Saturday, January 5, 2013

வலியையும் வேதனையையும் உணராவிட்டாலும் பரவாயில்லை,அதை வைத்து ஆதாயம் தேடாதே


சனிக்கிழமை என்பதால் அரை  நாள் வேலையை முடித்துக்கொண்டு ,ஏதோ விடுதலை உணர்வை சற்றே உணர்ந்தவனாய் அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான் அவன்.
பிரதான பாதையை அண்மித்தவனுக்கு சற்றுத்தொலைவில் சுட்டெரிக்கும் வெயிலில் அழுக்காய் ஒரு பெண் தென்பட்டாள்.அவளை நோக்கி நடந்துகொண்டிருந்தவனுக்கு அவளது அழுகையுடன் கூடிய முனகல் தெளிவாய்க்கேட்டது.அந்த ஓசை மனசை சற்றே உலுக்க அவளை நோக்கி பார்வையைக் கூர்மைப்படுத்தினான்.



என்ன கொடுமை....ஒரு காலும்,ஒரு கையும் சூம்பி,நெருப்பில் பொசுக்கிய pvc பைப் போல காட்சி அளித்தது.முகமும் தீக்காயத்துடன் சற்றே விகாரமாய் காட்சியளித்தது.பார்த்த உடனே பதறச்செய்தது அவள் உருவம்.
உடனே அவன்  மனதுக்குள் இருந்த மிருகம் சொல்லியது,அவளை போட்டோ எடுத்து முகப்புப்புத்தகத்தில் பதிவிடும் படி,,,,அந்த ஓசை அவன் மனச்சாட்சிக்குக் கேட்டிருக்க வேண்டும்.அவளது வேதனையையும் துடிப்பையும் உணரத்தான்  முடியவில்லை,ஆனால் அவளது வலியைக்காட்சிப்படுத்தி லைக் பெற நினைப்பது எவ்வளவு ஒரு ஈனமான செயல் என்று அந்த மிருகத்தை காறி உமிழ்ந்தது.

மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிந்தவனாய் நாணயத்தாளை அவள் கையில் கொடுத்து விட்டு ஆறுதலாய் நாலு வார்த்தை பேசி விட்டு நகர்ந்தான்......
அப்பொழுது உணர்ந்தான் அவன் மனசாட்சி துள்ளி ஆர்பரிப்பதை....

7 comments:

Unknown said...

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கலாச்சாரம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

Unknown said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே..

விஜயகுமார் ஐங்கரன் said...

உண்மையில் நல்ல கருத்து நண்பா!

Unknown said...

@விஜயகுமார் ஐங்கரன்நன்றி ...

அருணா செல்வம் said...

நல்ல மனங்கள் என்றுமே
தவறு செய்வதில்லை..!

வணங்குகிறேன்.

Unknown said...

@அருணா செல்வம்
வருகைக்கு நன்றி...
உங்கள் பாராட்டுக்கு நான் தகுதியானவன் அல்ல.

சேக்காளி said...

சிந்தனையை தூண்டும் தலைப்"பூ"
வாழ்வில் அது பின்பற்றப் படும் போது எத்தனையெத்தனை பிரச்னைகள் தீரும்

Post a Comment