Saturday, May 15, 2010

தீர்ப்பு ....................(ஒரு பக்க கதை)

வீடு திரும்பிக்கொண்டு இருந்த மனேஜர் ராகவனுக்கு வார்த்தையால் விபரிக்க முடியாத ஒரு உணர்வு இதயத்தில் அலையாக மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டு இருந்தது.அதற்கு காரணம் அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவம்.புதிதாக இணைந்த கல்பனா மதிய உணவை உண்பதற்காக கான்டீன் சென்ற போது பியூன் ராம் அவளது கைப்பையினுள் எதையோ தேடிக்கொண்டு இருந்தானாம்.தண்ணீர் போத்தலை எடுக்க வந்த கல்பனா “ஐயோ கள்ளன்” என்று கத்த சக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவனை அடிக் கத்தொடங்கிவிட்டார்கள்.கூச்சல் சத்தம் கேட்டு வெளியே வந்த ராகவனுக்கு ராமின் வீங்கிய முகத்தில் வடிந்த இரத்தமும் கல்பனாவின் கலங்கிய கண்ணீரும் எதை புரிய வைத்ததோ தெரியவில்லை அவனை நோக்கி “Get out !” என்று கத்தி விட்டு தன் அறை நோக்கி சென்றுவிட்டார்.அவனும் பெரிதாக கெஞ்சி கூத்தாடாமல் தலையை தொங்கப்போட்டிட்டு வெளியே பொய் விட்டான்.ராமுக்கு ஒரு 18 வயது இருக்கும்.உடல் வளர்ச்சி பெரிதாக இல்லாத காரணத்தால் வயது குறைந்தவனைப்போல் காணப்படுவான்.யாரிடமும் சகஜமாகப் பழகுவதில்லை.அவனது உழைப்பை நம்பியே அவன் குடும்பம் என்று யாரோ சொல்லி ராகவனுக்கு ஞாபகம்.

கல்பனா பார்ப்பவர்களை மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகி.கலகலப்பே அவளது அடையாளம்.இன்று ராமிற்கு இவ்வளவு கொடூரமாக அடி விழுவதற்கு காரணம் அவளுக்கு முன் தங்களை வீரன் எனப் பலர் வெளிப்படுத்த முயன்றமையே.ராகவன் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கவும் அவளிடம் காணப்பட்ட ஈர்ப்பே காரணம்.
வீடு வந்த ராகவன் மனைவியிடம் நடந்த சம்பவத்த சொல்ல “இந்த ஏழை எளியதிற்கு திருட்டு இரத்தத்தில் ஊறியது,இப்பவாவது புரியுதா?”எண்டு அவள் கேட்க ராகவனும் தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டான்.

அன்று பௌர்ணமி.மனைவியை தனியா அழைத்துக்கொண்டு பூங்கா சென்று இருந்தான் ராகவன்.மனைவியிடம் மனம் விட்டுப்பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அருகில் இருந்து வந்த குரல்கள் நன்கு பரீட்சயமானதாய் இருந்தது.ஒன்று கல்பனா மற்றது அலுவலகத்தில் வேலை செய்யும் திலக்.
“திலக் போது இடங்கள்ள வச்சி இப்படி முத்தம் தார வேலை எல்லாம் வைக்காத,உன்னால தான் நான் டிராம போட்டு ராம வேலையை விட்டுத் தூக்க வச்சான்...................சீ .... போடா ..”

ராகவனுக்கு அவனது மனச்சாட்சி காறி உமிழ்ந்தது போல இருந்தது.உடனடியாக எழுந்தவன் “நான் ஒருவரை அவசரமாக சந்திக்கணும் வா “என்று மனைவியை அழைக்க அவள் எரித்து விடுவது போல் அவனைப் பார்த்தாள்.

4 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

தீர்ப்பு நல்லா இருக்கு.

movithan said...

வருகைக்கு நன்றி சைவகொத்துப்பரோட்டா

Unknown said...

நல்ல முடிவு

movithan said...

வருகைக்கு நன்றி செந்தில்.

Post a Comment