான் குலுங்க

என் மீது விழுந்த துப்பட்டாவை நோகாமல் தூக்கின அவள் விரல்கள்

கண்கள் நம்ப மறுத்தன-அவை விரல்கள் என்று

பொன்னிற விரல்களிலே-பூக்களாய் பூத்திருந்தன சோளம் முடிகள்

கரம் பார்த்த கண்கள்-முகம் பார்க்கத் துடித்தது

தடுக்க நினைத்த மனதை தாண்டிக் குதித்து என் பார்வை.

நான் அவள் பக்கம் திரும்ப-அவள் மறுபக்கம் திரும்ப

சூரிய வதனம் தேடிய எனக்கு அஸ்தமனப் பேறே கிட்டியது

குமுறவில்லை மனசு-செழித்த சோலையாய்க் கூந்தலைப் பார்த்தால்

கணங்கள் ரணமாய்க் கடக்க........


என் ஒவ்வாத(-)முனைகள் ஈர்த்தன

அவள் ஒத்த(+)முனைக்காந்தக்கண்களை


தேவதை ...அவள் ஒரு தேவதை...

துடிக்க மறந்தது என் இதயம்

அவள் நாசியில் இருந்து மீண்ட அவள் சுவாசம்

என் இதய அறையை நிரப்ப

புதிதாய்த்துடித்தது “லவ் டப் என்று.

Thursday, March 3, 2011

நடிகர் விஜயின் facebook profile

விஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.இல்ல இல்ல புளிப்பான செய்தி.
இதைப் பார்த்து யாராவது கோவப்பட்டாலோ,இல்லை கொலைவெறி கொண்டாலோ அதற்க்கு கம்பனி பொறுப்பல்ல.காரணம்,பார்த்தேன்....ரசித்தேன்....பகிர்ந்தேன்.


படம் தெளிவின்மையாக இருந்தால் படத்தைக் கிளிக் பண்ணிப்பார்க்கவும்.

Tuesday, February 22, 2011

வலி – குறும்படம்

நான் முன்னைய பதிவொன்றில் நண்பர்கள் தயாரித்த “ரோபோஎன்ற குறும்படத்தை அறிமுகப்படுத்தியிருந்தேன்.இப்போது அவர்கள் “வலிஎன்ற குறும்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.கல்லூரிச் சுமைகளுக்கும் மத்தியில் அவர்களது விடாமுயற்சியால் வெளிவந்த இப்படமானது பலரைச் சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை.

அலெக்ஸ் என்னும் நண்பன் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.டைரக்ட் பண்ணி எடிட்டிங் பண்ண கீர்த்தனன்,தனது பனியை மிக நேர்த்தியாக செய்துள்ளார்.என்ன,குறும் படத்தின் நேரத்தை நீடித்து படம் போல் பண்ணிவிட்டார்கள்.என்றாலும்,தொய்வில்லாமல் கதை நகர்கிறது.இதைப் பார்த்து விட்டு நீங்கள் கூறும் கருத்துக்கள் அவர்களை மேலும் செம்மைப்படுத்தும் என்று நம்புகின்றேன்.






Monday, February 14, 2011

தன்னம்பிக்கை ஊட்டும் படங்கள்

சில வேளைகளில் சிறிய தோல்விகளும்,அவமானங்களும் மனதை அதிகமாகப் பாதித்துவிடும்.அந்த நேரத்தில் நோயும் வந்து சேர்ந்து கொண்டால் "என்னடா வாழ்கை !"என்ற மனநிலைதான் ஏற்ப்படும்.நோயின்  தாக்கமும் மனதின் வலியும் பாடாய்ப்படுத்திவிடும்.கடந்த சில நாட்களாக இந்த மனநிலையில் இருந்து மீளுவதற்காக போராடிக்கொண்டிருந்தேன்.எதிலும் ஈடுபாடு  இல்லாமல் இருந்த மனம் தம்பி மெயில் பண்ண படங்களைப் பார்த்ததில் இருந்து திடீர் எனப் புத்துணர்ச்சி பெற்றுவிட்டது.
பறவைக்கு  சிறகு போலத்தான் ,மனிதனுக்கு தன்னம்பிக்கையும்.
கீழே உள்ள படங்கள் அதற்கு நல்ல உதாரணம்.









காதலர் தினத்தைக் கொண்டாடும் காதலர்களுக்கு ............

Wednesday, February 9, 2011

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..

இந்த தகவலை எனக்கு அறியத்தந்த நண்பன் திருவிற்கு நன்றிகள்.



மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறது எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.)முதலில் இந்த அட்டவணையை அவதானிக்க...




தொகுதி 1


A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98


மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக்குறிக்க.கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )


பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

 
பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...


A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

 நானும்  சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்.

Friday, January 21, 2011

பார்த்தே தீரவேண்டிய படம்


ஒரு படம் சிறப்பாக இருப்பதற்கு கண்டிப்பாக இயக்குனர் மிக முக்கியம்.(இயக்குனர்,உதவி இயக்குனர் பட்டாளம்,கதை விவாதக் குழு இருந்தும் கதையே இல்லாமல் படம் வருவது வேறுகதை)ஆனால் இங்கே இயக்குனரே இல்லாமல் எவ்வளவு சிறப்பாக இந்தப் படம் வந்துள்ளது என்றால் ஆச்சரியமோ ஆச்சரியம்.

படத்தைப் பற்றி எதுவுமே சொல்ல விரும்பவில்லை.காரணம் விமர்சனம் என்ற போர்வைக்குள் ஒன்று முழுக்கதையைச் சொல்வது,இல்லாவிட்டால் இல்லாத ஒன்றைச் சொல்வது படத்தின் மேலுள்ள ரசனையைக் கெடுத்துவிடும்.அடுத்த காட்சியில் என்ன நடக்கும் என்று தெரிந்துவிட்டால்,படத்தை தொடர்ந்து பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு எப்படிஏற்ப்படும்?

இப்படித்தான் ஒருத்தருடைய "மைனா" பட விமர்சனம் படித்துவிட்டு படத்தைப் பார்க்க,முடிவு தெரிந்த காரணத்தால் சப் என்றாகி விட்டது,அந்த அருமையான படம்.(அந்த விமர்சகனை பாசக்கார பய புள்ள என்று நினைத்தேன்,உண்மையில படுபாவி பய புள்ள.)

இனியும் Build-up பண்ணால் பூமி தாங்காது.

Enjoy……………………….




படம் ... படம் என்று சொன்னானே ஹீரோ வையும் காணோம்,பொண்ணு இடுப்பைக் காணோம்,ஏன் துப்பாக்கியைக் கூட காணோம் என்கிறீங்களா?,ஆவ்வ்வ்......

ஆனால் படதிற்க்குரிய என்ன குறை இருக்கிறது?nothing.

ரசித்து இருந்தால் உங்கள் கருத்தைப் பதிவிட்டுச் செல்லுங்கள்.