Sunday, October 7, 2012

எவ்வாறு VLC Media player இல் Mobile Tv பார்க்கலாம்???


நீண்ட காலமாக பதிவு எழுதாமல் விட்ட காரணமோ என்னமோ,மீண்டும் எழுதுவது என்று உட்கார்ந்தால் அது சோம்பலின் காரணமாகத்தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு சின்ன பிளாஷ்பேக்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மட்டக்குளியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தகாலத்தில் நண்பன் சங்கர் தன் கனவுக்காதலிக்கு (அப்படி நான் நினைக்கின்றேன்)மீராஜாஸ்மின் படத்தைப் போட்டுக்கொண்டு கவிதை பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்தான் ப்லோக்கில்.

சங்கர் ப்ளாக்கிற்கான இணைப்பு : மழைக்கால தவளைகள்
இப்பவெல்லாம் பாஸ்,நம்ம ரேஞ்சுக்குவந்திட்டார்,அதாவது எப்பவாவது எழுதுவார் என்று சொல்லவந்தன்.

சங்கர் எழுதும் போது கொடுத்த ஏக பில்டப் காரணமாக ;ரூமில் இருப்பவர்களும் ரூமுக்கு வருபவர்களும் பதிவர்களாக மாறிக்கொண்டிருந்த காலமது.அப்பொழுதெல்லாம் பதிவு எழுதவேண்டும் என்றால் கல்லூரிக்குச் சென்று ஓசி இணையத்தில்தான் கலைச்சேவை செய்யவேண்டும்.கல்லூரியில் பொங்கலில் போட்ட பயறு போலத்தான் தமிழ் மாணவர்கள்.அங்கு நமக்கு இருந்த வரவேற்பைச் சொல்லப் போனால் ஈழத்தமிழரின் வாழ்வியல் தொடர்பான பதிவாகிடும் என்பதால் நீட்டவிரும்பவிலை.

அப்பொழுது என்னுடைய தேர்வாக இருந்தது தொழில்நுட்பம் தொடர்பாக பதிவிடுதல்.ஆனால் ஒன்றிரண்டு தொழில்நுட்ப பதிவுகளை விட எழுதியதெல்லாம் “இதயம் முரளி” ரேஞ்சுப்பதிவுகளே(அழகாய் மின்னும் போலி நட்சத்திரமே,என் இதயத்தை மட்டுமல்ல,என் பதிவுகளையும் கெடுத்திட்டியேடி)

 ஜாக்கி போல சொந்த முன்னுரை கொடுத்துட்டாராம்..............


எவ்வாறு VLC Media player இல் Mobile Tv பார்க்கலாம்???

இப்பொழுதெல்லாம் எல்லா மொபைல் சர்வீஸ்களும் (இலங்கையில் Dialog, Airtel, Etisalat) mobile Tv என்னும் வசதியை வழங்குகின்றது.இது பிரத்தியேகமாக இணைய இணைப்பைக் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கான சேவையாகும். இதனை நேரடியாக நமது லேப்டாப்இல் பார்க்க முடியாது.காரணம் இதற்குப் பயன்படும் ப்ரோடோகோல்(protocol)  Real Time Streaming Protocol (RTSP).இந்தப் ப்ரோடோகோல் சாதாரணமாக நாம் உபயோகிக்கும் ப்ரோவ்செர்களில் (Brower) தொழில்படாது.
ஆனால் VLC player  ஆனது mobile Tv பார்க்கும் வசதியை தன்னகத்தே கொண்டுள்ளது.அதற்க்கு நாம் சிறிய configuration செய்ய வேண்டும்.

1.                   
ü  VLC player  ஐ திறக்கவும். (VLC version 1.1.x - 2.0.1).
ü  Tool எனும் menu வைக் கிளிக்கவும்.அதில் preference ஐத் தெரிவுசெய்யவும்.
ü  பின் இடப்பக்கமுள்ள Input & Codecs ஐத்தெரியவும்.
ü  அடியில் உள்ள Live555 stream transport இல்  RTP over RTSP (TCP)த்தெரியவும்.
ü  Save பண்ணி விண்டோவை மூடவும்.
ü  Media எனும்  menu வைக் கிளிக்கவும்.அதில் Open Network Stream ஐத்தெரியவும்.
ü  Show more options என்ற checkboxஐக் கிளிக் பண்ணவும்.
ü  Cashing என்பதற்கு 1200ms என்ற பெறுமானத்தைக்கொடுக்கவும்.
ü  பார்க்க விரும்பும் URL Please enter a network URL இல் டைப் பண்ணவும்.
ü  இறுதியாக play என்ற பட்டன்ஐக் கிளிக் பண்ணால் டிவி ஒளிபரப்பத்தொடங்கும்.


   இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் நீங்கள் விரும்பும் வீடியோவை சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.அதற்க்கு இறுதியில் play செய்த பட்டன் அருகே உள்ள சிறிய முக்கோணத்தைக்கிளிக் செய்து  convert என்பதைத்தெரிந்து; வேண்டிய format  ஐயும் சேமிக்கும் இடத்தையும் தெரிவு செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment