Wednesday, September 22, 2010

இயற்கையின் கைவண்ணம்


இயற்கை சார்ந்த புகைப்படம் என்றால் அப்படி ஒரு பிரியம் எனக்கு.ஆனால் அந்தப்படம் புகைப்படம் உண்மையில் இயற்க்கையானதாஅல்லது போட்டோஷாப்பின் திருவிளையாடலா? என்று வகைபிரிப்பது தான் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது.ஆனால் என்னைப் பொறுத்தவரை கீழுள்ள படங்கள் இயற்கையானவை என்று எண்ணவே தோன்றுகிறது.உருப்பெருத்துப் பாருங்கள்,படத்தின் விந்தையை.......












ஒவ்வொரு படமும் கண்களுக்கு மிரட்சியூட்டிவிட்டது அல்லவா?





இதுவும் இயற்கைதான்.ஆனால் நமக்கு சற்று அருவருக்கத்தக்க இயற்கை.ஆனால் அவர்களுக்கு அப்படி இல்லை போலும்.எவ்வளவு வாஞ்சையாக இந்த தவளையை வைத்துப் போஸ் கொடுக்கிறார் என்று பாருங்கள்.

Wednesday, September 15, 2010

திவ்யா திவ்யா திவ்யா ...........

கல்லூரி கல் பெஞ்சில் குணா
கருமை நீங்கிய செம்பட்டை முடி காற்றில் ஆடின
காலை குளிர் திறந்த பொத்தான் ஊடே ஊடுருவ
உணர்ச்சி காட்டாத நிலையில்
சிரைக்காத தாடி பனஞ் சிராம்பு போன்று ஆங்காங்கே
பகலிலே நட்சத்திரம் தேடின பார்வை

கால்சட்டை பாக்கட்டில் சுருட்டிய தாள்கள்
நீண்டநாளாய் உறங்கிக்கொண்டிருந்தன
சேட் பாக்கட்டில் மட்டும்
சிகரட் சிங்களாய் நிமிர்ந்து நின்றது
தனது B.com 2 ம் ஆண்டு வகுப்பறைப் பாதை
மறந்த நிலையிலே அவன்

உசுப்பேத்தி விட்ட நண்பர்கள்
உஷா மேடம் பாடம் கேட்பார்கள்
நான் மட்டும் ஏன் இப்படி ?
கண்களை மூடி விடைதேட
அழகான புன்னகையுடன் திவ்யா முன்னே
அவள் கண்கள் பார்த்தவுடன்
இதயம் பூரா நிரம்பிய காதல்
இடமின்றி கண்களால் வழிந்தது

ஆரவாரம் கேட்டு கண்ணைத் திறந்தான்
பாடம் முடிந்து வெளிவந்தது அவனது பட்டாளம்
அவனைப் பார்த்தவுடன் தலையில் அடித்துக்கொண்டான் சூரி
திருந்த மாட்டாண்டா எண்டு ஆசீர்வதித்துக்  கொண்டே
நகர்ந்தது கூட்டம் அடுத்த கல் பெஞ்சை நோக்கி.

மெலிய குரலில் பெச்சுச்சத்தம்
மின்னலின் பின் இடி போல கேட்டது
ஒட்டுமொத்தச் சிரிப்புச்சத்தம்.
குணா என்று கூப்பிட்டான் ஒருத்தன்
பாய்ந்து வாயைப்பொத்தினான் மற்றவன்
சொரணை கெட்ட மனசிலும் முள் குத்தி
குருதி தெரிந்தது கண்ணீராய்.

பார்வையைத் திருப்பினான் மறுபக்கம்
கறுத்த சுடிதாருக்குள் ஒரு மல்லிகைமொட்டு
அவளும் பார்த்துவிட்டாள் என்பது புரிந்தது,
அவள் ஓட எத்தனிப்பதில் இருந்து
ஓடிச்சென்று கைநீட்டி மறித்தான்
தயவுசெய்து ஒரு நிமிஷம் திவ்யா என்றான்


கூட இருந்த அல்லக்கைகள் திவ்யா வாடி என்றவாறே திரும்பாமல் ஓடின
குணா ப்ளீஸ் என்னப் போகவிடு என்றாள் கெஞ்சும் குரலில்
ஏண்டி என்னைப் புரிஞ்சிக்க மாட்டன் என்கிறா?
நீ இல்லாட்டி செத்திருவன்டி என்றான் அவள் பாதம் பார்த்தே
அதான் சொன்னனே உன்ன எனக்கு பிடிக்கல எண்டு,
அதான் ஏன் என்கிறன் எண்டு உறுமியே ஓரடி முன் வைத்தான்.
பின் நோக்கிச் சென்றவள் கால் தடுக்க
எட்டிப் பிடித்தான் ,ச்சீ ... உதறினாள்

