Friday, December 5, 2014

வடுக்கள் யாவும் மறைவதில்லை.(சிறுகதை)

தாமதமாக ஆபீஸில் இருந்து வெளியே வந்த கணேஷிற்கு, வீடு செல்ல வேண்டிய அவசரமும்;தொடர்ந்து கணணி முன்னாடி உட்கார்ந்து கொண்டிருந்ததால் வந்த உடல் சோர்வும் சேர்ந்து சலிப்பையே உண்டுபண்ணியிருந்தது.நல்லவேளை பஸ்சும் தன்பங்கிற்கு அவனைச் சோதனை பண்ணாமல்,காத்திருக்க வைக்காமல் வந்துவிட்டது.

ஏழு மணிக்கு கல்முனை மட்டக்களப்பு பஸ் இரண்டு பேர் உட்காருவதற்கான இருக்கையோடு வந்தது கணேஷிற்கு பிரமிப்பாய் இருந்தது,ஏனென்றால் வழமையாக தீப்பெட்டிக்குள் குச்சிகளை அடுக்கியது போல பயணிகளை ஏற்றிக்கொண்டு; நிம்மதியாக சுவாசிக்கக் கூட வழியில்லாமல்,கம்பியிலே தொங்கி வேர்வையிலே நனைந்தே வீடுவந்து சேர்வான்.

தாவி ஏறியவன்,ஒரு நடுத்தரப் பெண்மணிக்கு அருகில் இருந்த ஜன்னலோர இருக்கையில் தொம் என்று அமர்ந்துகொண்டான்.பஸ்சும் செற்றே வேகம் பிடிக்க,முகத்தில் மோதிய கூதல்க் காற்று அவனது களைப்பைப் போக்க,மனதின் இறுக்கம் குறைவதை உணரத்தொடங்கினான்.

Saturday, August 16, 2014

உனக்காக மட்டும் ...(பாகம்-2)

நான் எழுத நினைத்த கவிதை - நீ
நான் வரையத் துடிக்கும் ஓவியம் – நீ
என் காதில் இசைக்கும் ராஜா இசை – நீ
என் கண்ணுக்குள் தூங்கும் கனவு -நீ 

என் வாழ்வை அழகாக்கும் வானவில்லடி -நீ



உன் மெலிய கன்னம் என் தோள் சாய்கையில்
உன் கூந்தல் முடி என் முகம் படர்கையில்
உன் கரம் என் சட்டை கசக்குகையில்
உன் தோடு என் தோள் கீறுகையில்

உன் மீது நான் கொண்ட மோகம்- என் வாழ்வில் நான் கண்ட புது சுகம்


தொண்டை மீற அஞ்சிய வார்த்தை
நெஞ்சோடு நீ சொன்ன ரகசியம்
சிரித்தாயா என்று கேட்க்கச் சிணுங்கிய உன் சத்தம்
தவிப்போடு நீ பார்த்த பார்வை

ஜென்மத்துக்கும் மறக்காதடி – என்னவளே


 

Sunday, August 10, 2014

உனக்காக மட்டும்...



காற்றில் மிதக்கும் இறகாய்,உன் மடி தேடி நான் அலைகின்றேனடி
கசக்கி எறிந்த காகிதமாய் உன் கரம் பற்றுதலுக்காய் தவிக்கிறேனடி
கண்மூடித் தெரியும் உன் முகம்,கண் முன்னே தெரிய வேண்டுகிறேனடி
காற்றும் நம்மைப் பிரிக்கக்கூடாதென்று,கட்டித் தழுவ காத்திருக்கிறேனடி

என் மனசின் பேச்சு உன் செவிக்குக் கேட்கணுமடி
என் இதயத் துடிப்பு உன் இதயத்துடன் பரிவாகணுமடி
உன் மூச்சுக்காற்றை நான் சுவாசிக்க
உறங்கிய என் உணர்வு உயிர்பெற வேணுமடி


பின் சீட்டில் இருந்து பள்ளத்தில் இறங்கியதில் முட்டிய உன் மார்பு
பின் கழுத்தைக் கூச்ச மூட்டிய உன் உஷ்ண மூச்சுக்காற்று
தோள் பற்ற அஞ்சி,என் தோளில் பியானோ வாசித்த உன் விரல்கள்
நினைவுப் பொக்கிஷத்தில் நீங்கா இடம் பெற்று விட்டனதடி

உன்னை என்னிடம் பிரிக்கும் நாட்களும்
என்னில் உன்னைத் தேடும் என் காதலும்
உன் மடிமீது சயனிக்க ஏங்கும் என் மனசும்
என்னை நீ அடையும் தருணதுக்காய்,காத்திருக்கின்றன-என்னவளே


(நீண்ட நாட்களின் பின் எழுதுகின்ற படியால்,வார்த்தைகள் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய்...வர முடியாமல்,வரத் தவிகின்ற்றது.)

