Tuesday, June 21, 2011

நீங்கள் நினைப்பதைச் சொல்லிவிடும் மாயம்

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒரு தொடர் கதை எழுதலாம் என்று களத்தில் குதித்தேன்.ஆனால் என் நினைப்பை மீறி அது ஓசையற்று அடங்கிவிட்டது.அதைத்தொடர்ந்து எழுதி முடிக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கின்ற போதும்,நாம் எழுதுவதில் ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்று மனம் முரண்டுபிடிக்கிறது.
என் சோகம்,என்னோடே போகட்டும்.இனி மேட்டர்க்கும் போவோம்.

நான் மிகவும் ரசித்த இரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


1.நாம் ஒரு இரண்டு இலக்க எண்ணை மனதில் நினைக்க வேண்டும்.( eg : 43)
2.அந்த இரண்டு இலக்கங்களையும் ஒன்றாகக் கூட்டவேண்டும்.(4+3=7)
3.பின் நாம் நினைத்த எண்ணில் இருந்து கூட்டிய எண்ணைக் கழிக்க வேண்டும்.(43-7=36)
அந்த விடையின் குறியீடு திரையில் காட்டப்படும்.
இந்த லிங்கைக் கிளிக் பண்ணிப் பார்க்கவும்.
இந்த சூட்சுமம் தான் என்ன ???கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.....



Saturday, June 11, 2011

மார்பகப்புற்று நோய் .............தொடர் கதை


காலைச் சூரியனின் ஒளி கண்ணாடி ஜன்னலுக்கூடாக ஊடுருவி அறை முழுவதும் ஒளியைப் பரப்பிக்கொண்டு இருந்தது.ஒளி முகத்தில் படரத்தொடங்க அரைக்கண் முழித்த தனு மணியைப் பார்த்தான்.மணி தன் போக்கிலே 6 ஐக் கடந்து சென்றுகொண்டிருந்தது.பதறியடித்துக்கொண்டு எழுந்தவன்,மறுபக்கம் திரும்ப மனைவி காவ்யாவும் மகள் துவாவும் எந்தவித சலனமும் இன்றி உறங்கிக்கொண்டிருந்தனர்.
சமையல் அறையை நோக்கி விரைந்தவன்,காஸ் அடுப்பிலே சூட்டைக் குறைத்து தண்ணியை வைத்துவிட்டு டாய்லெட் சென்றவன் வாயில் ப்ரஷ்யுடன் திரும்ப தண்ணியோ கொதித்து வழிந்துகொண்டிருந்தது.மூன்று கோப்பை காபியைப் போட்டுக்கொண்டு படுக்கையறை செல்ல காவ்யாவும்,துவாவும் இன்னும் எழுந்தபாடில்லை.

Saturday, June 4, 2011

யார் ஊனமுள்ளவன்?நீயா?அவனா?


நமது வாழ்கை என்ற வண்டி எப்பவுமே சீராகப் போகாது.அது வண்டியில் உள்ள தவறோ,இல்ல பாதையில் உள்ள தவறோ தெரியவில்லை.சீரான பாதையில் பயணத்தை அனுபவித்துச் செல்லுதுதல் ஒரு சந்தோஷமான நிகழ்வு.அதே வேளை ஒரு கரடு முரடான பாதையில் பல அசௌகரியத்துக்கு மத்தியில் நிர்ப்பந்தத்தில் பயணத்தைத் தொடர்தல் ஒரு துன்பமான நிகழ்வு.ஆனால் வாழ்கையில் நாம் விரும்பியோ,வெறுத்தோ இரண்டையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.ஆனால் ஒரு சந்தோசத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு,ஒரு துக்கத்தை எதிர்கொள்ளும் போது இருப்பதில்லை.
ஒரு சிறு துக்கத்தில் இருந்து மீண்டுவருவதற்குள் நம் மனம் படும் பதைபதைப்பு சொல்லிமாழாது.ஆனால் சில ஊனமுள்ள மனிதர்கள் அத்தனை சோதனைக்கும் மத்தியில் தன்னம்பிக்கையுடன்,வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் தைரியத்தையும் பார்க்கும்போது,நமது மன ஊனம் நமக்கு புலப்படுகிறது.அவனால் முடியும் போது ஏன் உன்னால் முடியாது?என்ற கேள்வி நமது மனதில் எழுகிறது.