Sunday, July 11, 2010

பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.

என்னங்கடா கதை எழுதிறேன் எண்டு ரீல் விட்டிட்டு இருந்தவனுக்கு என்னாச்சி?தொழில்நுட்பம் எல்லாம் கதைக்க வாரான் எண்டு யோசிக்கலாம்.எல்லாம் காலத்தின் கட்டாயம்.அத்தோட இது தாங்க நம்ம துறை.

என் நண்பன் நான் இருக்கும் போது பென் டிரைவ்ல அதைப் போட்டுத்தா, இதைப் போட்டுத்தா என்று கேட்க மாட்டான்.ஆனால் நான் இல்லாத சமயம் வந்து எனது தகவல்களை திருடிட்டு போய்விடுவான்.நண்பனாக இருந்தாலும் பின் மதிலால் பாய்ந்து வந்தால் திருடன் தானே?

(நடந்தத விடு,விசயத்துக்கு வா எண்டு நீங்க திட்டுறது கேட்குதுங்க!)
சரி,இதோட என் சுயபுராணத்தை நிறுத்திட்டு களத்தில குதிச்சிறேன்.



1. எமது கணனியில் USB போர்ட் ஐ disable செய்தல்.
start - run - regedit என்று டைப் பண்ணி என்டர் பண்ணுங்கள்.
"Registry Editor" window தோன்றும்.


HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\usbehci அல்லது
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet \Services\UsbStor
ஐ கிளிக் செய்யவும்.(இரண்டும் ஒரே செயற்பாடு)
அப்பொழுது வலது புறத்தில் DisplayName,ErrorControl,Group,etc என்றவாறு
மாற்றக்கூடிய தெரிவுகள் காணப்படும்.

இப்பொழுது நாம் ஒரு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
File - Export ஐ கிளிக் பண்ணி தேவையான இடத்தில் backup பண்ணிக் கொள்ளவும்.
ஒரு வேளை நாம் செய்தது தவறாயின் பழைய நிலைக்கு மீள இது உதவும்.

ஒவ்வொரு தடவையும் disable,enable செய்வதற்கு இவ்வாறு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை.அதற்கு நாம் செய்ய வேண்டியது 
Favorites - Add to Favorites ஐ கிளிக் பண்ணி usb disable என்று பெயரிடவும்.

இனி usb ஐ disable செய்வதற்கு வலப்பக்க pane இல் உள்ள start ஐ double click பண்ணி value data வை 4(Hexadecimal)ஆக மாற்றவும்.usb ஐ enable செய்வதற்கு value data வை 3(Hexadecimal)ஆக மாற்றவும்.

இவற்றை தனித்தனியாக File -Export பண்ணி பொருத்தமான பெயரில் (தானாகவே registry file ஆகச் சேமிக்கும்)சேமித்து வைத்தால் அதை கிளிக் பண்ணுவதன் மூலமே enable,disable செய்யலாம்.

மாற்றத்தைச் செய்தபின் refresh (F5)பண்ணுவதன் மூலம் செயல் படுத்தலாம்.



இப்படி பண்ண முடியலையா?கவலை வேண்டாம்
start - run - devmgmt.msc = >DEVICE MANAGER window தோன்றும்.

கிளிக் universal serialbus controllers,sub menus ஐ right click பண்ணி disable
பண்ணலாம்.







2. USB thumb drive ஐ read-only ஆக மாற்றல்.(WriteProtect)
(USB thumb drive இல் இருந்து தகவல்களை எடுக்கலாம்,ஆனால் கணனியில் இருக்கும் தகவல்களை அதில் பதிய முடியாது.அதாவது சிலரது blood group போல,வாங்கலாம் ஆனால் கொடுக்க முடியாது.)


HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\ Control\StorageDevicePolicies
செல்லவும்.

WriteProtect பண்ணுவதற்கு வலது பக்கத்தில் உள்ள WriteProtect ஐ double click பண்ணி value data வை 1(Hexadecimal)ஆக மாற்றவும்.

WriteProtect ஐ disable பண்ணுவதற்கு வலது பக்கத்தில் உள்ள WriteProtect ஐdouble click பண்ணி value data வை 0(Hexadecimal)ஆக மாற்றவும்.

மேலே குறிப்பிட்ட Export ,Add to Favorites போன்றவற்றை இங்கும்
பின்பற்றவும்.


(எதற்க்காக write protect ,usb disable பண்ணி வைத்திருக்கிறாய் என்று கேட்டால் ,பதில் சொல்வது உங்கள் திறமை.)



6 comments:

Mohamed Faaique said...

MY PORTABLE HARD DRIVE NOT WRKING PROPERLY.. IF I CONNECT IT IT HOLD WHOLE pc.. SOME TIME WORKING BUT NOT FULLY. I HV 5 PARTITIONS BUT WORKING ONLY 4 PARTITIONS. IMPORTANT ONE IS NOT WORKING.. WHT CAN I DO.
"faaique@yahoo.co.uk"

movithan said...

@Faaique Najeeb
i sent a mail to ur Id.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல தகவல் ........

movithan said...

@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)

கருத்திற்கு மிக்க நன்றி.

Unknown said...

like this, if there is any idea for disabling the writer machine in the pc, pls tell us something.

movithan said...

@alex

step:1
Start > Control Panel > Administrative Tools > Computer Management > Device Manager > DVD/CD-ROM drives >
Right click on each drives & enable or disable.

step:2
you can go to Device Manager
Right click on My computer > Properties > Hardware (Tab)> Device Manager

***** very easy process *****

Post a Comment