Sunday, March 25, 2012

கண்ணுக்குத்தெரியாத என் தேவதை....பாகம் 3

இந்தத் தொடர்கதையின் முன்னைய பாகங்களைப் படித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

(அப்படி என்ன கறுமத்தை எழுதித்துலைத்திருப்பான்,மன்னிப்பு என்று பெரிய வார்த்தை எல்லாம் கேட்கின்றான் என்று யோசிக்காதிங்க,உலகத்துக்கே உயிரூடுகின்ற காதலை மையமாக வைத்து ஒரு தொடர்கதையை ஆரம்பித்தேன்.அது ஆரம்பித்த நேரமோ தெரியவில்லை,ஆபீஸில் ஏகப்பட்ட வேலை.இன்று நீண்ட இடைவேளைக்குப் பின் ஆரம்பித்தால் ,எனக்கு முந்தி ஞாபகத்தில் வைத்திருந்த கதை மறந்துவிட்டது.கற்பனைக்கா பஞ்சம்,வேறு கோணத்தில் ஆரம்பித்து விட்டேன்.)

படிக்க ஆரம்பிப்பவர்கள் மீண்டும் முதல் பாகத்தில் இருந்து படிக்கவும்....
(பொறுமையாகப் படியுங்கள்,உங்கள் முதல் காதல் காட்சி சற்று லேசாகவே நிழலாடும்....அப்படி ஞாபகம் வராவிட்டால் நான் பொறுப்பில்லைங்கோ)

பாகம் 1

பாகம் 2



“பார்த்தாயா??சார் போன் பண்ணியிருக்கார்,நல்ல காலம் ருவந்திக்கா போனத் தூக்கிட்டால்,இல்லாட்டி அந்தக் கொடுப்புலிர கோவத்துக்கு ஆளாகி இருக்கணும்....,என்று சத்துரி முடிப்பதுக்குள் “நீ பெரிய அழகி என்று நினைப்போ!எல்லாருக்கும் பட்டப்பெயர் வைச்சுக் கலாச்சிட்டு இருக்கா,என்று போலியாய் முறைக்க “ப்ளீஸ்டா,உண்ட காதல் கருமாந்திரத்த சீக்கிரம் சொல்லித் தொலைடா,சார் மீண்டும் கால் பண்ணுவதற்குள் நான் போகணும்என்று கைகூப்பினாள்.





மீசையை இரண்டு விரல்களால் சீராக்கியவன்,தலைக்கு மேலாகச் சுற்றிய மின் விசிறியைப் பார்த்தவாறே, பௌசானா................,பெயரே எவ்வளவு ஸ்வீட்டா இருக்கு,ஆள் எப்படி இருப்பா என்று நினைக்கின்றா???என்று இடைவெளி விட்டவன்,அவளைப் பார்க்க ;அவள் தனுவின் மூஞ்சியில் படம் பார்த்திட்டு இருந்தாள்.ம்ம்...பொறாமை,என்றவன் தொடர்ந்தான்.

“அன்று ஒரு வெள்ளிக்கிழமை,அதிகாலைப் பொழுது.அப்பொழுதுதான் சூரியன் வேலைக்குப் போக தயாராகிட்டு இருந்தார்.நான் பஸ் தரிப்பிடம் வந்து சேர,எனக்காகவே காத்திருந்தது போல பஸ்சும் வந்து சேர்ந்தது.பஸ்ஸில் பெரிதாக ஆட்கள் இல்லை.நான் ஜன்னல் ஓரச் சீட்டில் உட்க்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டே பாட்டுக்கேட்க ஆரம்பித்தேன்,அப்பொழுது என் பக்கத்தில யாரும் இருக்கவில்லை.பஸ் ஒரு கால் மணித்தியாலத்துக்கு மேலாக பயணித்துக்கொண்டு இருந்தது.அப்பொழுது ரகுமான்ட “உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு..... பாடல் வரிகள் காதுக்குள்ளாகச் சென்று இதயத்தைப் பிடித்து உலுக்கிக் கொண்டுயிருந்தது.அப்பொழுது பக்கத்துச் சீட்டில் தொம் என்று திடீர் என உட்கார அந்த அதிர்வில் கண்ணைத் திறந்தேன்,இரண்டு கண்கள் என்னை நோக்கின.


