Wednesday, August 31, 2011

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.



மன்னிப்பிலும் வலிய தண்டனை வேறேதும் இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து.ஒருவன் தன் குற்றவாளியை முழுமனதாய் மன்னிக்கும் போதே அக்குற்றவாளி ஆனவனுக்கு தன் குற்றத்தை உணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.மாற்றாக அவனைத் தண்டிக்கும் போது,குற்றவாளி முதலில் குற்றம் செய்கின்றான்,தண்டிப்பவன் இரண்டாவதாய்க் குற்றம் செய்கின்றான்.மொத்தத்தில் இருவருமே நீயாயவாதிகள் இல்லை.

தங்களை நீதிமான்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு,மற்றவர்களைத் தண்டிக்க முண்டியடித்துக் கொண்டிருப்பவர்களின் அக்கிரமங்கள்,இன்னும் வெளியுலகத்திற்குத் தெரியவில்லை.அவ்வளவுதான்.இவ்வுலகத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளுக்குள் இருப்பவர்களை விடக் கொடூரமான குற்றவாளிகள் அதிகாரம் என்ற போர்வையையும்,பண பலம் என்ற முகமூடியையும் அணிந்து கொண்டு வெளியில் இருந்து நியாயம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அது தான் இந்த உலகத்தில் நீதி.

Thursday, August 25, 2011

மார்பகப்புற்று நோய் .............தொடர் கதை-பாகம் 2

ஏதோ ஒரு வேகத்தில் தொடர் கதை எழுதத்தீர்மானித்தேன்.கண்டிப்பாய் இது பிரபல பதிவாகி அதிக வாசகரைச் சென்றடையும் என்ற நம்பிக்கையோடு.ஆனால் எனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை தானே.இத்தோடு நிறுத்துவோம் என்று நினைத்தாலும் மனம் தனிமையில் கதையை நீட்டிக்கொண்டு செல்கிறது.அதன் விளைவே அடுத்த பாகம்.