பாடசாலை விட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்த வாசுகி டீச்சருக்க்கு ஓங்கி வீசிய கச்சான் காற்றும் அதன் வெக்கையும் அவஸ்தையாய் இருந்தன.வழமையாக பஸ்ஸில் வரும் டீச்சர் சற்று தாமதித்ததால் பஸ்ஸை தவற விட்டு விட்டார்.ஆட்டோவில் வந்து இருக்கலாம்,ஆனால் அவர் இயன்றளவு பணத்தை வீண்செலவு பண்ணமாட்டார்.
வீட்டுப் படலையைத் தொட்ட போதுதான் டீச்சர்ருக்கு நிம்மதிப் பெருமூச்சி வந்தது.மகன் இன்னும் வீடு வர வில்லையென படலையே பதில் சொன்னது.மகன் திவா படலை மூடி வந்ததாக சரித்திரம் இல்லை.
தான் வரவே தாமதம்,ஏன் திவா வரவில்லை என மனம் மீண்டும் பதறத்தொடங்கியது.உள்ளே போய் வாளிக்குள்ள இருந்த தண்ணீரைக் குடித்து வறண்ட தொண்டையை குளிர்வித்துக்கொண்டு சேலை மாற்ற அறைக்குள் நுழைய “டீச்சர் ! ” என்ற கம்மிய குரல் மீண்டும் படலைக்கு அழைத்தது.
வந்து பார்த்த போது தன்னிடம் படிக்கும் 7ம் வகுப்பு மாணவன் ராகுலன் தலை குனிந்து கொண்டு நின்றான்.”என்னப்பா ? “என்றார்.அவன் வார்த்தை வராமல் திணறிக்கொண்டிருந்தான்.நீண்ட போராட்டத்தின் பின் “டீச்சர் உங்கட மகனை சந்திக் கடையில பிடிச்சு வச்சிருக்காங்க.கொஞ்சம் வாங்க “ என்றான்.டீச்சருக்கு ஏன் ,எதற்கு ,யார் என்றெல்லாம் கேள்வி கேட்கத் தோணவில்லை.காலிலே செருப்பும் போடாமல் அந்தப் பையனைப் பின்தொடர்ந்தார்.
கடை வாசலை அடையும் போது அதைச் சூழ்ந்து சிறிய கூட்டம்.பல நீதிபதிகள் தான் தோன்றித்தனமாக அறிக்கை விட்டுக்கொண்டுருக்கிறார்கள்.திவாகரோ கண் கலங்கி கை கட்டிக்கொண்டு கொண்டு நிற்கிறான்.அவனோடு சேர்ந்து மொத்தம் 3 பசங்க.அனைவரும் 10 வகுப்பு.டீச்சரைக் கண்ட போது “இவன் உங்க பையனா? “என்று அதட்டிய அந்த கடை முதலாளி திவாவின் தோளைப் பிடித்து தள்ளினான்.அவன் அப்பா இறந்ததில் இருந்து அவனை நோக்கி கையோங்கி இருக்காத வாசுகிக்கு அதைப் பார்க்க கண் கலங்கியது.”ஆமா ....”என்று குற்றவாளி போல தலையாட்டினாள்.இவனுகள் என்ன பண்ணாங்க தெரியுமா ?எண்டு மீண்டும் உறுமினான்.வாசுகி மிரண்ட கண்களால் அவனைப் பார்த்தாள்.”நான் இருக்கும் போதே திருடுப்பசங்க களவு எடுக்கிறாங்க.அப்படியே போலீசில ஒப்படைச்சு இருப்பன்.பள்ளி உடுப்பு வேறு.எல்லாம் இதுகள பெத்ததுகள சொல்லணும்.ஒழுங்கா வழத்தா ஏன் இப்படி அலையுதுகள்” என்று அத்தனை பேர் முன்னாள் வாசுகியை அசிங்கப்படுத்தி சுற்றி நிற்பவர்கள் முன்னாள் தன் வீரத்தை காட்டினான்.
திவாவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.தன்னை வளர்க்க தன் தாய் பட்டபாட்டிற்கு நான் இப்படியா கௌரவம் சேர்த்துக்கொடுக்க வேண்டும்.அவனது மனசாட்சி அவனைக் கேள்வி கேட்டது.