உட்காரும் போது ஏற்ப்பட்ட சிறிய அதிர்வானது,தற்போது பன்மடங்காக அதிகரித்து என் இதயத்துக்குள் சுனாமி ஏற்படக் கூடிய அதிர்வை ஏற்ப்படுத்தியது.நல்லவேளை அந்தப் புண்ணியவதி பர்தாவிற்குள் தன்னை மூடியிருந்தாள்.அல்லாவிடின் யாராவது தண்ணி தெளித்துத்தான் என்னை எழுப்பி இருக்கவேண்டும்என்று தனு கூற ,வெக்கம் கெட்ட ஆளையா நீ!!!இந்த அளவிற்கு வழிஞ்சதும் இல்லாமல்,அதைப் பெருமை பொங்கச் சொல்லுகின்றா??என்று தன் தலையில் தட்டிக் கொண்டாள் சத்துரி.உங்களைப் போன்ற ஒலிம்பிக் வீரங்கனைகளைப் பார்த்திட்டு,தேவதை போன்ற பெண்ணைப் பார்த்ததால் ஏற்ப்பட்ட தாக்கமாகக் கூட இருக்கலாம் என்று சமாளித்தான் தனு.

ம்ம்ம்....பில்ட் அப்ப விட்டிட்டு கதையைச் சொல்லு“என்று அவசரப்படுத்தினாள்.நான் என்னை மறந்தவனாய்,கண்கள் இமைக்க மறந்து அவளையே பார்த்துக்கொண்டு இருக்க விருக்கென்று மற்றப் பக்கம் திரும்பிக்கொண்டாள்.ஏதோ நினைத்தவளாய் புத்தகப் பையின் கீழிருந்த அவள் கையை மேலெடுத்து தன் தங்க நிறக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு,கண் இமைகளை ஒருக்கால் சிமிட்டிக் கொண்டாள்.அவள் கரத்தையும் கடிகாரத்தையும் ஒருங்கே பார்த்த எனக்கு,எது தங்க நிறம் என்று சந்தேகம் வந்தது என்றால் பார்த்துக்கொள்ளேன் அவளது நிறத்தை என்றான் கண்களில் கேள்வியுடன் தனு.உன் சந்தேகத்தை இங்கேயே ஆரம்பிச்சிட்டியா? என்று தன் தெத்திப் பல் தெரியச் சிரித்தாள் அவள்.தனு தொடர்ந்தான்;

அவள் அவளது சப்பாத்தின் வாரினைக் கட்டக் கீழே குனிய ,நான் நினைத்தேன் அவள் எதையோ விழுதி விட்டாள் என்று.உடனே நான் அதைப் பொறுக்கிக் கொடுத்து நல்லபெயரை எடுக்கலாம்,என்ற நப்பாசையில் திடீர் எனக் குனிய,அந்த நேரம் பார்த்து அவள் நிமிர;என் நெற்றி அவள் நெற்றியை முட்டி விட்டது,எனக்கே சாதுவாக வலித்து விட்டது,அவளுக்கு எப்படி வலித்திருக்கும்!!!,சத்துரி ,தன் வாயை புறங்கையால் மூடிக்கொண்டே கேலியாய்ச் சிரித்தாள்.ம்ம்ம்,அப்புறம்???என்றாள் ஆவல் போங்க.
அவள் உன்னைப் போல இல்லை சத்துரி;நான் சாரி,என்றவாறே அவளை நோக்க அவள் பர்தாவை லேசாகத்தூக்கியவாறு தன் கண்ணில் பனித்திருந்த கண்ணீரை கரத்தால் துடைத்துக் கொண்டு இருந்தாள்.எனக்கு என்னிலே வெறுப்பு வந்திடுச்சு,ஆனா நான் எதேச்சையாக முட்டியதால்தான் அந்த அப்பிள் கன்னங்களையும்,கூர் மூக்கையும்,ஸ்டோபெர்ரி உதட்டையும் பார்க்கக் கிடைத்து என்று சந்தோசமும் பட்டுக்கொண்டேன்.

“சாரி,நான் உங்களுக்கு உதவி செய்யத்தான்,குனிந்தேன்,ஆனா இப்படி ஆயிட்டு என்று கெஞ்சலாச்சொல்ல;சப்பாத்து லேஸ் கட்டிவிடவா?,என்றாள் வெடுக்கென்று.நான் நாக்கைக்கடித்துக்கொண்டு விழி பிதுங்க ,அவள் அழகாய்ச் சிரித்துக்கொண்டு தலைகுனிந்தாள்.ஓ...நீங்க பெரிய விஜயகாந்த் !!!என்றாள் சத்துரி மெதுவாக.
அப்பொழுது தனுவின் போன் “வசீகரா....உன் நெஞ்சினிலே..என்று ஆரம்பிக்க ,போனைப் பார்த்தவன்;ஐயோ சார் கூப்பிடுறார் என்றவாறே ஓட,அவனை முந்திக் கொண்டு சத்துரி ஆபீசுக்குள் ஓடினாள்.

தொடரும்....

2 comments:

Unknown said...

காத்திருப்போம் அடுத்த பாகத்துக்காக

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

Post a Comment