உன்னோடு நான் குடும்பம் நடத்துவது உனக்குத் தெரியுமா?
என்றான்,இடுக்கிப் பிடித்தாள் பற்களை
ஒரு பொண்ணு ஒரு பையன்டி நமக்கு
பொண்ணு அச்சு அசல் உன்னைப்போலவே
பையன் நம்ம சாயல்,என்று தலையை அசைத்தான்
வாயைக் கோணலாகிக் கொண்டே திரும்பினால் மறுபக்கம்
நம்ம வீடு கூட ஆத்தங்கரை ஓரம்
முடிக்க முன்னே “ஏய் மிஸ்டர் ...............
அவள் வார்த்தைக்காய் உதட்டசைவு நோக்கினான்
“உன் அப்பா என்ன பண்றாரு? என்றாள் அதிகாரமாய்
முடி வெட்டுறாரு என்றான் தயங்காமல்
நக்கலாய்ச் சிரித்தாள் கொடுப்புக்குள்
எங்கப்பா என்ன பண்றாரு தெரியுமா? என்றாள்
அது யாருக்குத்தேவை என்றான் அவன்
சரிவராது விட்ரு என்றாள் கைகூப்பியே
அப்ப எங்க அப்பாட தொழில் தெரியாமல் தான் பழகினியோ,
என்றான் ஆதங்கமாய்.
அதத்தான் நீ என்னட மறைச்சிட்டியே என்றாள் வெறுப்பாய்.

அவனது கண்ணீர் கழுத்துக் குழியில் தேங்கிட்டு
கம்மிய குரலில் சொன்னான் உனக்காக நான் அழும் கடைசி நாள்
எனக்காக நீ அழும் நாள் வந்தா சொல்லு
உன் கண்ணீரை நான் தாங்குவன் என்றவன்
தீ மூட்டிய சிதையை திரும்பிப் பாராமல் நடந்தான்.

Friday, September 10, 2010

இரண்டு காலும் இல்லாமல் ஒரு கையைக் கொண்டு நீந்தும் சிறுவன்

சந்தோசம் உடம்பில இல்ல உள்ளத்திலதான் இருக்கு என்பதற்கு இந்தச் சிறுவனின் வெள்ளைப் புன்னகையே ஒரு எடுத்துக்காட்டு.இந்த நம்பமுடியாத திறமைசாலி பிறந்தது அலபாமாவில்(Alabama).பெயர் Gabe Marsh.பிறவியிலே
 ஊனமுள்ளவன்.அவனை ஊனமுள்ளவன் என்று சொல்ல எனக்குள் ஏதோ தடுக்கிறது.ஏனெனில் எம்மில் பலர் மனதாலே ஊனமுள்ளவர்கள்.இல்லாமல் இருப்பது ஊனமென்றால் இருப்பதை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பதும் ஊனமே.

இந்த  ஆறு வயதுச் சிறுவனுக்கு இரண்டு காலும் இல்லை,ஒரு கையும் இல்லை.ஆனால் தன்னம்பிக்கை நிறையவே உண்டு.இவனது அதிஷ்டம் மார்ஷ் தம்பதியினர் இவனைத் தத்தெடுத்தது.இவர்கள் மொத்தம் 60 சிறார்களைப் பராமரிக்கிறார்கள்.(இதுதானே மனிதநேயம் ?)

ஆரம்பத்திலே இவனால் நீந்த முடியுமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது.ஆனால் அவனது விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் அவர்களது சந்தேகத்தை சந்தோசமாக மாற்றிவிட்டது.

படங்கள் கீழே.















Wednesday, September 8, 2010

ஏன் இந்தக் கொலை வெறி

இந்த அதி பயங்கர வித்தையைக் காட்டுபவர் நோர்வே நாட்டைச்சேர்ந்த Eskil Ronningsbakken.முப்பது வயது நிரம்பிய இவருக்கு இவ்வாறான மயிர்க்கூச்செரியும் வித்தை செய்வதே முழு நேரப்போழுது போக்கு.கீழே உள்ள படங்கள் சொல்லும் அவரது பொழுதுபோக்கின் வில்லங்கத்தை.




































என்ன தலை சுற்றுதா?பார்த்த நமக்குதான் இப்படி,அவரைப் பாருங்கள் எப்படி சூப்பரா போஸ் கொடுக்கிறார் என்று.