இன்றோடு என்காதல் சொல்லி ஒருவாரம்
இருப்புக்கொள்ளவில்லை – மனசுக்குள்
அவளுக்கு வகுப்பு விட இன்னும் பத்து நிமிடம் இருக்கு
எனக்கு ஆபீஸ் முடியவோ ஒரு மணித்தியாலம் இருக்கு
இன்று அவளை தவற விட்டால்
அவள் இரடைப்பின்னல் காணாது - மீண்டும்
இரட்டைக்கோபுரம் சாய்ந்து விடும் எனக்கு
மனம் மட்டும் இல்லை – இதயமும்
அவளைக்காணாது குருதியை பம்ப மறுத்தது
காதலை ஏற்றி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு
அனுமதி கேட்டேன் என்ஜினீயரிடம்
அவர் புன்னகைத்தார்
நான் காற்றில் கலந்து படலை தாண்டினேன்.
வகுப்பு முகப்பில் நான் காவல் தெய்வமானேன்
என் தலைக்கறுப்புக் கண்ட அவள் நண்பிகள்
அவளை கிள்ளி நுள்ளி தகவலை கொடுத்தனர்
தகவல் பெற்ற அவள் மூளை தனக்கு வந்த குருதியையும்
இதயதிற்கு கொடுத்து ஓய்வானது
தலை கோதும் என்விரல்கள்
அவளைக்காணாது படபடக்க தொடங்கின
கண்ணை மூடி காற்றை ஊதி
பொறுமையை ஊட்டினேன்
கண்ணைத்திறந்தேன்- அவள் கண்ணில் என் முகம்
கரம் பற்றினேன்
உதறிக்கொண்டு உதடு கடித்தாள்
துடித்த மீசையை அவள் இமைகள் அதட்டின
சாண் தூரத்தில் வந்தாள்
உம் என்று நான் வந்தேன்
சிரிப்பு வரவில்லை- கடுப்பே வந்தது
தெரு கடந்ததும் தோளில் தலை சாய்த்தாள்
கோவம் புஸ்வாணம் ஆனது
தலையால் முட்டினான் இந்த நாம்பன்
அந்த நாகுவை
சிரித்தன இரண்டு இதயங்கள்
இதயங்களின் இன்பத்தை இயற்கையும் பொறுக்காது போலும்
மூக்கைச் சீறத்தொடங்கினான் வருணன்
அவள் தலையை என்கரத்தால் மூட
துளிகள் பருக்கத் தொடங்கின
அழகிய காதலர்களை படம் பிடித்தான்
வானில் ஒருத்தன்
அந்தப் படத்தைப்பார்க்க அவர்கள் போட்ட
ரகளை இடியெனக் கேட்டது
பயந்த என்னவள் என் மார்பில் தலை புதைத்தாள்
அவள் பயந்தவுடன் சிங்கமாய் எதிர்த்தேன்-சின்னத் துளிகளை
எம்மைக் கடந்த சைக்கிள் நின்று திரும்பியது
சிங்கமாய் நின்ற நான் சின்னாபின்னமானேன்
அப்பா மூக்குக்கண்ணாடியை உயர்த்தி மீசை கடிக்க
என்கரம் பற்றிய அவள் விரலை
மெதுவாய் கழற்றினேன்
கோவமாய் தொளைக்கடித்தாள்
தலையை ஆட்டியவாறே வண்டியை உளக்கினார் அப்பா
தலையைக் கொட்டியவாறே – உன் மாமாடி என்றேன்
இல்லையே என்றாள் குழந்தையாய்
அடியே என் அப்பாடி என்றேன்
ஐயோ என்று விரல் கடித்து துள்ளினாள்
அப்பா ரொம்ப நல்லவர்டி என்றேன் – கண் கலங்கியபடி.
13 comments:
உங்கள் காதல் வாழும் உன் அப்பா ( அவள் மாமா ) ரொம்ப நல்ல்வரடி .....வாழ்த்துக்கள் . காலமெலாம் காதல் வாழட்டும் . அவளை படிக்க விடுங்கள்.
நல்ல காதல் கவிதை..... பாராட்டுக்கள்! :-)
@நிலாமதி
//அவளை படிக்க விடுங்கள்.//
பாராட்டுகிறீர்களா , திட்டுகிறீர்களா என்று புரியவில்லையே! ---:-)
@Chitra
நன்றி.ஆனால் என் எதிர்பார்ப்பை ஈடேற்றவில்லை.:-(
இது கவிதையா..? கதையா...?
கதை பாதி ,கவிதை மீதி.
புதுமையை தமிழன் ரசிப்பான் எண்டு நம்பிக்கை.
:-)
பிடித்திருக்கிறது... :-)
நன்றி சேதுபதி.
உங்களைப் போன்றவரின் ஆதரவால் என் தன்னம்பிக்கை வலுவடைகிறது.
template design -> advaced
change font of title, comments and recent posts from arial to some other font pls.... In firefox they re not clear for me..
@sethupathy
i changed to Times New Roman.
check and tell your opinion.
நன்றி... தற்போது படிப்பதற்கு ஏதுவாக உள்ளது.. :-)
காதல் படுத்தும் பாட்டிற்கு அளவே இல்ல ஆபீஸ்ல இருந்து கொண்டே அவளை நீங்க காண துடிப்பது அருமை அதை நீங்கள் விளக்கியவிதம் படு ஜோர் நான் மன்னரா இருந்த 1000 பொற்காசுகள் வழங்கி இருப்பேன்................
@Jeyamaran
மன்னரா இருந்தால் 1000 பொற்காசுகள் என்றால்,இப்போதைய தொழிலுக்கு ஏற்றமாதிரி என்ன பரிசு தந்தாலும்
மறுப்பேதும் சொல்லாது வாங்கிக்கொள்வேன்.
:-))
கருத்திற்கு நன்றி நண்பரே.
Post a Comment