Saturday, June 19, 2010

பக்குவம்...............(ஒருபக்கக்கதை)



அன்று ஒரு வெள்ளிக்கிழமை,புகைவண்டிக்குள் ஏறிய ஜீவனுக்கு சற்று ஏமாற்றம்.வழமைக்கு மாறாக பயணிகள் அதிகம்.ஒரு காலியான ஆசனமும் இல்லை.ஒவ்வொரு பெட்டியாகத் தேடிக்கொண்டு இருந்த போது ஒரு நீண்ட ஆசனத்தில் மூன்று இளைஞர்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.அவர்களைக் கடந்து சென்ற போது “உஷ்ஷ்ஷ்....என்று அழைப்பு.அழைப்பில் மரியாதை இருக்கவில்லை.ஆனாலும் வேண்டா வெறுப்புடன் திரும்பிப் பார்க்க அந்த இளைஞரில் ஒருத்தன் நீங்க விரும்பினால் அட்ஜஸ்ட் பண்ணி உட்காரலாம் என்றான்.இந்த வாய்ப்பை விட்டால் பத்து மணித்தியாலம் நிற்க வேண்டும் அல்லது தரையில் அமரவேண்டும்.உடனே அவன் அருகில் சென்று அமர முயல மற்றைய இருவரும் விருப்பமின்றி  சற்று இடம் கொடுத்தனர்.ஜீவனும் கூச்சமாய் அமர்ந்து கொண்டான்.


அமர்ந்து சற்று நேரத்தில் அவர்கள் சம்பாஷனையில் ஜீவனும் அங்கமாகி விட்டான்.இடம் கொடுத்தவன் திறந்த புத்தகமாக பேச ஆரம்பித்தான்.அவன் பெயர் தனேஷ்.மற்றவர்கள் முகுந்தன்,கண்ணா.மூவரும் வயலில் வேலை செய்யும் வாலிபர்கள்.முகத்தில் தோன்றிய வறுமையும் உரமேறிய உடலும் அதை நிரூபித்தன.
தனேஷின் உறவுக்காரர் ஒருத்தர் துபாயில் வேலை செய்து விட்டு விடுமுறைக்கு ஊர்வந்து இருக்கிறார்.அவருடைய ஆலோசனையின் பெயரில் அங்கு சென்றால்  நன்றாக உழைக்கமுடியும் என்ற கனவில் இவர்கள் துபாய் போவதற்காக கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
தனேஷிடம் பேசும் போது அவன் சொன்ன தகவல்கள் வியப்பை ஏற்படுத்தின ஜீவனுக்கு.அவனுக்கு வயது 21,ஒரு குழந்தை வேறு.ஓடிப்போய் திருமணம் செய்ததாகச் சொன்னான்.கையில் ஒரு சீனா போன் வைத்திருந்தான்.பார்க்கத் தரும்படி கேட்டான் ஜீவன்.அதில் அவனது குழந்தையின் படம் இருக்கும் என்று தேடிய ஜீவனுக்கு திரிஷாவையும்  நயன்தாராவையுமே பார்க்கக் கிடைத்தது.மனைவி பிள்ளையின் படம் ஒன்றும் போடவில்லையா?,போட்டு இருந்தா ஊர்ல இல்லாட்டியும் முகத்தையாவது பார்த்துக்கொள்ளலாமே “ என்றான் ஜீவன்.அவன் அப்பாவியாக சிரித்தான்.அவனது வறிய முகமும் அப்பாவிப் பேசும் அவனைப் பற்றி மேலும் அறிய ஆவல் தூண்டியது ஜீவனுக்கு.
“வெளிநாட்டுப் பயணத்திற்கு பணத்திற்கு என்ன செய்தாய் என்றான்?”.10% வட்டிக்கு பணம் வாங்கினேன் என்றான் அவன் சர்வசாதாரணமாக.ஜீவனுகோகோ உடம்பு பதறியது.குடும்பத்தை விட்டு வட்டிக்கு பணம் வாங்கி வெளிநாடு போகவேண்டிய அவசியம்தான் என்ன ? என்றான்.நான் யுத்தத்தில இடம் பெயரும் போதே படிப்ப விட்டுவிட்டன்.எண்ட படிப்புக்கு நான் செய்யக்கூடியது அறுவடை வேலையும்  கூலி வேலையும் தான்.இரண்டும் நிரந்தரம் இல்லை.இந்தப் பூமியில ஆயுள் பூராக உழைத்தாலும் எண்ட நிலைமை மாறது.அதைவிட கடனைப் பட்டாவது வெளிநாடு போய் வந்தா காசும் சேரும் கௌரவமும் கிடைக்கும் என்றான் தனேஷ்.

