Saturday, January 28, 2012

இங்கே தமிழனை விட மலையாளி பல படி மேல்


சில புகைப்படங்களைப் பார்க்கும் போது எம்மையறியாமல் மனதிற்குள் சந்தோசம் பொங்கும்.அதே போல் சில படங்களைப் பார்க்கும் போது வெறுப்பும் கோவமும் ஒருங்கே ஏற்படும்.இந்தப் படத்தைப் பார்த்த மானமுள்ள தமிழனுக்கு மேலே சொன்னதில் எந்த உணர்வு ஏற்ப்படிருக்கும் என்று நான் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமில்லை.



எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால்,அந்த அம்மாவின் காலில் இப்படி பகிரங்கமாக சாஷ்டாங்கமாக விழுந்து சில்லறை பொறுக்கி  விட்டு,தன் மனைவி,பிள்ளைகள் முன் மீசையை முறுக்கிக்கொண்டு எப்படித் திரியமுடிகின்றது என்பதுதான்.

ஏதோ நான் பெண் ஆதிக்கவாதி என்று முத்திரை குதிவிடாதீர்கள்.இதே போல் ஓர் ஆண் அரசியல்வாதி காலில் விழுந்திருந்தாலும்,இதே உணர்வே ஏற்ப்பட்டிருக்கும்.

பெற்ற தாய்,தந்தை காலில் விழுந்து வணங்கத்தயங்கும் நமது சமுதாயம்,இப்படியான அரசியல் வாதிகளின் காலில் விழுவதுதான் வேதனையாக உள்ளது.காலப் போக்கில் இதுவும் அரசியல் கலாச்சாரமாகிவிடும்.ஆனால் காமராசர் போன்ற அவதாரபுருசன் என்றால் வேறு கதை.

அந்த அம்மாவும் தன் கறைபடியாத கரத்தால்,எப்படி ஆசீர்வதிக்கின்றார்...................அன்னை தெரேசா கூட இப்படி போஸ் கொடுத்து நான் பார்த்ததில்லை. எல்லாம் காலத்தின் கொடுமை!!!!!

அருகில் உள்ள படம்,கேரளா முதலமைச்சருடையது.
கற்றுக் கொள்ளுங்கள் மலையாளிகளிடம் இருந்து,இத்தகைய நற்ப்பண்புகளை..........................

ஏதோ நான் மலையாளி மக்களை உயர்த்தியும்,தமிழனை கேவலப்படுத்தியும் விட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமையே.

--எப்படியோ,இந்தப் படத்தைப் பார்த்ததால் எனக்கு ஏற்ப்பட்டவயிற்றெரிச்சலில் ஒரு பகுதியை இங்கே கொட்டித் தீர்த்துவிட்டேன்.--

8 comments:

rajamelaiyur said...

//எப்படியோ,இந்தப் படத்தைப் பார்த்ததால் எனக்கு ஏற்ப்பட்டவயிற்றெரிச்சலில் ஒரு பகுதியை இங்கே கொட்டித் தீர்த்துவிட்டேன்.--
//
same blood

rajamelaiyur said...

/இங்கே தமிழனை விட மலையாளி பல படி மேல்//

தலைப்பு ஒரு மாதிரியாக உள்ளது .. இது ஏன் கருத்து தவறு எனில் மன்னிக்கவும்

Unknown said...

@"என் ராஜபாட்டை"- ராஜா


வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
என் இனத்தைக் குறைசொல்ல எனக்கு மட்டும் இஷ்டமா???
அதற்காக நம்மவர் செய்யும் அறியாமையை பார்த்துக்கொண்டு,கடந்து செல்லவும் இஷ்டமில்லை. தவறு செய்யும் பெரும்பாலானோருக்கு தாம் செய்வது தவறு என்று புரிவதில்லை .அவர்கள் அதிகாரம், செல்வாக்குக் கருத்தில் கொண்டு அதை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை.
உண்மைகள் பல நேரங்களில் கசப்பானவை,ஆனால் அவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

எம்மை எதிர்ப்பவர்களிடம் இருந்தும் நல்ல விடயங்களைக் கற்றுக் கொள்வோம்,அப்பொழுதுதான் நாம் அவர்களை விட மேலாக இருக்க முடியும்.

Anonymous said...

காலில் விழுந்து பொறுக்குவது
சில்லரை"..
மட்டுமல்ல.
இன மானம்.
இவை எல்லாம்
அவர்களின்
வருமானத்திற்கே..

சூடு சொரனை கொஞ்சமும் இல்லை..
இவனா தமிழனின் பிள்ளை.. என்ற வரிகளே என் நினைவில்..

என் தமிழ் சாதி
விரைவில்..
எழும்.
அப்போது
வளைந்த முதுகுகள் நிமிர்தப்படும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா ! சாதாரணமப்பா !

Unknown said...

@என் தங்கமே...
//இவனா தமிழனின் பிள்ளை.. என்ற வரிகளே என் நினைவில்..//
அருமையான கருத்து.
//என் தமிழ் சாதி
விரைவில்..
எழும்.
அப்போது
வளைந்த முதுகுகள் நிமிர்தப்படும்.//
அப்படி ஒரு பொன்நாளை எதிர்பார்த்துக் காத்திருகின்றேன்.

நன்றி நண்பரே....

Unknown said...

@திண்டுக்கல் தனபாலன்
நகைச்சுவையாகப் பார்க்கும் போது ஓகே.
ஆனால் இனஉணர்வோடு நோக்கும் போது வேதனையாக உள்ளது.
தமிழன் எப்படித் தன்மானம் இழக்க முடியும்????

KANTHANAAR said...

1950 களில் இடது சாரி அரசியலை தமிழகம் வைவிட்டு திராவிட அரசியலை ஏற்றதிலிருந்து தற்போது வந்த நிலைதான் அந்தப் புகைப்படம்

Post a Comment