கல்லூரிப் படிப்பு முடிந்துவிட்டது.ஆனால் அதன் நினைவுகளோ அடிக்கடி கண்முன்னே வந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.கல்லூரி வாழ்க்கைக்கு பொலிவு கொடுப்பது கூடப்படிக்கும் நண்பர்கள் தான்.தமிழ் சினிமாவிற்கு எப்படி ஒரு வடிவேலோ,அதே போல எங்களுக்கு நண்பன் வெடிமுத்து.என்ன பெயரே மார்க்கமாக இருக்கா?,இதுதாங்க நாங்க அவனுக்கு வச்ச பட்டம்.இந்தப் பெயர் வந்த வரலாறே தனி.
அன்று தான் கல்லூரியின் முதல் நாள்.பெரிதாக பேச்சுவாக்கு இல்லை,காரணம் அன்றுதான் அறிமுகம். வாட்டசாட்டமான ஒருத்தர்.நடை வேறு செம கம்பீரம்,வந்தவர் பான் கீ மூன் (அதாங்க நம்ம ஐ.நா. சபைத்தலைவர்) அளவிற்கு தலையைக் குலுக்கி கைகுலுக்கி விட்டு எனக்கடுத்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.அப்பொழுது ஒரு ஊழியர் கையில் ஒரு புத்தகக்கட்டுடன் வந்தார்.”அனைவரும் ஒரு புத்தகம் வாங்க வேண்டும்.பணம் இல்லாதவர்கள் பெயரை இந்தக் கடதாசியில் எழுதி விட்டு நாளை தரமுடியும்”என்று கூறிவிட்டு முன்னாள் இருந்த மாணவனிடம் புத்தகங்களையும் கடதாசியையும் கொடுத்து விட்டு மற்றைய வகுப்பிற்கு சென்று விட்டான்.புத்தகத்தின் விலையோ மிகக்குறைவு.பெரும்பாலானவர்கள் பணத்தை கொடுத்து புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்.நாலைந்து மாணவர்கள் கடதாசியில் தங்கள் பெயரை எழுதிவிட்டு புத்தகத்தை எடுத்தனர்.எனக்கு பக்கத்தில் உள்ளவர் திரு.வெடிமுத்து என்று விரைவாக கிறுக்கி விட்டு ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டார்.எனக்கு அவர் பெயரைப் பார்த்தவுடன் ஒரே சிரிப்பு.இந்தக்காலத்தில் இப்படி ஒரு பெயரா?என்று ஆச்சரியத்துடன் அவரிடம் மெதுவாக உங்க பெயரு என்று கேட்க ரூபன் என்றார்.அப்ப இது என்று கடதாசியக் காட்ட நாக்கை மடித்துக் கொண்டு கண்ணைச் சிமிட்டினார்.அப்பொழுது அந்த ஊழியர் வந்து மீதியாக இருந்த புத்தகங்களையும் பணத்தையும் எண்ணி விட்டு “யாரப்பா பணம் கொடுக்காதவங்க” என்று கேட்க நாலு கை உயர்ந்தது.இல்லையே ஐந்து பேரு கொடுக்கலையே என்று கூறி கடதாசியைப் பார்த்து ?யாரப்பா திரு.வெடிமுத்து ?” என்றானே பார்க்கலாம் என்னா ஒரு சிரிப்பு................... வகுப்பே ஆடியது.
அன்றையில் இருந்து ரூபன் வெடிமுத்து ஆகிவிட்டார்.
அன்றையில் இருந்து அவன் ரகளைக்கு பஞ்சம் வைக்கவில்லை.
அன்று ஒரு நாள் ATM இல் பணம் எடுக்கப் போன வெடிமுத்து பெருமிதச் சிரிப்புடன் வந்து கொண்டிருந்தார்.என்ன சிரிப்பு பலமா இருக்கு எண்டு கேட்க,நான் பணத்தை எடுத்திட்டு கீழே பார்க்க ஒரு 50 ரூபா இருந்திச்சுடா,உடனே எடுத்து பாக்கெட்ல செருகிட்டன்.அப்பதான் நினைச்சன் வேற எவனாச்சும் மோசடி பண்ணிட்டுப் போய் அதில விழுந்தது தானோ இந்த ரூபா நோட்டு.அநியாயத்திற்கு நம்ம மூஞ்சி வேற வெப்காம்ல மாட்டி இருக்குமே.அதான் ஒரு காரியம் பண்ணன் ,நேரா வெப்காம் முன்னாடி நின்னு நான் 50 ரூபா மட்டும் தாங்க எடுத்தன் எண்டு சொல்லி அந்த 50 ரூபாய காட்டிட்டே வந்திட்டன் என்றான்.அன்றைல இருந்து எப்ப ATM க்கு போனாலும் வெடிமுத்துட முகம்தாங்க ஞாபகம் வருது.
ஒரு காலகட்டத்தில் வலைப்பதிவு எழுதுதல் எமது கல்லூரியில் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருந்தது.நண்பர்கள் பலரும் அதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுருந்தனர்.அன்று வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டுயிருந்தது.வெடிமுத்துவோ பேனா மூடியைக் கடித்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் ஏதோ எழுதிட்டு இருந்தான்.நான் எட்டிப் பார்க்க கையால் மறைத்துக் கொண்டு “இப்ப பார்த்தால் பதிவு படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்காது” என்றான்.முடியல்ல.............,என்று தலையில் அடித்துக்கொண்டு நான் திரும்பினேன்.பாடம் முடிய அவசரமாக வெளியே போய்விட்டான்.என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.அப்படி என்ன தான் எழுதி இருப்பான்.படித்துத்தான் பார்ப்போமே என்று திறந்தால்,
லண்டன் மாநகர வேலைப்பளுவுடனும் இடைவிடாத பட்டப்படிப்புச் சுமைக்கும் மத்தியிலும் வம்பன் உங்களுக்கு சங்கமிக்கின்றான்.....................................................
அடங் கொய்யால ,ரவுசு பண்ணறதுக்கும் ஒரு அளவு இல்லையா?தலை சுற்றுவது போல இருந்ததால் மூடி வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
இனி நேரம் கிடைக்கும் போது வெடிமுத்து வந்து பயம் காட்டுவார்..............
13 comments:
நின்னு நான் 50 ரூபா மட்டும் தாங்க எடுத்தன் எண்டு சொல்லி அந்த 50 ரூபாய காட்டிட்டே வந்திட்டன் என்றான்///
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா................. நைஸ் ஜோக்
உங்கள் பிளாக்கில் தமிழ் மனத்தில் ஒட்டு போடா முடியவில்லை ?
@மங்குனி அமைசர்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
தமிழ்மணத்தின் தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம்.
இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்
மச்சான் பார்ட்2 நான் தொடருகிறேன் .உன் சம்மதத்துடன்
வெடி சரவெடி என்னையா பேரு எல்லாம் போட்டு விட்டிங்க ...
@A.சிவசங்கர்
மச்சான்,நீ தொடர் பதிவு எழுதுவது சந்தோஷமே.
உன்னுடைய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
@sinhacity
மிக்க நன்றி.
எனது பதிவையும் இன்றைய நாளில் சிறந்த பதிவுகளில் ஒன்றாகத் தெரிவு செய்தமைக்கு.
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
@Chitra
கருத்திற்கு நன்றி.
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... nice
@Dhosai
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
i laughed a lot :)
@Subramanian Vallinayagam
நீண்ட நாட்களுக்குப்பிறகு வந்த பின்னூட்டம்.நன்றி.
Post a Comment