Tuesday, June 8, 2010

R.K. நாராயணன்.......(வாழ்கை வரலாறு)



பிறந்து          : ஐப்பசி 10, 1906 சென்னை (madras)
தொழில்        : கதாசிரியர் ,நாவல் எழுத்தாளர்
வரையறை  :புனைக்கதை









 ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் நாராயணசுவாமி அவர்கள் தலைசிறந்த ஆங்கில மொழிப் புனைக்கதை எழுத்தாளர்.இவரது கதைகள் மல்குடி என்ற கற்பனை நகரத்தை மையமாகக் கொண்டது.ஆனால் அவரது கதையை வாசித்தவர்களோ அல்லது அவரது கதையை திரைக்கதையாகப் பார்த்தவர்களோ அந்த மல்குடி நகரை நிஜமேனவே உணர்வார்கள்.அந்த அளவிற்கு மனதைஒன்றிச்செய்துவிடும்.(எனது வலைப்பூ ப் பெயரை malgudi என்று வைக்கவும் இதுவே காரணம்.)


இவரை William Faulkner அவர்களுடம் ஒப்பிடுவதற்க்கான காரணம் இருவரும் மனித நேயம் மற்றும் உருக்கமுள்ள மனித உணர்வுகளை வைத்து கதை புனைந்தமையே ஆகும்.




சிறுபிராயம்

இவரது தந்தை ஒரு பாடசாலை தலைமை  ஆசிரியர்.அதனால் அவர் கடமை நிமித்தம் அடிக்கடி இடம் மாறவேண்டி இருந்தது.ஆகையால் இவர் தனது சிறுபராயத்தை தனது பாட்டியுடம் கழித்தார்.அப்பொழுது அவரது நண்பர்கள் மயிலும் குரங்கும் ஆகும்.தமிழில் கற்றுக்கொண்டிருந்த இவரை திடீர் என்று ஆங்கில மொழிப்பாடசாலைக்கு மாற்றிய போது அது அவருக்கு மிகவும் குழப்பம் ஏற்ப்படுத்துவதாக இருந்தது.எனினும் அவரது ஈடுபாட்டுடனான வாசிப்பு முறையும் அந்தச் சூழலும் இலகுவில் அவரை ஆங்கிலத்தில் தேர்ச்சி அடையச்செய்தது. 


இவரது தந்தை மைசூர் Maharajah's Collegiate High School இக்கு இடம் மாறிய போதும் இவரும்  அங்கு மாற்றலானார்.ஆரம்பத்தில் பல்கலைகழக நுழைவில் சித்திபேறத் தவறிய இவர் மீண்டும் முயன்று தெரிவானார்.பட்டப்பிடிப்பின் பின் ஆசிரியராக பொறுப்பேற்ற இவருக்கு அது போதியளவு திருப்தி அளிக்காததால் ,வேலையில் இருந்து விடைபெற்று முழு நேரமாக நாவல் எழுத்ததொடங்கினார்.




திருப்பு முனை

1933 ல் ராஜம் என்ற 15 வயதுப் பெண்ணின் மீது காதல் வயப்பட்ட நாராயணன் சாத்திர சம்பிரதாயத்தை மீறி அவரைக் கரம்பற்றினார்.அதன் பின் The Justice பத்திரிகையின் நிருபராக பணி ஏற்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார்.பின் Oxfordல் உள்ள நண்பனுக்கு Swami and Friends to Graham Greene("சுவாமியும் அவனது நண்பர்களும்") என்ற ஆங்கில நாவலின் கையெழுத்துப் பிரதியை அனுப்பினார்.அந்த நாவலானது 1935 ல் வெளியிடப்பட்டது.



அதன் பின் நாராயணன் ஆங்கில வாசகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் ஆனார்.தொடர்ந்து தனது கல்லூரி அனுபவத்தை மையமாகக்கொண்டு The Bachelor of Arts (published in 1937)என்ற நாவலை எழுதினார்.
மூன்றாவது நாவலாக The Dark Room (published in 1938)ஐ எழுதினார்.இது கணவன் மனைவியின் உயிர் ஊடமுள்ள உணர்வை கதைக்களமாகக் கொண்டிருந்தது.




சோதனை

1937 ல் தந்தை மரணத்தால் மனம் சோர்ந்திருந்த இவருக்கு 1939 ல் தைபோய்ட்(typhoid)ஆல் மனைவி இறந்தது பேரிடியாக இருந்தது.மூன்று வயது மகள் கேமலதாவுடன் தனித்து நின்றார்.
அந்த நிர்கதியான சூழ்நிலையில் பொருளாதாரத்தைக்கருதி The English Teacher என்ற நாவலைஎழுதினார்.

