(அப்படி என்ன கறுமத்தை எழுதித்துலைத்திருப்பான்,மன்னிப்பு என்று பெரிய வார்த்தை எல்லாம் கேட்கின்றான் என்று யோசிக்காதிங்க,உலகத்துக்கே உயிரூடுகின்ற காதலை மையமாக வைத்து ஒரு தொடர்கதையை ஆரம்பித்தேன்.அது ஆரம்பித்த நேரமோ தெரியவில்லை,ஆபீஸில் ஏகப்பட்ட வேலை.இன்று நீண்ட இடைவேளைக்குப் பின் ஆரம்பித்தால் ,எனக்கு முந்தி ஞாபகத்தில் வைத்திருந்த கதை மறந்துவிட்டது.கற்பனைக்கா பஞ்சம்,வேறு கோணத்தில் ஆரம்பித்து விட்டேன்.)
படிக்க ஆரம்பிப்பவர்கள் மீண்டும் முதல் பாகத்தில் இருந்து படிக்கவும்....
(பொறுமையாகப் படியுங்கள்,உங்கள் முதல் காதல் காட்சி சற்று லேசாகவே நிழலாடும்....அப்படி ஞாபகம் வராவிட்டால் நான் பொறுப்பில்லைங்கோ)
பாகம் 1
பாகம் 2
“பார்த்தாயா??சார்
போன் பண்ணியிருக்கார்,நல்ல காலம் ருவந்திக்கா போனத் தூக்கிட்டால்,இல்லாட்டி அந்தக்
கொடுப்புலிர கோவத்துக்கு ஆளாகி இருக்கணும்....”,என்று சத்துரி முடிப்பதுக்குள் “நீ பெரிய அழகி
என்று நினைப்போ!எல்லாருக்கும் பட்டப்பெயர் வைச்சுக் கலாச்சிட்டு இருக்கா”,என்று போலியாய் முறைக்க “ப்ளீஸ்டா,உண்ட காதல்
கருமாந்திரத்த சீக்கிரம் சொல்லித் தொலைடா,சார் மீண்டும் கால் பண்ணுவதற்குள் நான்
போகணும்”என்று
கைகூப்பினாள்.
