Sunday, October 21, 2012

வயல்ப் பயணம்.....1




அது என்ன காரணமோ தெரியவில்லை,முன்னாடி போல் எழுதுவதற்கு பெரிதாக இஷ்டம் இல்லை.அப்படி எழுத உட்கார்ந்தாலும் முகப்புப்புத்தகத்தை பத்து நிமிடம் பார்த்து விட்டு எழுதுவோம்,என்று அதைத்திறந்தால் எழுதுவதற்கு ஒதுக்கிய நேரத்துக்கும் மிச்சமாக புடுங்கிவிட்டு எழும்புவதான் கதை.(டைப் பண்ண ஆரம்பிச்சிட்டல்ல, மேட்டர்க்குத் தாவிர்ரா கைப்புள்ள)

Sunday, October 7, 2012

எவ்வாறு VLC Media player இல் Mobile Tv பார்க்கலாம்???


நீண்ட காலமாக பதிவு எழுதாமல் விட்ட காரணமோ என்னமோ,மீண்டும் எழுதுவது என்று உட்கார்ந்தால் அது சோம்பலின் காரணமாகத்தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு சின்ன பிளாஷ்பேக்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மட்டக்குளியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தகாலத்தில் நண்பன் சங்கர் தன் கனவுக்காதலிக்கு (அப்படி நான் நினைக்கின்றேன்)மீராஜாஸ்மின் படத்தைப் போட்டுக்கொண்டு கவிதை பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்தான் ப்லோக்கில்.

சங்கர் ப்ளாக்கிற்கான இணைப்பு : மழைக்கால தவளைகள்
இப்பவெல்லாம் பாஸ்,நம்ம ரேஞ்சுக்குவந்திட்டார்,அதாவது எப்பவாவது எழுதுவார் என்று சொல்லவந்தன்.

Monday, August 27, 2012

மீண்டும் முகமூடி....




ஹாய் அன்பான வாசகர்களே .....
இப்படி ஆரம்பிப்பதற்க்குதான் ஆசை,ஆனால் ஆசை மட்டும் இருந்தால் பத்தாதே வாசிப்பதற்கு வாசகர்களும் வேண்டுமே???எது எப்படியோ,எனக்கும் இந்த சமூகத்துக்கும் (வாசிக்கும் நாலு பேர்)ஒரு தொடுப்பாக இந்த வலைப்பூ இருந்துட்டுப்போகட்டுமே....
முந்தி எல்லாம் தனிமை கிடைக்கும் போது அடுத்து என்ன எழுதலாமென்று யோசித்து மனதிலே லிஸ்ட் போட்டு வைத்திருப்பேன்.என் வலைப்பூவே ஹோம் பேஜ் ஆக இருந்தது எல்லாம் ஒரு காலம்.இப்போ வலைப்பூவின் பெயரை யோசிச்சு டைப்பண்ற அளவிற்குப்போயிற்று...
so sad….


இப்போது எனது ஒவ்வொரு மூவ்விற்கும் கடவுள் செக் வைப்பதால்,பிடிப்பு என்பது உணவில் கூட இல்லாமல் போய்விட்டது.என்னை நான் சந்தோசமாக வைத்திருக்க நான் செய்யும் முயற்சியில்,இந்தப் பதிவு எழுதுதல் ஒரு வழியாக இருக்கும் என்றநோக்கில் மீண்டும் தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.(கண் ஆபரேசனுக்குப்பிறகு எழுதுவாற சுஜாதா என்ற நினைப்பு,படுவா(
me))

12B ஷாம்க்கு இன்டர்வியூ மிஸ் பண்ணபடியால்தான் ஜோதிக்காவும் கிடைச்சது,ஜாலி வாழ்கையும் கிடைச்சது.ஆனா பலருக்கு இன்டர்வியூ மிஸ் பண்ணா இருக்கின்ற நிம்மதி போறதோட ,பிடிக்கிற தருவாயில இருகின்ற கிளியும் பறந்து பறந்து போய்டுமாம்.... (ஒரு உதாரணத்துக்குச் சொன்னன்,நோ சம்பந்தம் டு மீ)

சரி,மேட்டருக்கு வாறன்,,கொஞ்ச நாளா மூடி இருந்த கடைய,தூசு தட்டிட்டு இருக்கேங்க ,அம்புட்டுதான்