1.அம்மா
இந்த வார்த்தையில் தான் எத்தனை தெய்வீகம்.கடவுள் இருக்கு என்கிறார்கள் யாரும் கண்டதில்லை,ஆனால் கண்ணுக்கு முன்னாள் உள்ள தெய்வத்தை யாரும் கண்டுப்பதே இல்லை.இது தான் உலகம்.
ஒரு பெண் யாருக்கும் கெட்டவளாக இருக்கலாம்,கண்டிப்பாக தன் பிள்ளைக்கு அப்படி இருக்கமாட்டாள்.அப்படி இருந்தால் அவள் பெண்ணும்மல்ல.
அன்னை தெரேசா யாரையும் பெற்றதில்லை.ஆனால் அவள் உலக்குகே தாய்.காரணம் பெறுவதால் மட்டும் வருவதல்ல தாய்மை,உடலையும் தாண்டி உணர்வாய் வருவதே தாய்மை.
ஆயிரம் வார்த்தை சொல்லலாம் தாயைப் பற்றி ,ஆனால் அவள் அன்புக்கு முன்னாள் அத்தனையும் புள்ளியாய் போவதே அதன் மகிமை.
அழகான பெண்ணுக்காய் அலைபவர் கோடி(நானும் தான்),ஆனால் அன்பான அம்மா கிடைத்ததை நினைத்தும் பார்ப்பதில்லையே...........
அவள் தந்த உடல்,
அவள் தந்த உயிர்,
சிலசமயம் அவளையே வதைக்குதே !
புரியவில்லை இந்தப் படைப்பின் கோலத்தை.
புரியாத படியால்தான் புரியாத ஒன்றைத்(கடவுள்)தேடுகிறான் மனிதன்.
இப்படியே எனது பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போவேன்.ஆனால் அது என் அம்மாவின் அன்பை வெளிப்படுத்தாது இந்த வறண்ட வார்த்தைகள்.
fb இல் நான் ரசித்த வரிகள்.காதலை மட்டும் உருக்கி உருக்கி ரசிப்பவர்கள் தாய்மையையும் ரசிக்க மாட்டார்களா? என்ற ஏக்கம்.
***
அவளை உதைத்த பொழுதில் கூட
செல்லமாய் என்னை
வருடின
அவள் விரல்கள்
வலியில் துடித்து கொண்டு கூறினாள்
...என் செல்லமே
பயப்படாதே!
உனக்கு வலிக்காமல்
உன்னை பெற்றேடுப்பேன்....................
***
ஒருவரை ஒருவர்
பார்க்காமல் காதலிக்க முடியுமா.......!
முடியும்.....!
என்னை பாராமல் அவள்
...என்னை காதலிக்கிறாள்.......!
என் தாய்...!
கருவறையில் நான்....!
***
எந்த மனிதனும் தேடி தேடி அலைந்தாலும்
கிடைக்காத ஒரே ஒரு சிம்மாசனம்
"அம்மாவின் கருவறை தான்
அதனால் அம்மாவை நேசி "
***
என் முதல் சிரிப்பையும்,
முதல் அழுகையையும்
ரசித்த முதல் ரசிகை
"அம்மா"
***
என்
வெற்றியை பாராட்டியது
பலர்
ஆனால்
என் தோல்வியையும்,முயற்ச்சியும்
...ரசித்தது
...பாராட்டியது
அடுத்த கட்டத்திற்கு
கொண்டுவந்தது
என் அம்மா மட்டுமே .............
குறிப்பு: நண்பன் ஷியாம் சுரேஷ் பாஸ்கரன் அவர்களின் வரிகளுக்கு நன்றி.
11 comments:
நடமாடும் தெய்வம் பற்றிய கவிதைகள் நெகிழ்ச்சி.
Enakku terintha oru kadavul Thaai mattum thaan...
@சைவகொத்துப்பரோட்டா
கருத்திற்கு ரொம்ப நன்றி.
@வெறும்பய
உங்கள் கருத்திற்கு நான் முழுமையாக உடன் படுகின்றேன்.
என்
வெற்றியை பாராட்டியது
பலர்
ஆனால்
என் தோல்வியையும்,முயற்ச்சியும்
...ரசித்தது
...பாராட்டியது
..... தனித்துவமிக்க பாசம்.... அருமையான கவிதைகள்!
@Chitra
நானும் மிகவும் ரசித்த வரிகள்.கருத்திற்கு நன்றி.
இதைவிட வேறு என்ன சொல்ல முடியும் ? அம்மா அம்மா தான்
@பத்மா
கருத்திற்கு ரொம்ப நன்றி.
kavidha kavidha........
but its nalla padhivu.. valthukal..
உள்ளத்தை தொட்டது ............
@stalinகருத்திக்கு நன்றி நண்பா.
Post a Comment