Monday, May 17, 2010

எண்ணச்சிதறல்கள்

ஊமை ஏதோ ஒன்றைப் புரிய வைக்க
சைகை  காட்டிகொண்டு இருக்கின்றான்
வாய்  பேசுபவனோ அவனைப் பார்த்து
வாய் விட்டுச்சிரிக்கின்றான்

பஸ் வண்டியில் பிச்சை எடுக்கத்தடை
அரசாங்க  அறிவிப்பு
வெளிவிவகார அமைச்சர்
உதவித்தொகை  கோரி ஐரோப்பியா பயணம்

கடற்கரையில் காதலன்
காதலியை துரத்த
வயது சென்ற தம்பதியர்
அதை வெறுப்புடன் நோக்குகின்றனர்.

4 comments:

VELU.G said...

பஸ் வண்டியில் தடை ஆனால் பிளைட்டில் சென்று பிச்சை எடுக்கலாம்

அருமையான வரிகள்

Chitra said...

பஸ் வண்டியில் பிச்சை எடுக்கத்தடை
அரசாங்க அறிவிப்பு
வெளிவிவகார அமைச்சர்
உதவித்தொகை கோரி ஐரோப்பியா பயணம்


....... கை கொடுங்க...... நெத்தியடி .

சைவகொத்துப்பரோட்டா said...

சிதறல்கள் நல்லா இருக்கு.

malgudi said...

கருத்துக்கு நன்றி நண்பர்களே.

Post a Comment