கல்லூரி கல் பெஞ்சில் குணா
கருமை நீங்கிய செம்பட்டை முடி காற்றில் ஆடின
காலை குளிர் திறந்த பொத்தான் ஊடே ஊடுருவ
உணர்ச்சி காட்டாத நிலையில்
சிரைக்காத தாடி பனஞ் சிராம்பு போன்று ஆங்காங்கே
பகலிலே நட்சத்திரம் தேடின பார்வை
கால்சட்டை பாக்கட்டில் சுருட்டிய தாள்கள்
நீண்டநாளாய் உறங்கிக்கொண்டிருந்தன
சேட் பாக்கட்டில் மட்டும்
சிகரட் சிங்களாய் நிமிர்ந்து நின்றது
தனது B.com 2 ம் ஆண்டு வகுப்பறைப் பாதை
மறந்த நிலையிலே அவன்
உசுப்பேத்தி விட்ட நண்பர்கள்
உஷா மேடம் பாடம் கேட்பார்கள்
நான் மட்டும் ஏன் இப்படி ?
கண்களை மூடி விடைதேட
அழகான புன்னகையுடன் திவ்யா முன்னே
அவள் கண்கள் பார்த்தவுடன்
இதயம் பூரா நிரம்பிய காதல்
இடமின்றி கண்களால் வழிந்தது
ஆரவாரம் கேட்டு கண்ணைத் திறந்தான்
பாடம் முடிந்து வெளிவந்தது அவனது பட்டாளம்
அவனைப் பார்த்தவுடன் தலையில் அடித்துக்கொண்டான் சூரி
திருந்த மாட்டாண்டா எண்டு ஆசீர்வதித்துக் கொண்டே
நகர்ந்தது கூட்டம் அடுத்த கல் பெஞ்சை நோக்கி.
மெலிய குரலில் பெச்சுச்சத்தம்
மின்னலின் பின் இடி போல கேட்டது
ஒட்டுமொத்தச் சிரிப்புச்சத்தம்.
குணா என்று கூப்பிட்டான் ஒருத்தன்
பாய்ந்து வாயைப்பொத்தினான் மற்றவன்
சொரணை கெட்ட மனசிலும் முள் குத்தி
குருதி தெரிந்தது கண்ணீராய்.
பார்வையைத் திருப்பினான் மறுபக்கம்
கறுத்த சுடிதாருக்குள் ஒரு மல்லிகைமொட்டு
அவளும் பார்த்துவிட்டாள் என்பது புரிந்தது,
அவள் ஓட எத்தனிப்பதில் இருந்து
ஓடிச்சென்று கைநீட்டி மறித்தான்
தயவுசெய்து ஒரு நிமிஷம் திவ்யா என்றான்
கூட இருந்த அல்லக்கைகள் திவ்யா வாடி என்றவாறே திரும்பாமல் ஓடின
குணா ப்ளீஸ் என்னப் போகவிடு என்றாள் கெஞ்சும் குரலில்
ஏண்டி என்னைப் புரிஞ்சிக்க மாட்டன் என்கிறா?
நீ இல்லாட்டி செத்திருவன்டி என்றான் அவள் பாதம் பார்த்தே
அதான் சொன்னனே உன்ன எனக்கு பிடிக்கல எண்டு,
அதான் ஏன் என்கிறன் எண்டு உறுமியே ஓரடி முன் வைத்தான்.
பின் நோக்கிச் சென்றவள் கால் தடுக்க
எட்டிப் பிடித்தான் ,ச்சீ ... உதறினாள்
உன்னோடு நான் குடும்பம் நடத்துவது உனக்குத் தெரியுமா?
என்றான்,இடுக்கிப் பிடித்தாள் பற்களை
ஒரு பொண்ணு ஒரு பையன்டி நமக்கு
பொண்ணு அச்சு அசல் உன்னைப்போலவே
பையன் நம்ம சாயல்,என்று தலையை அசைத்தான்
வாயைக் கோணலாகிக் கொண்டே திரும்பினால் மறுபக்கம்
நம்ம வீடு கூட ஆத்தங்கரை ஓரம்
முடிக்க முன்னே “ஏய் மிஸ்டர் ...............
அவள் வார்த்தைக்காய் உதட்டசைவு நோக்கினான்
“உன் அப்பா என்ன பண்றாரு? என்றாள் அதிகாரமாய்
முடி வெட்டுறாரு என்றான் தயங்காமல்
நக்கலாய்ச் சிரித்தாள் கொடுப்புக்குள்
எங்கப்பா என்ன பண்றாரு தெரியுமா? என்றாள்
அது யாருக்குத்தேவை என்றான் அவன்
சரிவராது விட்ரு என்றாள் கைகூப்பியே
அப்ப எங்க அப்பாட தொழில் தெரியாமல் தான் பழகினியோ,
என்றான் ஆதங்கமாய்.
அதத்தான் நீ என்னட மறைச்சிட்டியே என்றாள் வெறுப்பாய்.
அவனது கண்ணீர் கழுத்துக் குழியில் தேங்கிட்டு
கம்மிய குரலில் சொன்னான் உனக்காக நான் அழும் கடைசி நாள்
எனக்காக நீ அழும் நாள் வந்தா சொல்லு
உன் கண்ணீரை நான் தாங்குவன் என்றவன்
தீ மூட்டிய சிதையை திரும்பிப் பாராமல் நடந்தான்.
5 comments:
Emotional one!!!
ரொம்ப உணர்சிபூர்வமாவும் கவிதை தனமாகவும் நல்லா இருக்கு...
@Chitra
thanks a lot
@வெறும்பய
ரொம்ப நன்றி சார்.
உனக்காக நான் அழும் கடைசி நாள்
எனக்காக நீ அழும் நாள் வந்தா சொல்லு
உன் கண்ணீரை நான் தாங்குவன்
very nice
Post a Comment