பின் 1940 ல் ஊடகத்துறை நோக்கி நகர்ந்தார்.கார்த்திகை 1942 ல் Malgudi Days சிறுகதைத்தொகுப்பு வெளிவிடப்பட்டது.இங்கிலாந்து உடனான உறவு முறிவுற்ற நிலையில் சொந்தமாக Indian Thought Publications என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார்.இன்றும் அவரது பேத்தியால் நிர்வகிக்கப்படுகிறது.




இறுதிக்காலம்


மைசூரில்  தனியாக வாழ்ந்த அவர் தோட்டம் செய்வதில் ஆர்வம காட்டினார்.நோய்வாய்ப்பட்டதால்1990 சென்னை வந்த அவர் , May 13, 2001 ல் தனது 94 வது வயதில் உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.




Awards

1. National Prize of the Sahitya Akademi -1960
2. Padma Bhushan -service to literature in 1964 
3. the AC Benson Medal by the Royal Society of Literature -1980
4. honorary member of the American Academy and Institute of Arts and Letters -1982
5. the University of Mysore, Delhi University and the University of Leeds ஆகியபல்கலைக்கழகங்கள்டாக்டர் பட்டம் வழங்கின.
6. Padma Vibhushan -2000. 

நூல்கள்

Bibliography

Novels

* Swami and Friends (1935, Hamilton)
* The Bachelor of Arts (1937, Nelson)
* The Dark Room (1938, Eyre)
* The English Teacher (1945, Eyre)
* Mr. Sampath (1948, Eyre)
* The Financial Expert (1952, Methuen)
* Waiting for the Mahatma (1955, Methuen)
* The Guide (1958, Methuen)
* The Man-Eater of Malgudi (1962, Heinemann)
* The Vendor of Sweets (1967, Bodley Head)
* The Painter of Signs (1977, Heinemann)
* A Tiger for Malgudi (1983, Heinemann)
* Talkative Man (1986, Heinemann)
* The World of Nagaraj (1990, Heinemann)

Collections

* The World of Malgudi (2000)
* Salt and Sawdust: Stories and Table-Talk
* Malgudi Days (1942))
* Dodu and Other Stories (1943)
* Cyclone and Other Stories (1945)
* An Astrologer's Day and Other Short Stories (1947)
* Lawley Road and Other Stories (1956)
* A Horse and Two Goats (1970)
* Forty-Five a Month
* Under the Banyan Tree and Other Stories (1985)
* The Grandmother's Tale and Selected Stories (1993)
* The Watchman
* Fruition at Forty
* Indian Thought (1941)
* The Missing Mail
* The Martyr's Corner

Non-Fiction

* Next Sunday (1960)
* My Dateless Diary (1964)
* My Days (1974)
* The Emerald Route (1980)
* A Writer's Nightmare (1988)
* Like The Sun

Mythology

* Gods, Demons and Others (1965)
* The Ramayana (1972)
* The Mahabharata (1972)
தொலைக்காட்சித் தொடர்  

R.K. நாராயணனின் கதையை Shankar Nag அவர்கள்  இயக்கிய Malgudi Days தொலைக்காட்சித்தொடர் உலக்க்ப்பிரசிதம்.இந்த தொடர் கர்நாடக அகும்பே என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது.இன்றும் இத்தொடர் பல்வேறு மொழிகளுக்கு மாற்றப்பட்டு உலகம் பூராக ஒளிபரப்பப்படுகிறது. 


 


(பின் குறிப்பு : Shankar Nagன் தமிழ் மொழி மூலத்தொடரை தரவிறக்க முயன்ற போதும்(via torrent) ஹிந்தி மற்றும் ஆங்கில பாதிப்புகளே காணப்படுகின்றன.தமிழ் தொடர் இணையத்தில் இருந்தால் தயவு செய்து அறியத்தரவும்.)
 

5 comments:

Chitra said...

Thank you for the info. "Malgudi Days" - one of the best. :-)

சௌந்தர் said...

நல்ல தகவல் நல்ல பதிவு...

movithan said...

கருத்திற்கு நன்றி சித்ரா மற்றும் சௌந்தர்.

Robin said...

மறக்கமுடியாத எழுத்தாளர் R.K. நாராயணன்.
//அவரது கதையை வாசித்தவர்களோ அல்லது அவரது கதையை திரைக்கதையாகப் பார்த்தவர்களோ அந்த மல்குடி நகரை நிஜமேனவே உணர்வார்கள்.// உண்மை.

movithan said...

@Robin
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Post a Comment