Saturday, February 18, 2012

கண்ணுக்குத்தெரியாத என் தேவதை....பாகம் 2உள்ளே சென்றுகொண்டிருக்கும் போது சக பணியாளர்கள் “ஏன் போஸ் சத்தம் போட்டீர்கள்? என்று கேட்டதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் விறுவிறு என்று நடந்து கான்டீனுக்குள் நுழைந்தான் தனு.
ஓம்லேட் பணிஸ் ஒன்றுக்கும் தேநீர் ஒன்றுக்கும் ஓடர் செய்துவிட்டு தலையில் கைவைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்த தனு,யாரோ வேண்டும் என்றே தேநீரை உறிஞ்சிக் குடிக்கும் சத்தம் கேட்டுக் கண்ணைத்திறக்க,தனது தேநீரை சத்துரி குடித்துக்கொண்டிருந்தாள்.கடுப்பாய்ப் பார்தவனை வாயைக் வலம் இடமாக ஆட்டி வெறுப்பேற்றி விட்டு அலட்சியமாய்க் குடித்து முடித்துவிட்டு கோப்பையை அவன் முன்னே வைத்தாள்.உள்ளுக்குள் வந்த சிரிப்பை முகத்தில் வெளிக்காட்டாமல் “வேற பொண்ணாய் இருந்தால்,இப்படிக் கோவப்பட்டதற்க்கு ஒரு வாரத்திற்கு முகத்தில் கூட முழிச்சிருக்க மாட்டாள்,என்ன பிறப்புடா!! என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போது “டேய் ,என்னை ரோஷம் கெட்டவள் என்று நினைத்துக்கொண்டு இருந்தாய் என்னடா ??என்ற வாறே தலைக்கு முட்டுக் கொடுத்த கையைத் தட்டிவிட்டாள்.
வேகமாக எழுந்தவள் ஒரு தேநீரை வாங்கிவந்து அவன் முன்னே நீட்டி விட்டு,நடக்க முற்ப்பட்டாள்.சத்துரி கொஞ்சம் நில்லேன், உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும் என்று குழைந்த தனுவை அலட்சியமாய்ப் பார்த்துவிட்டு ஸ்ட்ரைட் பண்ண தன் தலைமுடியைக் கோதிக்கொண்டே நடந்தாள்.ஏய் ....உன் லவ்வர் அனுப்பிய மெசேஜ்ஐ படிக்கப் போகின்றேன் என்று அவள் விட்டுப் போன போனைக் கையில் வைத்துக் கொண்டு தனு சொல்ல பாய்ந்து வந்தவள் விருக் என்று அவன் கையில் இருந்த போனைப் பறித்துக் கொண்டு முறைத்தாள்.
இல்லை....உனக்கு கோவம் வருகின்றதா??என்று பரிசோதிக்கத்தான் எடுத்தேன்,என்றான் தனு சிரித்துக்கொண்டே.உன்னோடு நான் கொஞ்சம் பேசலாமா???என்றான் மீண்டும்.”No I can’t. I don’t like to waste my time with useless guys.” என்றாள் சற்றுத் திமிராக.நீ தான் என் காதல் கதையைக் கேட்க ஆசைப்பட்டாய் என்று சொல்ல நினைத்தேன், ஆனால் உனக்கு கேட்க இஷ்டம் இல்லை போல என்றான் எதேட்சையாக.அடப்பாவி..........!!! என்று தன் வாயைப்பொத்திக் கொண்டவள்,கதிரையை தனுவிற்கு அருகில் இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு அவன் கண்களையே பார்த்துக்கொண்டே சொன்னாள்,That girl is so lucky….


ம்ம்ம்ம....என்னுடைய டைம வேஸ்ட் பண்ணாத,ப்ளீஸ் வேகமாச் சொல்லு.சார் வந்தால் திட்டுவார் என்று அவசரமூட்டினாள்.
நான் லவ் பண்ணற பொண்ணு பெயரு பௌசானா .......... fபஸ்மீனா பௌசானா என்று தனு சொல்லிமுடிப்பதற்குள் அவள் சிரித்த நையாண்டிச் சிரிப்பில் அவன் சொல்லவந்த கதையை மறந்துவிட்டான்.அவன் சற்று வெளிறிய முகத்துடன் அவளைப் பார்க்க சிரிப்பை அடக்கிக் கொண்டே ம்ம் சொல்லு என்றாள்.இல்லை நான் சொல்ல விரும்பவில்லை என்றான் அவன்.ப்ளீஸ் ....எனக்கு ஏனோ அடக்க முடியாமல் சிரிப்பு வந்திட்சு,உனக்குப் பக்கத்தில் ஒரு முக்காடு போட்ட பெண்ணைக் கற்பனைப் பண்ணிப் பார்க்க என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என்றாள் அப்பாவியாக.

அது சரி அவளை நீ எப்பொழுது முதல் தடவையாப் பார்த்தாய் ???அவள் இப்போ என்ன பண்ணுறாள்??நீ ஒரு முஸ்லிம் பொண்ணை லவ் பண்றது உன் அம்மாவிற்கு தெரியுமா?உன் அம்மா சப்போர்ட் பண்ணாலும் பண்ணுவாங்க,,அந்த பொண்ணு வீட்டுக்கு உன் நாதாரித்தனம் தெரியுமா??என்று அடுக்கிட்டே போனாள்.
ஏய் இப்படியெல்லாம் கேட்டாள் என்னால முடியாது தாயே,,,ஆள விடுடா சாமி என்றவாறே எழும்ப கையைப் பிடித்து இழுத்து மீண்டும் உட்கார வைத்த சத்துரி,கண்களால் கெஞ்சத் தொடங்கினாள்.
அப்பொழுது அவள் போன் சிணுங்க,மறு பக்கம் ருவந்திக்கா பேசினாள் ,சார் உன் டேபிள் போணுக்கு அழைத்தார்,நீ இப்பொழுதுதான் கான்டீன் போனதாகச் சொன்னேன்.சீக்கிரம் வாடி என்றாள் அவள்.திரும்பி அழைத்தால்,நான் தனுவிடம் ப்ராஜெக்ட் எச்டிமேட் சம்பந்தமாகப் பேசிட்டு இருக்கிறேன் என்று சொல்லுடி என்றவாறே அழைப்பைத் துண்டித்தாள் சத்துரி.

தொடரும்.... 

5 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான தொடர் .. தொடரட்டும்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று ..

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

somasundaram movithan said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா...

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக இருக்கிறது ! தொடருங்கள் நண்பரே !

somasundaram movithan said...

@திண்டுக்கல் தனபாலன்
தொடர்ந்து படித்து ஊக்கமூட்டும் உங்களுக்கு மிக்க நன்றிகள்.

Post a Comment