திடீர் என்று நிமிர்ந்து பார்த்துச்சிரித்தவன் எனக்கு ஒரு இலட்சியம் இருக்கு என்றான்.ஜீவனும் ஆவலாக என்ன என்ன என்றான்.ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி ஓடணும்,அதோட மூன்று வேளைச் சாப்பாடு இருந்தா அதுபோதும்  என்றான்.ஜீவனுக்கு கோவம் தான் வந்தது.உன்னைப்பற்றி மட்டும் தான் யோசிப்பாயா?குடும்பம் பற்றி கவலையே இல்லையா என்றான்.ஜீவனை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு எண்ட ஆசைக்குத்தானே முன்னுருமை என்றான்.21 வயதில் குடும்பஸ்தன் ஆகிவிட்டால் இப்படிதான் ,காலம் பாடம் கற்பிக்கும் என்றான் ஜீவன் சூடாக.அதற்கும் அவன் வெகுளியாய் சிரித்துக்கொண்டு இருந்தான்.

11 comments:

Chitra said...

.21 வயதில் குடும்பஸ்தன் ஆகிவிட்டால் இப்படிதான் ,காலம் பாடம் கற்பிக்கும் என்றான் ஜீவன் சூடாக.அதற்கும் அவன் வெகுளியாய் சிரித்துக்கொண்டு இருந்தான்.


...... வித்தியாசமான கதை. நல்லா இருக்குங்க. படங்களும் நல்லா இருக்குதுங்க.

எல் கே said...

//21 வயதில் குடும்பஸ்தன் ஆகிவிட்டால் இப்படிதான் ,காலம் பாடம் கற்பிக்கும் என்றான் //

sarithan...

movithan said...

கருத்திற்கு நன்றி சித்ரா & LK.

தங்க முகுந்தன் said...

அது சரி உந்த ரெயின் எங்க ஓடுது?

movithan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தங்க முகுந்தன்.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது..உண்மை தான் சிறிய வயதில் கல்யாணம் செய்துகிட்டு தந்தையான பிறகும் சிலருக்கு புத்தி வருததில்லை...என்ன செய்ய சில மனதிரகள் இப்படியும் இருக்கின்றாங்க....

movithan said...

@GEETHA ACHAL
என் கருத்து முறையாக மற்றவரைச் சென்றடைந்ததுக்கு சந்தோசம்.

கருத்திற்கு நன்றி.

துளசி கோபால் said...

35 வயசில் கல்யாணம் செஞ்சுக்கிட்டா மட்டும் பக்குவம் வந்துருதா என்ன?

சிலர் இப்படித்தான்.

கதை நல்லா இருக்கு மால்குடி

movithan said...

@துளசி கோபால் கருத்திற்கு நன்றி.

சிலர் சாகும் மட்டும் பக்குவம் அடைவதில்லை என்பது உண்மையே.அதற்கு அவர்களது இறுமாப்பும் காரணம்.

எனது கதையின் கரு ஓடிப்போய் பண்ணும் இளம் வயதுத் திருமணத்திற்கு எதிரானது.

VELU.G said...

கதை நல்லாயிருக்குங்க

movithan said...

@VELU.G நன்றி.

Post a Comment