Friday, September 10, 2010

இரண்டு காலும் இல்லாமல் ஒரு கையைக் கொண்டு நீந்தும் சிறுவன்

சந்தோசம் உடம்பில இல்ல உள்ளத்திலதான் இருக்கு என்பதற்கு இந்தச் சிறுவனின் வெள்ளைப் புன்னகையே ஒரு எடுத்துக்காட்டு.இந்த நம்பமுடியாத திறமைசாலி பிறந்தது அலபாமாவில்(Alabama).பெயர் Gabe Marsh.பிறவியிலே
 ஊனமுள்ளவன்.அவனை ஊனமுள்ளவன் என்று சொல்ல எனக்குள் ஏதோ தடுக்கிறது.ஏனெனில் எம்மில் பலர் மனதாலே ஊனமுள்ளவர்கள்.இல்லாமல் இருப்பது ஊனமென்றால் இருப்பதை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பதும் ஊனமே.

இந்த  ஆறு வயதுச் சிறுவனுக்கு இரண்டு காலும் இல்லை,ஒரு கையும் இல்லை.ஆனால் தன்னம்பிக்கை நிறையவே உண்டு.இவனது அதிஷ்டம் மார்ஷ் தம்பதியினர் இவனைத் தத்தெடுத்தது.இவர்கள் மொத்தம் 60 சிறார்களைப் பராமரிக்கிறார்கள்.(இதுதானே மனிதநேயம் ?)

ஆரம்பத்திலே இவனால் நீந்த முடியுமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது.ஆனால் அவனது விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் அவர்களது சந்தேகத்தை சந்தோசமாக மாற்றிவிட்டது.

படங்கள் கீழே.















11 comments:

pichaikaaran said...

nice post.. whwre there is will there is way

movithan said...

@பார்வையாளன்
thanx.

Chitra said...

Super!
He is inspiring so many people. May God bless him.

movithan said...

@Chitra
மேடம்,உங்கள் கருத்துகளுக்கு மிகவும் மதிப்பளிக்கிறேன்.ஆனால் இங்கு முரண்படுகிறேன்.கடவுள்தான் இவனைப் படைத்திருந்தால்,இப்படி இவனைப் படைத்தவர் எப்படி இவனை ஆசீர்வதிக்க முடியும்.

இவன் கடவுளை நம்பி இருந்தால் ஏதோ ஒரு கோவில் வாசலில் பிச்சைதான் எடுத்திருப்பான்.அவன் தன்னை நம்பியதாலே சாதித்துள்ளான்.இதுவே நிஜம்.

க. தங்கமணி பிரபு said...

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! அதன் முக்கிய காரணம் கடவுள்தன்மைகள் என்று சொல்ல்ப்படும் குணங்களோடு பல மணிதர்கள் எனக்கு நண்பர்களாகவும் ஆசிரியர்களாகவும் வாய்த்திருப்பதுமே.

கடவுள் குணங்கள் என்பதைத் தாண்டி அதீத சக்தி, தன்னம்பிக்கை, செயல், ஆற்றல் என்பதில் புராண்ங்களில் கடவுள்களின் விஸ்வரூபம் என்பதற்க்கொப்பான சக்தியை பல சமயங்களில் குழந்தைகள் வெளிக்காட்டுவதை கூர்ந்து பார்க்கும் எல்லோருக்கும் புரியும். குழந்தைகள் கடவுள் ரூபம்! அவற்றை அழகுபடுத்தி அழகுபடுத்தி ஷோகேஸ் பொம்மையாகவோ அல்லது சரியாக கவணிக்காது புதைந்து கிடந்தால் தொல்பொருளாகவோ கடவுளும் ப்யன்ற்று போகும்! அதேசமயம் ப்ரதிஷ்டை செய்து, அன்றாடம் சரியாக கவணித்து பாதுகாத்தால் குழந்தையிடமிருந்து கடவுள்தன்மையை உணரலாம்! அதன் ஆற்றலும் புரியும்! இந்த குழந்தையும் அப்படி ஒரு ப்ரதிஷ்டை செய்யப்பட்ட அவதாரமே! ஆத்தாடி.... அந்த கண்ல இருக்கற ஒளிய பாருங்களே, கள்ளமில்லை, அவநம்பிக்கை துளியுமில்லை, ஓஷோ சொல்வது மாதிரி செயலே தான் என்பதாக செய்யும் செய்லில் இரண்டறக்கலந்து பெறும் இன்பத்தில் ஊறும் ஆனந்தச்சிரிப்பில்.... அடடா.... இறைவனைத் தேடி செல்லும் இடம் எது என்பதற்க்கு பொருள் சொல்கிறதே!!

movithan said...

@க. தங்கமணி பிரபு

ஆழமான கருத்திற்கு மிக்க நன்றி சார்.

கார்த்தி said...

தகவலுக்கு நன்றிகள்

movithan said...

@கார்த்தி
வருகைக்கு நன்றி.

NARATH said...

will power works more. He is an abled child.

movithan said...

@NARATH
thanks for your comment.

Unknown said...

@Madhavan Srinivasagopalan
மிக்க நன்றி நண்பா.

Post a Comment