அப்பொழுது கூட்டத்தில் இருந்த சில பெண்களின் குரல் தெளிவாகக் கேட்டது வாசுகிக்கு.”இந்த டீச்சர் எல்லாம் படிப்பிச்சா ,நல்லா உருப்படும் பள்ளி............”.
இதற்கு மேலும் சொல்லம்பு தாங்கும் சக்தி வாசுகிக்கு இருக்க வில்லை. ”ஐயா ! இந்த ஒருதடவை மட்டும் மன்னியுங்க.இனி மேல் இப்படி ஒரு தவறு நடைபெறாது.இவங்க எதை எடுதான்களோ சொல்லுங்க? ,நான் பணத்த கொடுத்திறன்.நடந்த சம்பவத்துக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறன்.ஒரு பெண்ணா என்னுடைய நிலைய கொஞ்சம் நினைத்துப் பாருங்க எண்டு தன் வாழ்வில் முதல் முதலாக தன் பிள்ளைக்காக கையேந்திக்கொண்டு நின்றாள்.
சற்று யோசிச்ச முதலாளி உங்க பையனை மட்டும் கூட்டிப்போங்க.மற்றவங்களுக்கு அதுகளப்பெற்றது வரட்டும் என்றான்.அதற்கு வாசுகி டீச்சர் “இல்லை ஐயா,மற்றவர்களும் எண்ட பள்ளியில் படிக்கிறவங்க தான்.அவங்களுக்கும் நான்தான் பொறுப்பு “, என்றாள் மெதுவாக.இனி என்ன நடந்தாலும் நீங்கதான் பதில் சொல்லவேண்டும் என்றவாறு மூவரையும் போக அனுமதிதான் முதலாளி.அப்பொழுது திவாவின் நண்பன் தன் கையில் இருந்த “மிக்ஸர்”ஐ மெதுவாக கதிரையில் வைத்தான்.
யாரிடமும் எதுவும் பேசாமல் டீச்சர் முன்னாள் நடக்க நான்கு பேர் அவரை நோக்கி நடந்தனர்.அப்பொழுது டீச்சரை அழைத்து வந்த ராகுலன் “டீச்சர் நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க.உங்களைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும்.உங்கட வயிற்றில பிறந்த மகன் கண்டிப்பாகத் திருடமாட்டான்.”என்று சொல்ல டீச்சர் கண்ணால் வடிந்த கண்ணீரோடு மற்றைய மூவரையும் பார்த்தார்.
மூவரும் வீதியிலே டீச்சரின் காலில் விழுந்து “அம்மா இனி வாழ்கையில எப்பவுமே களவு எடுக்க மாட்டம்,இது சத்தியம் என்றனர்”.
அப்பொழுது வாசுகிக்கு தன் பிள்ளையோடு சேர்த்து மூவருக்கு நல்வழிப் படுத்திய திருப்தி நெஞ்சில் ஒட்டிக்கொண்டது.
8 comments:
நல்ல கருத்துள்ள கதை!
@Software Engineer கருத்திற்கு நன்றி.
அப்பொழுது வாசுகிக்கு தன் பிள்ளையோடு சேர்த்து மூவருக்கு நல்வழிப் படுத்திய திருப்தி நெஞ்சில் ஒட்டிக்கொண்டது.
.... very nice story! :-)
@Chitra
கருத்திற்கு நன்றி.
/இந்த டீச்சர் எல்லாம் படிப்பிச்சா ,நல்லா உருப்படும் பள்ளி............”./
இந்த வார்த்தைகள் தாங்க முடியாத வருத்தம் கொடுக்கும் ஒரு டீச்சருக்கு.
உங்கள் அக்கறைக்கு நன்றி!! Word verification ஐ நீக்கி விட்டேன்.. :)
@அன்புடன் அருணா
ஒருவருடைய உள்ளாந்த மனநிலையை மற்றவர்கள் உணர்வதில்லை,என்பதை வெளிப்படுத்தவே அந்த வசனத்தைப் பாவித்தேன்.
கருத்திற்கு நன்றி.
@ஜீ...OK.
Post a Comment