Wednesday, November 24, 2010

வெடிமுத்து பாகம் -2

பழைய வெடிமுத்துவைத் தரிசிக்க

நான் சிறுவயதில் மிகவும் ரசித்த ஒரு நபர் எமது பாடசாலை சமூகவியல் ஆசிரியர்.அவரை எனக்கு மிகவும் பிடிக்கக்காரணம் அவரது அழகான பொய்கள்.வரலாறே பொய்யும் புரட்டும் கற்பனைகளும் மலிந்து கிடக்கும் ஒரு பாடம்.அதில் இவர் வேற ஒரு புளுகு மன்னன்.நினைத்துப்பாருங்கள் அந்த வகுப்பின் நிலையை.ஆனாலும் அந்தப் பாடவேளையில் தான் நேரம் செட்டை கட்டிப்பறக்கும்.எனக்கு பிடித்த வேடிமுத்து என்ற பெயரையே ஆசிரியருக்கும் சூட்டுகின்றேன்.

அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் இவர் விடுவதெல்லாம் கரடி என்று.ஆனாலும் அவர் முகபாவத்திற்க்கும்,அவரது குரலின் ஏற்ற இறக்கத்திற்க்கும் அனைவரும் ரசிகர்கள்.அதிலும் அத்தனை பொய்களையும் உண்மை போலவே சொல்லும் அவரது பாங்கே தனிதான்.

அன்று எமது 9 வகுப்பு முதல் நாள்.அன்றுதான் எமது ஹீரோ ஒபெனிங் சீன்.வகுப்பிற்கு வந்தவர் எமது வணக்கங்களுக்கு இலேசாக புன்னகைத்து விட்டு ஆசிரியர் மேசையிலே அமர்ந்தார்.இன்றைக்கு முதல் நாள் தானே,என்ற படியால் பாடம் நடத்த மாட்டேன்,என்றார் .நாங்க எல்லாம் அப்படியே ஷாக் ஆயிட்டம்.நேற்று ஒரு கிரிக்கெட் மேட்ச்,செம த்ரில்.புகுந்து கலக்கிட்டம் இல்ல,என்று அவர் முடிக்கும் முன்னே “என்ன சார் ஆச்சி என்றான் ரேங்கில் பின்னாடி இருந்து பார்த்தா முன்னாடி வரும் சுகுமார்.


“நேற்று எங்கட தெரு டீமிக்கும் பக்கத்து தெரு டீமிக்கும் கொய்யா வளவுக்குள்ள மேட்ச் நடந்திச்சு.எங்களைப் பொறுத்தவரை இந்தியா-பாகிஸ்தான் சார்ஜா மேட்ச்சிக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இல்ல.ஏன் எண்டா இது கவுரவப் பிரச்சனை.

“டாஸ்ல அவனுகள்தான் ஜெயிச்சு பாட் செய்தான்கள்.அந்தப் பிட்ச் முதலில துடுப்பெடுத்தாடும் அணிக்குத்தான் சாதகம்.அதோட எமது வேகப்பந்து வீச்சாளர் ஆப்ரிக்கா மண்டையன் வராததும் எமக்கு பாதகமாப் போச்சி.எமது அணிப்பந்து வீச்சுக்கு எட்டுத்திக்கிலும் அடிச்சு கலங்கடிச்சிட்டானுங்க.நான் தான் ஒன்ற விட்ட ஓவரப் போட்டு ஓட்டத்தைக் கட்டுப்படுத்தினன்என்று அவர் முடிக்க எனக்குப் பக்கத்தில் உள்ள நண்பன் “இது இவருக்கே ஓவராத் தெரியேல்ல! என்று என் காதருகே முணுமுணுத்தான்.கதையைக் கேட்கவே மனம் ஆசைப்பட்டதே தவிர லாஜிக் பிடிக்கத்தோணவில்லை.

ஆசிரியர் தொடந்தார்,இப்படியாக அவனுங்க 10 ஓவருக்கு 86 ஓட்டம் குவிச்சிட்டானுங்க.இனி நம்ம டீம் பாட்டிங்.என்ன ஓப்பனிங் போகச்சொல்லி பக்கத்துக்கு வீட்டுப் பங்கஜம் பாட்டியும் அவ பேத்தியும் ஒரே கூச்சல்.நம்ம பாட்டிங்கிற்கு அவங்க தீவிர ரசிகைங்க.நான் சைகை காட்டி அமைதி காக்கச் சொன்ன பின்னாடிதான் அவங்க அமைதியானங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............. என்ற சத்தம் வகுப்பறையின் பின்னாடி இருந்து மேதுவாகக்கேட்டது.

