Friday, December 5, 2014

வடுக்கள் யாவும் மறைவதில்லை.(சிறுகதை)

தாமதமாக ஆபீஸில் இருந்து வெளியே வந்த கணேஷிற்கு, வீடு செல்ல வேண்டிய அவசரமும்;தொடர்ந்து கணணி முன்னாடி உட்கார்ந்து கொண்டிருந்ததால் வந்த உடல் சோர்வும் சேர்ந்து சலிப்பையே உண்டுபண்ணியிருந்தது.நல்லவேளை பஸ்சும் தன்பங்கிற்கு அவனைச் சோதனை பண்ணாமல்,காத்திருக்க வைக்காமல் வந்துவிட்டது.

ஏழு மணிக்கு கல்முனை மட்டக்களப்பு பஸ் இரண்டு பேர் உட்காருவதற்கான இருக்கையோடு வந்தது கணேஷிற்கு பிரமிப்பாய் இருந்தது,ஏனென்றால் வழமையாக தீப்பெட்டிக்குள் குச்சிகளை அடுக்கியது போல பயணிகளை ஏற்றிக்கொண்டு; நிம்மதியாக சுவாசிக்கக் கூட வழியில்லாமல்,கம்பியிலே தொங்கி வேர்வையிலே நனைந்தே வீடுவந்து சேர்வான்.

தாவி ஏறியவன்,ஒரு நடுத்தரப் பெண்மணிக்கு அருகில் இருந்த ஜன்னலோர இருக்கையில் தொம் என்று அமர்ந்துகொண்டான்.பஸ்சும் செற்றே வேகம் பிடிக்க,முகத்தில் மோதிய கூதல்க் காற்று அவனது களைப்பைப் போக்க,மனதின் இறுக்கம் குறைவதை உணரத்தொடங்கினான்.

காலையிலே பதறியடித்துக் கொண்டு வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்புவதையும், சிறுவர்கள் விளையாடிக் களைத்து திரும்புவதையும், பறவைகள் கூட அன்றைய நாளைக் கடந்து செல்வதையும்,சூரியனும் தன் செம்கம்பளத்தை அவசர அவசரமாக வாரிச் சுருட்டிக் கொண்டு ஒதுங்குவதையும் அவதானித்துக் கொண்டு பயணிக்கலானான்.


ஏதோ உள்ளூர மனசு சுரண்டி எழுப்ப,மறு பக்கம் திரும்பினான்.அருகில் அமர்ந்த அந்தப் பெண்மணி தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டான் கணேஷ்.ஏன் இப்படிப் பார்கின்றார் என்று தன் மனதுக்குள் நினைத்தவன்,அவரிடம் எதுவும் கேட்காமல் விருக்கொன்று மறுபக்கம் திரும்பிக்கொண்டான்.


“தம்பி ...” என்று அந்தப் பெண் கூப்பிட்டது கணேஷிற்க்குக் கேட்டகவில்லை,பின் அவனது தோளைத் தொட என்ன அரிச்சானிகை என்று கடுப்பாக,உம்மென்ற முகத்தோடு அப்பெண்ணை நோக்க ....அப்பெண்ணும் சற்றே தர்மசங்கடத்தோடே தலையைக் குனிந்துகொண்டார்.”யாரு லூசோ..”என்று முணுமுணுத்தவனாய் மறுபக்கம் திரும்ப முயன்றவனை;”தம்பி....என்ற பையனும் அச்சு அசலாய் உன்ர சாயல்ப்பா...அதான் என்னையும் மறந்து உங்களைப் பார்திட்டு இருந்தன்.”என்ற அப்பெண்ணின் கம்மிய குரல் கணேஷை அப்பெண்ணை நோக்க வைத்தது.

“எண்ட பிள்ளை இப்ப உசிரோட இருந்தால் சரியா உங்களைப் போலத்தான் இருந்திருப்பான்”,என்று வார்த்தையை முழுங்கியவாறே,தனது கைக்குட்டையால் கண்களை ஒற்றிக்கொண்டது கணேஷிற்கு நெஞ்சைக் கனமாக்கியது.
“என்ன ஆச்சி..உங்க பையனுக்கு???என்ற கணேஷ் கேட்க்க ;முகத்தை இறுக்கமாக்கியவாறே சற்றே மௌனமானவர்...”
AL வகுப்பு முடிஞ்சு வாறப்ப பிள்ளையை, ஆமி விசாரிக்க எண்டு கூட்டிப் போனவனுகள், அப்புறம் எண்ட பிள்ளையை நான் பார்க்கல்லப்பா...” என்று உலர்ந்த வார்த்தையை உதிர்த்தவர்,“தம்பி உங்கட அம்மா,அப்பா என்ன செய்யிறாங்க????” என்று கண்ணை அகலவிரித்துக் கேட்டவர்,”இருக்கிறாங்க .”என்ற கணேஷின் ஒற்றை வார்த்தையில் மௌனியானார்.


நீண்ட மௌனத்தின் பின்,”தம்பி எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? “என்று கெஞ்சும் குரலில் கேட்டவர்,கணேஷின் பதிலுக்குக் காத்திராமல்,”உங்கட போட்டோ ஒன்றை எனக்கு அனுப்பி வைப்பீங்களா,கறுப்பு சேர்ட் போட்டு அனுப்ப ஏலுமா?எண்ட பிள்ளைக்கு கறுப்பு சேர்ட் அப்பிடிப் பிடிக்கும் தெரியுமா “என்றவர்...அவனது பதிலுக்கு வாய் பார்த்தார்.

“சரிம்மா,விலாசத்தைச் சொல்லுங்க” என்று தன் மொபைல் இல் டைப் பண்ணவன் ......மிரட்சியோடு நேரத்தைக் கடக்க,அவனது தோள் தொட்டு “மகன் நான் இறங்கிரனாப்பா...பக்கத்தில்தான் எண்ட வீடு என்று களுவாஞ்சிக்குடி தபால்கந்தோருக்குப் போற வீதிக்கு முன்னாடி இறங்கி நடந்தார்,அந்த அம்மா.  
தன் தாயாருக்கு நடந்த சம்பவத்தைச் சொல்வதற்காக நம்பரை டயல் செய்து காதில் வைத்தவாறே பயணத்தைத் தொடர்ந்தான் கணேஷ்.

0 comments:

Post a Comment