பரீட்சை நெருங்கிக்கொண்டிருப்பதால் பதிவிடுவதில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க நினைத்த என்னை,காலையில் படித்த செய்தி மிகவும் குழப்பிவிட்டது.
அதாங்க நம்ம பிரபல தொழில்நுட்பப் பதிவாளர் சூர்யாகண்ணன் அவர்களின் வலைப்பதிவு ஹக் (Hack) பண்ணப்பட்டிருக்கிறது. பாமரன் பக்கங்களில் பாலா சார் விவரமாக எழுதியுள்ளார்.ஏனோ அந்தத் தகவலை அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை.ஏன் எனில் ,அந்த வலைப்பதிவூடாக நான் பெற்ற பயன்கள் பல.அவரின் வளர்ச்சியைப் பார்த்து பிரமித்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு அநியாயம்.
வலைப்பதிவோடு சேர்த்து ஜிமெயில்,யாஹூ,ரிடிஃப் மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் அத்தனையும் களவாடப்பட்டிருக்கலாம் என்று பாலா சார் குறிப்பிட்டார்.நான் நினைகின்றேன் அவர் அனைத்துக்கும் ஒரே கடவுச்சொல் உபயோகித்து இருக்கலாம்.இந்தச் சம்பவம் நமக்கு கற்றுத்தரும் பாடம் தகவல் பாதுகாப்பு.
இத்தகைய நிலையிலும் மனதைத் தளரவிடாமல் backup பண்ணிவைத்ததைக் கொண்டு உடனடியாக புதிய வலைப்பதிவைத் தொடங்கிய சூர்யாகண்ணனின் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியாது.
அவருக்கு நாங்கள் குடுக்கும் ஆதரவுதான் அவரை மீண்டும் அதே ஈடுபாட்டோடு வலைப்பதிவில் முன்னோக்கி செல்ல துணைபுரியும்.
8 comments:
அட பாவிங்கள .........
பகிர்விற்கு நன்றி
ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே!
@Suryakannan
அது என் கடமை.
@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
நன்றி.
துவண்டு போகாமல், மீண்டும் கலக்க வந்து இருக்கும் சூர்யா சாருக்கு வாழ்த்துக்கள்!
அட பாவிங்கள ......... ...
:(((
@Chitra
கருத்திற்கு நன்றி.
@Karthick Chidambaram
வருகைக்கு நன்றி நண்பரே.
Post a Comment