ஓப்பனிங் இறங்கின பயலுக பந்தை வேஸ்ட் பண்ணிட்டே ஒன்று,இரண்டு எண்டு ஓட்டத்தை எடுத்திட்டு இருந்தது.5 ஓவருக்கு 22 ஓட்டம் .பொறுமை எல்லை தாண்டிய பங்கஜம் பாட்டியும் பெட்டிக்கடை வேலுத்தாத்தாவும் துடுப்பெடுத்தாடும் பயலையும் அவன் தகப்பனையும் திட்டத் தொடங்கிவிட்டனர்.அதிலும் பாட்டி ஒரு படி மேலே போய் டின் மீன் தகர டப்பாவால் அவன் தலைக்கு குறி வைத்து எறிஞ்சாள்.அவன் புண்ணியம் குறி தப்பிவிட்டது.

“எனக்கும் ஆட்டத்தின் போக்கு பயத்தை உண்டுபண்ணிட்டு,ஆட்டம் இழந்தால் காரியம் இல்லை,அடித்தாடுங்கள் எண்டு கட்டளையிட்டேன்.உத்தரவுக்கு காத்திருந்த போல ஒருவர் பின் ஒருவராக ஒரு ஓவருக்குள்ளே மூன்று பேர் ஆட்டம் இழந்தனர்.

“அடுத்ததாக நான் கொக்குப்புறா பேட்டைச் சுமந்து கொண்டு களத்தில் இறங்கினேன்.எமது தெருவினர் ஒரே கரகோஷம்.நான் கை காட்டி நிறுத்தச் சொன்னேன்.எனக்கு பப்ளிசிட்டி அவ்வளவாகப் பிடிக்காது.

“முடியல்லை.............. “,பக்கத்துக்கு நண்பன் முணுமுணுத்தான்.


“நான் அப்பப்ப 6 விளாசி ஓட்டத்தைக் கூட்டிட்டு இருந்தன்.கடைசியாக 2 போலுக்கு 12 ஓட்டம் தேவை.எல்லா மாணவர்களும் கதிரையின் நுனியில் அவரது நேரடி ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டுஇருந்தனர்.

“பந்த வீசின பரதேசி வேகமா ஓடிவந்து மெதுவாக வீசிவிட்டான்.பந்து மட்டையில படவில்லை.எமது தெரு ஜனங்கள் கலங்கிய கண்ணோடு இருக்க,பக்கத்துக்கு தெரு விளங்காத பயல டப்பான்கூத்து ஆடி வெறுப்பேத்தின.பாட்டி அழுது கொண்டே போய் விட்டாள்.

“ஆனாலும் எனக்கு நம்பிக்கை போகவில்லை,அடுத்த பத்துக்கு ஓங்கி அடிச்சன்,பந்து இரண்டு பாதியாக உடைந்து ஒன்று long-on திசையிலும் மற்றையது mid-on திசையிலும் ஆறு ஓட்டங்கள் ஆயின.நடுவர் இரண்டு தடவைகள் 6 காட்டினார்.

எனது தெருவினர் மைதானத்திற்குள் ஓடி வந்து என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு கூச்சல் போட்டனர்.எனக்கு ஒரே சந்தோஷம்,ஏனென்றால் எண்ட தெருவின்ட மானத்தைக் காப்பாத்திட்டேன் என்று “.


அப்பொழுது பெல் அடித்தது.சரி நாளையில இருந்து பாடத்தைப் பார்க்கலாம் என்று புறப்பட்டார்.அன்றிலிருந்து அவர் பாடம் என்றால் வடிவேல் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தது போலத்தான்.

வெடி தொடரும்........................

10 comments:

பிரியமுடன் ரமேஷ் said...

ha ha ஜாலியான அனுபவம்..

வெறும்பய said...

nalla anubavam..

malgudi said...

@பிரியமுடன் ரமேஷ்

கருத்திற்கு ரொம்ப நன்றி.

malgudi said...

@வெறும்பய
கருத்திற்கு நன்றி.

Chitra said...

அன்றிலிருந்து அவர் பாடம் என்றால் வடிவேல் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்தது போலத்தான்.


...... கலக்கல் கமென்ட். ஹா,ஹா,ஹா,ஹா....

malgudi said...

@Chitra
அக்கா,வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி.

Ayinkaran said...

மிகவும் நன்று

malgudi said...

@Ayinkaran
கருத்திற்கு நன்றி.

ஐயையோ நான் தமிழன் said...

சூப்பர்

malgudi said...

@ஐயையோ நான் தமிழன்
மிக்க நன்றி.

Post a Comment