Sunday, July 4, 2010

அப்பா - மகன் உறவு...(தொடர்ச்சி)


முதலாம் திகதி வீதியில் அனாதையாக விட்டுச் சென்ற எனது பிள்ளையின் நினைவு இன்றுதான் எனக்கு வந்தது.அதாங்க நம்ம கதை.....

முன்னைய பதிவைப்படிக்க இதைக் கிளிக் பண்ணுங்கள்.
மெதுவாகப் பின்வாங்கிய மயூ ,அமைதியாக அனைவரது முகத்தையும் பார்த்தான்.அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.யாருமே எதுவுமே பேசவில்லை.ஒரு நீண்ட அமைதி.என்ன நினைத்தானோ ,காலில் செருப்பும் போடாமல் தலை தெறிக்க ஓடத்தொடங்கினான் மயூ.அனைவரும் அவனைக் கூப்பிட்டனர்.ஆனால் அவன் எதையும் கேட்காமல் ஓடிக்கொண்டு இருந்தான்.

உடனே அனைவரும் டேவிட்டை சூழ்ந்து “யாரா சொன்னாங்க அவன் அநாதை எண்டு?அவனுக்கு தானே அப்பா,அம்மா இருக்காங்களே!என்றனர் ஒருமித்து.டேவிட்டின் முகம் விகாரமாய் இருந்தது.தான் சொன்ன வார்த்தை அவனது மனதை அலைக்கழித்துக் கொண்டு இருந்தது.பின் மெதுவாக “என் அப்பாத்தான் என்றான்.உண்மையாடா !என்றான் தேவா.அப்பா ஒருதடவை சொன்னார்,ஆனால் உண்மையா ?,பொய்யா ? என்று எனக்குத் தெரியாடா “என்றான் பதட்டமாக.

வேர்த்துக் கொட்ட வீட்டுக்குள் நுழைந்த மயூ “அம்மா .... அப்பா... “ என்று ஓங்கிக் கத்தினான்.கிணற்றடியில் இருந்த அம்மாவும் ,அப்பொழுதுதான் ஆபிசால் வந்து உடை மாற்றிய அப்பாவும் பதறிக்கொண்டே ஓடிவந்தனர்.
“நான் அனாதையா ............... என்று கீர் என்று கத்தினான்.அவன் அம்மாவும் அப்பாவும் பேய் அறைந்த போல் நின்றனர்.சிறிது மௌனமாக இருந்த அவனது அப்பா “யாரு சொன்னது ?என்றார் கம்மிய தொண்டையால்.என்னோடு விளையாடும் டேவிட் தான்.நீங்க சொல்லுங்க உண்மையா ? என்றான் பதட்டமாக.அடியே லீலா உடுப்ப மாத்துடி,பனைமர திடலுக்கு போய்ட்டு வருவோம் என்றார் அமைதியாக.ஏன் நீங்களும் வந்து விளையாடவா ? எனக்கு இப்பவே உண்மையைச் சொல்லுங்களேன் என்று அழுது கொண்டே கெஞ்சினான் மயூ. 

“நான் உன்னிடம் மட்டும் சொன்னா உன் பசங்களுக்கு தெரியாது.நீ எங்க பையன் எண்டு, எல்லோருக்கும் சொல்றதாண்ட என் கடமை “ என்று அவனை மார்போடு அணைத்துக்கொண்டார்.பின் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.அந்த நேரத்தில் அம்மாவும் தயாராகி விட மூவரும் திடல் நோக்கி பயணமானார்கள்.

மயூ போன பின் விளையாடுவதற்கு யாருக்கும் மனம் வரவில்லை.டேவிட் சொன்னது சரியா ? தவறா ? என்று சூடாக விவாதித்துக் கொண்டிருந்த பசங்க, மூவரும் ஒன்றாக வருவதைப் பார்த்து எழுந்து நின்றனர்.டேவிட் மட்டும் பனைமரம் பின்னால் மெதுவாக பதுங்கினான்.
மூவரும் திடலுக்கு வர அனைவரும் வந்து சூழ்ந்து கொண்டனர்.அமைதியாக அனைவரையும் சுற்றிப் பார்த்த மயுவின் அப்பா “மயுவின் அப்பா ,அம்மா யார் எண்டு உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ன ?  ,நான்தான் அப்பா ,அவங்கதான் அம்மா.
“உங்க யாருடைய பெற்றார் ஆவது நாங்க எங்க பிள்ளையில காட்டுகின்ற அன்ப விட அதிகமாகக் காட்டினா அவன அநாதை எண்டு சொல்லுங்க.ஆனா மற்றவரைப் பார்த்து அநாதை எண்டு சொல்லும் போது சற்று யோசித்துப் பாருங்க ,நாளைக்கு உங்க பெற்றார் இறந்து போனா நீங்க ....
படைப்பில எல்லோரும் அனாதைகள்தான்,வளர்ப்பில் தான் அவங்க பெற்றோரைப் பார்க்கிறாங்க என்று அவர் சொல்ல அனைவரும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

“யாரப்பா என் பிள்ளைய அப்படிச் சொன்ன ?என்றாள் மயுவின் அம்மா.
பதுங்கிய டேவிட்டை யாரோ முன்னாள் தள்ள ,தலை குனிந்து அவன் நின்றான்.எப்ப நீங்க மற்றவர சாதி,சமயம்,ஊனம்,வறுமை, பிறப்பு குறித்துச் சொல்லுவீங்களோ நீங்க தோற்றுப் போய்டீங்க என்று அர்த்தம்.நேரடியா ஜெயிக்க முடியாத காரணத்தால நீங்க தூக்கிற ஆயுதம் தான் இது.உன்னை நீ திருத்திக் கொள் என்றார் சாந்தமாக.
அப்பாவோடும் அம்மாவோடும் திடலை விட்டுப் போய்க கொண்டிருந்த மயுவின் கையை யாரோ பிடித்தது போன்று இருந்தது.திருப்பிப் பார்க்க டேவிட்,கண்கலங்கியவாறே “என்ன மன்னிச்சிடுடா,வாவன் விளையாட என்றான்.
மயூ அப்பாவின் முகத்தைப் பார்க்க ,அவர் புன்னகையோடே தலையசைத்தார்.அவன் துடுப்பை நோக்கி ஓடினான்.


2 comments:

Unknown said...

வாவ் சுபரு மச்சி

movithan said...

@A.சிவசங்கர்
ஆகா ,நீண்ட நாளைக்கு பிறகு.

Post a Comment