Saturday, May 24, 2014

இப்பெல்லாம் சூர்பனைகள் பஸ்ல பிரயாணம் பண்ண ஆரம்பிசிட்டாளுகள்...



போனவாரம் கொழும்பில இருந்து மட்டக்களப்பு வரும் போது,சூர்பனகை,அவ சிஸ்டர்,அவ பிரண்டு மூணு பேரு பின் சீட்ல.டிரைவர் பஸ்ஸ மூவ் பண்ணாம,பொறுமையைச் சோதிச்சிட்டிருந்தார்.வியர்வை ஆளை நனைத்துக்கொண்டிருந்தது.பின்னால் இருந்த புண்ணியவதிகள்,தங்கள் ஜன்னலை முழுமையாகத் திறந்து முன்னாள் இருந்த என் ஜன்னலை முழுமையாகப் பூட்டி இருந்தனர்.

பிள்ளைகள் தவறுதலாய்ச் செய்துவிட்டனர் என்று நினைத்து என் ஜன்னலைக் கால் வாசி திறந்த அடுத்த நொடி,என் இதயம் திடுக்கிட அகோரமாய் அடித்து மூடப்பட்டது.

Saturday, February 15, 2014

பாலு மகேந்திரா....(என் நினைவில்)





சினிமாக் கலைஞர்களில் ஒரு சிலரின் மீது அதீத பாசம் வருவது இயல்பு.இளையராஜா,மற்றும் கமலஹாசன் மீது நான் கொண்ட காதலுக்குக் காரணம் அவர்களின் வியக்க வைக்கும் திறமை மற்றும் என் தனிப்பட்ட வாழ்வில் அவர்களின் படைப்பின் தாக்கம்.

அந்த வகையில் பாலுமகேந்திரா அவர்களை மிகவும் நேசிக்கக் காரணம் அவர் எங்கள் ஊர்காரர் என்பதுதான்.கொழும்பில் படிக்கும் நாட்களில் எங்கள் ஊர்ப்பெருமை என்பதில் பாலுமகேந்திரா,ஒரு முக்கிய கருப்பொருள்.

பின்நாட்களில் சிறந்த தமிழ்ப் படங்களைத் தேடித் பார்த்த போது சந்தியா ராகம்,வீடு,அழியாத கோலங்கள்,வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், மூன்றாம் பிறை போன்ற அவரின் இயக்கத்தில் வந்த படைப்புகள் மாற்று சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது.ஆனால் பின்னாளில் வந்த அவரின் படைப்புகள் எனக்குள் எவ்வித அதிர்வையும் ஏற்ப்படுத்த வில்லை என்பது உண்மையே.அந்தக் குறையும் நிவர்த்தி செய்யப்பட்டது அவர் கை பிடித்து தொழில் கற்ப்பித்த பாலா,அமீர்,வெற்றிமாறன்,சசிகுமார்,சீனுராமசாமி போன்ற அவர்களின் சிஷியர்களின் மூலமாக.

பாலு மகேந்திரா அவர்களின் வாழ்கையைப் படித்த போது எனக்குள் ஏற்ப்பட்ட மிகப்பெரிய வியப்பு,இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமிர்தகழி எனும் சிற்றூரில் இருந்து புறப்பட்டு தமிழ் கலையின் தாயகமான இந்தியாவிலே ஒளிப்பதிவு மேதை என்ற பெருமையைப் பெறுவதென்றால் அவரின் திறமை எத்தனை அசாதாரணம் என்பதுவே.

எப்பொழுதெல்லாம் உயர்ந்த மரங்களுக்கூடே கீற்றாய்த் தெறிக்கும் சூரியனைப் பார்க்கின்றேனோ,அப்பொழுதெல்லாம் பாலு மகேந்திரா அவர்களே என் மனதில் தோன்றுவார்.

We miss you Legend….:-(